தமிழ் வளர்ச்சித் துறை
பாராட்டும் ஊக்கமும்
செய்தி வெளியீடு
மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள்
சென்னை, தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை (01.12.2023)
தமிழ்நாடு அரசுப் பணியில் தொடர்ச்சியாக 25 ஆண்டுகள் பணிபுரிந்தமைக்கு தமிழ் வளர்ச்சித் துறை உதவியாளர்கள் திரு. க. ஜெகநாதன் மற்றும் திரு. ச. இரமேசு ஆகியோரை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ் வளர்ச்சித் துறையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வு மூலம் வெற்றி பெற்று புதியதாக நியமனம் செய்யப்பட்ட
சுருக்கெழுத்து
தட்டச்சர்
செல்வி
ம.க.ஹர்சினி(சென்னை),
தட்டச்சர்கள்
திருமதி சு. உமாமகேஸ்வரி (தருமபுரி),
திருமதி ம. மஞ்சுளா (தேனி), செல்வி மு.முத்துச்செல்வி (நீலகிரி),
செல்வி உ. . பவித்ரா (விழுப்புரம்), திரு.சி. வினுதர்மா(சேலம்), செல்வி பொ. விசாலாட்சி(கோயம்புத்தூர்) ஆகியோருக்கு ஊக்கவுரை வழங்கி அரசுப் பணியை செம்மாந்த முறையில் மேற்கொள்ளுமாறு வாழ்த்துத் தெரிவித்தார்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் மரு. இரா. செல்வராஜ், இ.ஆ.ப., அவர்கள்,
செய்தித் துறை இயக்குநர் திரு இரா மோகன் அவர்கள்
தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந. அருள் அவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
ஒளிப்படச்செய்தியாக
மாலை முரசு நாளிதழிலும் (1.12.23) தினமணி நாளிதழிலும் (2.12.23) வெளி வந்துதுறை

Add a Comment