POST: 2023-08-31T09:56:10+05:30

எங்கும் தமிழ் ! எதிலும் தமிழ் !!

கலைஞர் 100
1924-2023

நூல் – அஞ்சல்

தமிழ் வளர்ச்சித் துறை

இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை தொடக்க விழா
2023 2024

திருவள்ளுவராண்டு 2054,
ஆவணி – 13 நாள்:
30.08.2023 புதன் கிழமை
இடம் : எத்திராஜ் மகளிர் கல்லூரி வளாகம், சென்னை.

பெருந்தகையீர் !
வணக்கம்.

தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக
தகைமையுடன் நடத்தும் இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை !

வெல்லும் சொற்கொண்ட வெளிச்ச விரிவுரை – இது
வித்தகரை உருவாக்கும் வெற்றிப் பாசறை !

மாணவர்களுக்கும் இலக்கியத்திற்கும் நடக்கும்
மகரந்தச் சேர்க்கை !

செம்மொழித் தமிழ் செதுக்கி வைத்திருக்கும்
சிற்பங்களோடு காற்றில் மிதந்து வரும் கருத்து மேகம் !

மறுபடி மறுபடி மயங்க வைக்கும் கவிதைகளை
மனதிற்குள் விரித்துவிட்டு போகும் மாயக் கம்பளம் !

பூவில் விளையாடும் பொதிகைத் தென்றலாய்
நாவில் தமிழாடும் நாவலர் பெருமக்கள் இதழ் வழியே
கட்டும் இலக்கியப் பந்தல் !

அறிஞர் பெருமக்கள், அன்னையாய் அணைத்து வெண்ணையாய் நனைத்த
தமிழை எண்ணையாய் ஊற்றி சுடராய் ஏற்றும் சூரிய தீபம் !

சிவிகையில் வைத்து சிறப்பு செய்ய வேண்டிய கவிஞர் என்று
முத்தமிழறிஞர் கலைஞரால் உச்சி முகரப்பட்ட
கவிஞர் நெல்லை ஜெயந்தாவின் ஒருங்கிணைப்பில் நடைபெறும்
பைந்தமிழ்ப் பாசறைத் திருவிழா !

படைகொண்டு பைந்தமிழ் வளர்த்த
முத்தமிழறிஞர் கலைஞர் வழி நடைகொண்டு நிற்கும்

மாண்புமிகு முதலமைச்சர் விழிவழி நடக்கும்
மொழிவழிப் பெருவிழா !

– ஒளவை அருள்,

இயக்குநர்,

தமிழ் வளர்ச்சித் துறை.

இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை

தொடக்க விழா – நேரம்: 10.30-11.30

தமிழ்த்தாய் வாழ்த்து

வரவேற்புரை

ஒளவை அருள்,
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித் துறை

நோக்கவுரை

கவிஞர் நெல்லை ஜெயந்தா
ஒருங்கிணைப்பு அலுவலர்

வாழ்த்துரை

திருமதி செ.உமாகௌரி
முதல்வர்,
எத்திராஜ் மகளிர் கல்லூரி

முனைவர் கோ. கீதா
இயக்குநர்,
கல்லூரிக் கல்வி இயக்ககம்.

விழாப்பேருரை

திரு. மு. பெ. சாமிநாதன் அவர்கள்.
மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்

நன்றியுரை

முனைவர் நிர்மலா
தமிழ்த்துறைத்தலைவர்
எத்திராஜ் மகளிர் கல்லூரி

பாசறை நிகழ்ச்சிகள்

11.40 – 12.20

“கண்களைத் திறந்த கதை உலகம்”

திரு.எம்.எஸ். பெருமாள்,
கதாசிரியர் மற்றும் மேனாள் இயக்குநர்,
சென்னை தொலைக்காட்சி.

12.20 – 1.00
“செம்மொழித் தமிழின் சிறப்பு”

திருமதி பாரதி பாஸ்கர்,
பட்டிமன்றப் பேச்சாளர்.

01.00-01.40
உணவு இடைவேளை

01.40-02.20

“அன்னைத் தமிழ் வளர்த்த அறிஞர்களும், தலைவர்களும்”

முனைவர் சொற்கோ கருணாநிதி,
பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, நந்தனம்,

02.20-03.00 :

“மரபுக் கவிதைகளின் சிந்தனையும் சிறப்பும்”
திரு. திருப்பூர் கிருஷ்ணன்,
ஆசிரியர், அமுதசுரபி மாத இதழ்

03.00-03.40

*புதுக்கவிதையின் தோற்றமும் ஏற்றமும்”
திரு. லிங்குசாமி,
திரைப்பட இயக்குநர்,

03.40-04.00 – :
தேநீர் இடைவேளை

04.00-04.40

“நாடகத்திலும் திரையிலும் நடந்த தமிழ்”

முனைவர் இதயகீதம் அ. இராமானுஜம்,
பொதுச் செயலாளர்,
அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்.

4.40 – 5.00: சான்றிதழ் வழங்குதல்

நாட்டுப்பண்

முரசொலி – பக்கம் எண் : 2

தினமணி – பக்கம் எண் : 2

தினசெய்தி – பக்கம் எண் : 3

தினபூமி – பக்கம் எண் : 8

தினகரன் – பக்கம் எண் : 2

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *