சென்னை, அண்ணா நகர்
அறிஞர் ஒளவை நடராசனுக்கு
ஓராண்டு நினைவஞ்சலி
அவர் புலமையின்
பெருமை சொன்னேன்;
நீங்காத நினைவு சொன்னேன்;
நகைச்சுவையின்
நலம் பாராட்டினேன்
அவரது உடல் சுமந்தது
என் தோள்கள் பெற்ற
பெரும்பேறு என்றேன்
ஒளவையின்
உதிராத புகழ்மீது
உதிரிப்பூக்கள் தூவினேன்
ஒளிப்படத்தில் உடன்
வி.ஜி.சந்தோஷம்
அவ்வையின் திருச்செல்வர்கள்
டாக்டர் கண்ணன், டாக்டர் அருள்,
டாக்டர் பரதன் –
கவிப்பேரரசு வைரமுத்து.
8.12.23
தமிழ்மாமணி ஔவை நடராசன்
ஒளி 24.04.1935
நிழல் 21.11.2022
முதலாண்டு நினைவேந்தல்
மணியறியேன்; மந்திரம்
ஒன்றறியேன்; எந்தைபிரான் மணிமன்றம்… எய்தஅறி வேனோ, இருந்த திசை சொலஅறியேன்…
பெருந்தகையீர்,
வணக்கம்.
உடுக்கணக்கு மரபின்படி, எங்கள் அருமைத் தந்தையார் ஒளவை நடராசன் (21.11.2022) மறைந்து ஓராண்டு நிறைவுபெற்று, எதிர்வரும் கார்த்திகைத் திங்கள் இருபத்திரண்டாம் நாள் வெள்ளிக்கிழமையன்று (08.12.2023) காலை 9.00-10.30 மணிக்குத் ‘தாரகை இல்லத்தில்’ (ஜெ 82 இரண்டாம் முதன்மைச் சாலை, அண்ணா நகர் கிழக்கு, சென்னை-600 102) மரபுளி வழாது தமிழ் வேள்வி சைவத் தமிழ்மணி ஒளியகம் ந. ஒளியரசு குழுவினர் வாயிலாக நடைபெறவுள்ள நினைவேந்தலுக்கு வருகை புரியுமாறு நெஞ்சார அழைக்கிறோம்.
கண்ணன், அருள், பரதன் குடும்பத்தினர்

Add a Comment