POST: 2023-09-26T09:42:59+05:30

தினத்தந்தி – 24 9 2023
ஞாயிற்றுக்கிழமை
பக்கம் எண் : 13

தமிழ் நிலம் உள்ளவரை சிவந்தி ஆதித்தனாரின் ( 24 9 1936 ) புகழ் நிலைத்திருக்கும்

தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அவ்வை அருள் புகழாரம் !

சென்னை, செப்.24 –

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 88 ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அவ்வை அருள் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நாட்டு மக்களின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் எப்போதும் இடம் பிடித்து தலைமையான நிலைமை பெற்றிருப்பது ‘ தினத்தந்தி ‘ நாளிதழாகும்.

எளியோர் தமிழ்ப் பயில ஏணியாக விளங்கும் ஈடற்ற பெருமை கொண்டது ‘ தினத்தந்தி ‘.

எழுத்துக்கூட்டி படிக்க முயலும் தமிழ் மக்களுக்கேற்ற எளிய நடையில் உலகத்தின் செய்திகளை ஊட்ட முடியும் என்ற நிலையை நிறுவியதோடு, இன்று கோடி மக்களின் நெஞ்சத்தை கொள்ளை கொண்டிருக்கும் ஒப்பற்ற தாளாக ‘ தினத்தந்தி ’ திகழ்கிறது.

தமிழர் தலைவர் ‘ தினத்தந்தி ‘யை வளர்த்தார்.

செம்மனத்துச் செம்மல் சிவந்தி ஆதித்தனார் செழிக்க வைத்தார்.

அருமை இளவல் சி.பாலசுப்பிரமணியன் இப்போது செழிப்புக்கு மேலும் சிறப்பும் மெருகுமூட்டி நாளும் ‘
தினத்தந்தி ‘யில் மாற்றங்களைக் கொழிக்க வைத்திருக்கிறார்.

அண்ணல் சிவந்தியை தொடர்ந்து சிகரத்தைத் தொடும் அன்பு இளவல் சி.பாலசுப்பிரமணியன், உறவு வளர்ப்பதில் முதன்மை பெற்றிருக்கிறார்.

அண்ணலின் புகழ் தமிழ் நிலம் உள்ள வரை நிலைத்திருக்கும்.

சாதனைச் செம்மல் சிவந்தி ஆதித்தனார் புகழ் நாளும் ஓங்குக.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *