தினகரன்
சென்னை,
நவம்பர் 24, 2023
தமிழ் வளர்ச்சித் துறையின் முதலமைச்சர் கணினித் தமிழ் விருது
தமிழ் வளர்ச்சித் துறை மூலம வழங்கப்படும் முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு வரும் டிசம்பர் 31க்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, உலகமெலாம் கணினிவழித் தமிழ் மொழி பரவச்செய்யும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக முதலமைச்சர் கணினித் தமிழ் விருது என்ற பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விருது பெறுபவருக்கு விருதுத் தொகையாக ரூபாய் 2 இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படுகிறது.
இதுவரை
மென்தமிழ் (தமிழ்ச் சொல்லாளர்) (2013).
விருபாவளர் தமிழ் நிகண்டு (2014), விவசாயம் (2015), www.tamilpulavar.org (2016), பிரிபொறி (2017).
தமிழ் உரைவழி பேச்சு உருவாக்கி (2018), ‘
வாணி’ தமிழ்ப் பிழைத் திருத்தம் (2019), ‘
செவ்வியல் இலக்கண – இலக்கியம்’ (2020),
வட்டெழுத்து (2021), ‘
தமிழ்ப்பேச்சு’ மேம்படுத்திய பதிப்பு (2022)
உள்ளிட்ட மென்பொருள்களுக்கு முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் 2023 ஆம் ஆண்டுக்குரிய முதலமைச்சர் கணினித் தமி விருதுக்கு தனியார் மற்றும் நிறுவனத்திடமிருந்து, தமிழ வளர்ச்சிக்கான மென்பொருள்கள் / செயலிகள் வரவேற்கப்படுகின்றன.
விருதுக்கு அனுப்பப்படவுள்ள மென்பொருள்கள் 2020, 2021. 2022ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப் பட்டதாக இருத்தல் வேண்டும்.
இவ்விருதுக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளைத் தமிழ் வளர்ச்சித் துறையின் வலைதளத்திலோ
(www. tamilvalarchithurai.tn.gov.in) அல்லது http:// awards.tn.gov.in என்ற இணைய தளத்தின் வழியாகவோ இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இதுதவிர, தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை 600 008 என்ற முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவோ 31.12.2023 ஆம் நாளுக்குள் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டுகின்றோம்.
கூடுதல் விவரமறிய விரும்புவோர் 044 28190412, 044 – 28190413 ஆகிய தொலைபேசி எண்களை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.
முரசொலி
நவம்பர் 24, 2023
பக்கம் 15
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் முதலமைச்சர் கணினித் தமிழ் விருது!
முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பிப்பது குறித்து தமிழ் வளர்ச்சித்துறை அறிவிப்பு வருமாறு:-
பன்னூறு ஆண்டுகளாக வற்றாத படைப்புகளைக் கொண்டு, சீரிளமையோடு இயங்கிவரும் தமிழுக்கும், தமிழ்மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்குத் தொண்டாற்றிடும் தமிழ்த்தாயின் திருத்தொண்டர்களுக்குத் தமிழால் விளங்கிடும் தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளையும் சிறப்புகளையும் அளித்து, அவர்தம் தொண்டுக்கும் தமிழுக்கும் பெருமை சேர்த்து வருகின்றது நீங்கள் அறிந்த ஒன்றே.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, உலகமெலாம் கணினிவழித் தமிழ் மொழி பரவச்செய்யும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக முதலமைச்சர் கணினித் தமிழ் விருது என்ற பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறுபவருக்கு விருதுத் தொகையாக ரூபாய் 2 இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படுகிறது.
இதுவரை மென்தமிழ் (தமிழ்ச் சொல்லாளர்) (2013). விருபாவளர் தமிழ் நிகண்டு (2014), விவசாயம் (2015), www.tamilpulavar.org (2016), பிரிபொறி (2017). தமிழ் உரைவழி பேச்சு உருவாக்கி (2018), ‘வாணி’ தமிழ்ப் பிழைத் திருத்தம் (2019), ‘செவ்வியல் இலக்கண – இலக்கியம்’ (2020), வட்டெழுத்து (2021), ‘தமிழ்ப்பேச்சு’ மேம்படுத்திய பதிப்பு (2022) உள்ளிட்ட மென்பொருள்களுக்கு முதலமைச்சர் கணினித் தமிழ் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
அவ்வகையில் 2023 ஆம் ஆண்டுக்குரிய முதலமைச்சர் கணினித் தமி விருதுக்கு தனியார் மற்றும் நிறுவனத்திடமிருந்து, தமிழ வளர்ச்சிக்கான மென்பொருள்கள் / செயலிகள் வரவேற்கப்படுகின்றன. விருதுக்கு அனுப்பப்படவுள்ள மென்பொருள்கள் 2020, 2021. 2022ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப் பட்டதாக இருத்தல் வேண்டும்.
இவ்விருதுக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளைத் தமிழ் வளர்ச்சித் துறையின் வலைதளத்திலோ
(www. tamilvalarchithurai.tn.gov.in) அல்லது http:// awards.tn.gov.in என்ற இணைய தளத்தின் வழியாகவோ இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இதுதவிர, தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை 600 008 என்ற முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவோ 31.12.2023 ஆம் நாளுக்குள் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டுகின்றோம். தக்க ஆவணங்களோடு விண்ணப்பங்கள் அமைதல் விரும்பத்தக்கது.
மேற்கண்ட இணையதளத்திலேயே போதுமான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.
கூடுதல் விவரமறிய விரும்புவோர் 044 28190412, 044 – 28190413 ஆகிய தொலைபேசி எண்களை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம். உரிய நாளுக்குள் (31.12.2023) பெறப்படும் விண்ணப்பங்களே ஏற்றுக் கொள்ளப்படும் என்பதை நினைவிற்கொள்ள கனிவுடன் வேண்டுகின்றோம்.
இவ்வாறு தமிழ் வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது.
இந்து தமிழ் திசை
சென்னை,
நவம்பர் 24, 2023
முதல்வரின் கணினித் தமிழ் விருதுக்கு
தனிநபர், நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்
தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.
சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக முதலமைச்சர் கணினித் தமிழ் விருது என்ற பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது.
விருதுத் தொகையாக ரூபாய் 2 இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படுகிறது.
அவ்வகையில் 2023 ஆம் ஆண்டுக்குரிய முதலமைச்சர் கணினித் தமி விருதுக்கு தனியார் மற்றும் நிறுவனத்திடமிருந்து, தமிழ வளர்ச்சிக்கான மென்பொருள்கள் செயலிகள் வரவேற்கப்படுகின்றன.
விருதுக்கு அனுப்பப்படவுள்ள மென்பொருள்கள் 2020, 2021. 2022ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப் பட்டதாக இருத்தல் வேண்டும்.
இவ்விருதுக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளைத் தமிழ் வளர்ச்சித் துறையின் வலைதளத்திலோ
(www. tamilvalarchithurai.tn.gov.in) அல்லது http:// awards.tn.gov.in என்ற இணைய தளத்தின் வழியாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்தை தக்க ஆவணங்களுடன், தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை-8 என்ற முகவரிக்கு அஞ்சல் வாயிலாக டிசம்பர் 31 க்குள் அனுப்பவேண்டும்.
கூடுதல் விவரமறிய விரும்புவோர் 044 28190412, 044 – 28190413 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Add a Comment