சிறந்த தமிழ் உச்சரிப்பு விருது
முரசொலி – பக்கம் எண் : 6 , 12
தினசெய்தி – பக்கம் எண் : 9
தினச்சுடர் – பக்கம் எண் : 8
தினமலர் – பக்கம் எண் : 6
தினபூமி – பக்கம் எண் : 8
மாலைமுரசு – பக்கம் எண் : 2
மக்கள் குரல்-பக்கம் எண். 4
DECCAN CHRONICLE – PAGE NUMBER : 2
THE HINDU – PAGE NUMBER : 2
நாள் : 1 11 2023
( 31.10.2023) சென்னை, தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு. பெ. சாமிநாதன் அவர்கள்,
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், சிறந்த தமிழ் உச்சரிப்புக்கான விருதுகளை, காட்சி ஊடகங்களில் பணிபுரியும் செய்தி வாசிப்பாளர்கள், நேர்காணல் செய்பவர்கள் மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் மரு.இரா.செல்வராஜ், இ.ஆ.ப.,
தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந.அருள்
ஆகியோர்
உள்ளனர்.
செய்தி வெளியீடு எண் : 2172
செய்தி வெளியீடு
நாள் : 31.10.2023
தமிழ் வளர்ச்சித் துறையின் 2022 – 2023 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின்போது, மாண்புமிகு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்களால் சட்டமன்றப் பேரவையில் 19.04.2022 ஆம் நாளன்று பின்வருமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
” ஊடகங்களில் தமிழ்ச் செய்திகளைத் தவறில்லாமலும், வாசிப்பாளர்கள்,அழகாகவும், சரியாகவும் உச்சரிக்கும் செய்தி நேர்காணல் செய்பவர்கள் மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுக்கு நான்கு பேரைத் தெரிவு செய்து அவர்களை பாராட்டி ஒவ்வொருவருக்கும் ரூ.25,000/- பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.
மேலும் அனைத்து காட்சி ஊடகங்களுக்கும் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் வாயிலாக தமிழ் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பெற்றது.
அவ்வறிவிப்பிற்கிணங்க, 10.10.2023 ஆம் நாளன்று செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மூலம் தமிழ் ஒலிப்பு சிறப்பு வகுப்புகள் கலைவாணர் அரங்கத்தில் மிகச்சிறப்பாக நடத்தப்பெற்றது.
2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் உச்சரிப்புக்கான விருதிற்கென பெறப்பட்ட 88 வீடியோ நறுக்குகள் தேர்வுக் குழுவினரால் கேட்கப்பட்டு அவற்றில் சிறந்த தமிழ் உச்சரிப்பாளர் விருதுக்குத் தகுதியானவர்களாக
திருமதி. திவ்யா நாதன்,
திருமதி. சுஜாதா பாபு,
திருமதி. பொற்கொடி மற்றும்
திரு. கா. செல்வக்குமார் ஆகிய நான்கு ஊடகவியலாளர்கள் தெரிவு செய்யப் பெற்றுள்ளனர்.
சென்னை, தலைமைச்செயலகத்தில் இன்று ( 31.10.2023 ) மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ. சாமிநாதன் அவர்களால் திருமதி. திவ்யா நாதன், திருமதி. சுஜாதா பாபு, திருமதி. பொற்கொடி மற்றும் திரு. கா. செல்வக்குமார் ஆகிய நால்வருக்கும் 2022ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ்
உச்சரிப்பு விருது வழங்கப்பட்டது.
விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.25,000/-க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கிச் சிறப்பிக்கப்பெற்றன.
இந் நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் மருத்துவர் இரா. செல்வராஜ், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந. அருள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
வெளியீடு:
இயக்குநர்,
செய்தி மக்கள் தொடர்புத்துறை,
சென்னை – 600 009

Add a Comment