POST: 2023-09-15T07:40:10+05:30

பேரறிஞர் அண்ணா அவர்களின் 115வது பிறந்தநாளை முன்னிட்டு(15.9.23)
பத்மஸ்ரீ ஔவை நடராசன் நினைந்து சொன்ன தொடர்கள்…….

கணமும் திருத்திய கொள்கைக் காவலர்!
==========================================

தன் வாய்ச் சொற்களாலும் எழுத்துக்களாலும் தமிழகத்தின் சிந்தனை நலத்தையே மாற்றிய பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை எண்ணி நாம் பெருமிதம் அடைகிறோம்.

அண்ணா கண்ட கனவுகள் பாதியும் முடியவில்லை. மீதியும் முடிந்தால்தான் தமிழ் மேதினி உயரும்.

எந்தவொரு ஓசையும் எவர் காதிலும் விழாமல் ஆட்சிக்கு வந்ததும் தமிழக அரசு என்றும், வாய்மையே வெல்லும் என்றும் பொறித்த (குறித்த) சங்க இலக்கியச் சார்பும் திருக்குறள் சீர்மையும் அவர் வாய் திறந்தால் வந்துவிழுந்த உண்மை ஒளிவீசும் சொற்களாக ஒவ்வொரு கணமும் தமிழர் வாழ்வைத் திருத்த முற்பட்டன.

தொழும்போதும் அறிவையே தொழுதார். விழும்போதும் விதையைப்போல் விழுந்தார். எழும்போதோ இளங்கதிர்போல எழுந்தார். ஏன், அழும்போதும் கார்மழைபோல் அழுதார் என்ற கவிக்கோவின் மாணிக்க வரிகளைவிட அண்ணாவுக்கு காணிக்கையாக எவற்றைக்கூற முடியும்?.

வாய்ச்சொற்களாலும் மை எழுத்துக்களாலும் வெல்வோம் என்று காட்டிய வகையிலேயே வாய்மையே வெல்லும் என்று பொறித்ததும் நீயே!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *