POST: 2023-06-10T09:49:21+05:30

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்
( கலைப் பண்பாட்டு இயக்ககம் )
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின்
நூற்றாண்டு விழாவை முன்னிட்டு
கலைஞர் நூறு
வரலாற்று நாடக விழா அழைப்பிதழ்

நாள் : 10.06.2023 நேரம் : மாலை 5 30 மணி
இடம்: ராஜா அண்ணாமலை, மன்றம், பாரிமுனை, சென்னை

அன்புடையீர்,
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்
( கலைப் பண்பாட்டு இயக்ககம் )

வரலாற்று நாடக விழா அழைப்பிதழ்

வணக்கம்.

நிகழும் திருவள்ளுவர் ஆண்டு 2054 வைகாசித் திங்கள் 27ஆம் நாள் (10.06.2023) சனிக்கிழமை – சென்னை, பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் மாலை 5.30 மணிக்கு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வழங்கும் வரலாற்று நாடக விழா நடைபெற உள்ளது.

மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி.கே.சேகர்பாபு அவர்கள் விழாப் பேருரையாற்றவும் ,முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் விழாச் சிறப்புரையாற்றவும் திரு. சே.ரா.காந்தி இ.ர.பா.ப. அவர்கள் இயக்குநர், கலை பண்பாட்டுத் துறை மருத்துவர் ஜெ.ராஜமூர்த்தி அவர்கள் இயக்குநர், மருத்துவம் (ம) ஊரக நலப்பணிகள் இயக்ககம் (தொ.அ.ஈ.)

முனைவர் ஒளவை அருள் அவர்கள் இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை
திரு. கே.பி.கே. செல்வராஜ் அவர்கள் தலைவர், முத்தமிழ்ச் சங்கம், திருப்பூர்
ஆகியோர் வாழ்த்துரை வழங்கவும் இசைந்துள்ளார்கள்.

தாங்கள் இவ்விழாவிற்கு வருகைதந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயா தாயன்பன்
உறுப்பினர் – செயலாளர்
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்

வாகை சந்திரசேகர்
தலைவர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்
தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியம்

தலைநகரில் ஒரு தரணி போற்றும் கலைப்படைப்பு

கடந்த 10.06.2023 ஞாயிறு அன்று மாலை 6 மணியளவில் சென்னை பாரிமுனை
ராஜா அண்ணாமலை மன்றத்தில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்
சென்னை ட்ராமாஸ் நிறுவனர் டாக்டர் ஏ.பி.வைத்தீஸ்வரன் குழுவினர் இணைந்து
A.S மணி அவர்கள் இயக்கத்தில், தஞ்சை RK கதை வசனத்தில்,தாஜ் நூர் இசையில் உருவான “மும்முடிச் சோழன்” என்ற வரலாற்று நாடகம் நடைபெற்றது.

உயிரோட்டமுள்ள கலைப்படைப்பு என்று சொன்னால் மிகையாகாது. பாரம்பரிய நாடகக் கலையுடன் இன்றைய டிஜிட்டல் தொழில் நுட்பத்தையும் இணைத்து சில காட்சிகளை முன்கூட்டியே ஒளிப்பதிவு செய்து காட்சிப்படுத்திய விதம் சிறப்பு.

கதாநாயகன் இராஜராஜ சோழன், இராசேந்திர சோழன்,படைத்தளபதிகள், எதிர்மறை கதாபாத்திரங்கள் ரவிதாசன், சோமன்,மகளிர் கலைஞர்கள், அமைச்சர்,ஒற்றன் உள்ளிட்ட அனைத்து கதா பாத்திரங்களும் சரித்திர கதாபாத்திரங்களை நம் கண் முன் நிறுத்தினர்.

அமைச்சராக நடித்தவர் நகைச்சுவையில் நம்மை மகிழ்வித்தார்.

அனைவரின் ஒப்பனையும் நன்றாக இருந்தது.

காண்பவர்கள் களைப்படையா வண்ணம் காட்சிகளை வேகமாக நகர்த்திய விதம் அருமை!

அரங்க நிர்வாகிகளுக்கு ஒரு சிறப்பு பாராட்டுகள்!

சிந்திக்க வைக்கும் வசனங்கள்… சிறப்பான இயக்கம்…
பெரும் பொருட்செலவில் நடத்தப்பட்ட இந்த கலைக்காவியம் தமிழகத்தில் உள்ள இன்னும் பல ஊர்களுக்கும் சென்று சேர வேண்டும் என்பது என் அவா!

இது போன்ற சரித்திர நாடகங்கள் நாடகக் கலைக்கு புத்துயிர் ஊட்டும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை…

அனைவருக்கும் பாராட்டுக்கள். அன்புடன்,

இயக்குநர்.நடிகர்.

பா.ஜோ.லால் மோகன், தலைவர், திருச்சி திரைக் கலைஞர்கள் மேடை.🙏🌹

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *