POST: 2023-12-15T10:58:26+05:30

தமிழ் வளர்ச்சித் துறை
சேலம் மாவட்டம்.
ஆட்சிமொழிப் பயிலரங்கம்
கருத்தரங்கம் 2023-2024

அழைப்பிதழ்

திருவள்ளுவராண்டு 2054, கார்த்திகை 27, 28
13-12-2023, 14-12-2023 ( புதன், வியாழன் )
இடம்: சோனா தொழில்நுட்பக் கல்லூரி, சேலம்.

பெருந்தகையீர், வணக்கம்
அங்கமெல்லாம் தமிழ் சுமந்த அறிஞருக்கு
சேலம் மாநகரில் நடக்கும் வண்ணமிகுத் திருவிழா!

மைல் கணக்கில் நடந்து வரும் நைல் நதி போல்
வருடக் கணக்கைக் கடந்து வரும் வன்மொழியாம்
செம்மொழித் தமிழை உயர்த்திப் பிடிக்கும் உரையரங்கத் தனி விழா!

பனி உறைந்த பூவாக, கனி மறைந்த விதையாக
தமிழ் நிறைந்த இதயங்களைத் தட்டி எழுப்பும் தமிழ் ஒலி விழா!

வண்ணப் பறவைகளாய், வந்துசேரும் அலுவலர்களுக்கு
எண்ணக் கனவுகளாய், அன்னைத் தமிழை நிறைக்கும்
ஆட்சிமொழிப் பெருவிழா!

ஏரோடும் மண்ணில் வேரோடும் விழுதோடும் பிறந்து
தமிழைச் சீரோடும் சிறப்போடும் வளர்த்து மகிழ்ந்த
முத்தமிழறிஞர் கலைஞரின் முதல் நூற்றாண்டு எழில் விழா!

தமிழ்நாட்டிலுள்ள நூறு கல்லூரிகளில்
தழைக்கவுள்ள ஆட்சிமொழிக் கருத்தரங்கின் அணி விழா!
கண்டு, கேட்டு, உண்டுயிர்த்து, உற்றறிந்து இருநாள்கள் முழுவதும் ஆட்சித் தமிழை உணர்வோடு கேட்க வாருங்கள்!

முனைவர் ஔவை ந.அருள்
இயக்குநர்,
தமிழ்வளர்ச்சித்துறை,
சென்னை

தமிழ் வளர்ச்சித் துறை
சேலம் மாவட்டம்.
ஆட்சிமொழிப் பயிலரங்கம் 2023-2024

நிகழ்ச்சி நிரல்

திருவள்ளுவராண்டு 2054, கார்த்திகை – 27
முதல் நாள்: 13-12-2023 புதன்கிழமை

முற்பகல் 10.00: வருகைப் பதிவு
முற்பகல் 10.15: தமிழ்த்தாய் வாழ்த்து

வரவேற்புரை:
திருமதி க.பவானி
மண்டிலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர்,
சேலம் மாவட்டம்.

முற்பகல் 10.30-11.00 :
தலைமையேற்று
தொடக்கவுரை:
மரு. பெ.மேனகா எம்.வி.எஸ்.சி
மாவட்ட வருவாய் அலுவலர்
சேலம் மாவட்டம்.

முற்பகல் 11.00-11.30 : தேநீர் இடைவேளை

முற்பகல் 11.30-12.30 :
முத்தமிழறிஞர் கலைஞர் நிகழ்த்திய செம்மொழிச் செயற்பாடுகள்:
முனைவர் மு.இராசேந்திரன்
மண்டிலத் தமிழ்வளர்ச்சித் துணை இயக்குநர் (பணி நிறைவு)
சேலம் மாவட்டம்.

முற்பகல் 12.30-01.30 :
ஆட்சிமொழி வரலாறு / சட்டம் அரசாணைகள்:
திருமதி க.பவானி
மண்டிலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர்,
சேலம் மாவட்டம்.

பிற்பகல் 01.30 – 02.15 : உணவு இடைவேளை

02.30 – 03.30:
அலுவலகக் குறிப்புகள் வரைவுகள்,
செயல்முறை ஆணைகள்:
திரு. கி.பி.புகழேந்தி எம்.ஏ., பி.எட்.,
வட்டாட்சியர் (பணி நிறைவு)
பயிற்றுநர், அண்ணா நிருவாகப் பணியாளர் கல்லூரி
சேலம் மாவட்டம்.

பிற்பகல் 03.30 – 03.45: தேநீர் இடைவேளை

பிற்பகல் 03.45 – 05.00:
ஆட்சிமொழி ஆய்வும்,
குறைகளைவு,
நடவடிக்கைகளும்:
திருமதி வே.ஜோதி
மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர்
சேலம் மாவட்டம்.

தமிழ் வளர்ச்சித் துறை
சேலம் மாவட்டம்.
ஆட்சிமொழிப் பயிலரங்கம் 2023-2024

நிகழ்ச்சி நிரல்

திருவள்ளுவராண்டு 2054, கார்த்திகை – 28
இரண்டாம் நாள்: 14-12-2023 வியாழக்கிழமை

முற்பகல் 10.00-10.30 : வருகைப் பதிவு

முற்பகல் 10.30-11.45 :
முத்தமிழறிஞர் கலைஞரின்
சமுதாயச் சிந்தனைகள்:
முனைவர் மு.இராசேந்திரன்
மண்டிலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் (பணி நிறைவு)
சேலம் மாவட்டம்.

முற்பகல் 11.45-12.00 : தேநீர் இடைவேளை

பிற்பகல் 12.00-01.30 : கணினித்தமிழ்
முனைவர் தமிழ்ப்பரிதி மாரி
துணைப் பேராசிரியர்
பெரியார் பல்கலைக்கழகம்
சேலம் மாவட்டம்.

பிற்பகல் 01.30-02.30 : உணவு இடைவேளை

முற்பகல் 02.30-03.30:
மொழிபெயர்ப்பு கலைச்சொல்லாக்கம்
மொழிப்பயிற்சி:
முனைவர் தா.பேகம்,
தமிழ் விரிவுரையாளர்
அரசு ஆடவர் கலைக் கல்லூரி, கிருட்டினகிரி

தனித்தியங்கும் தன்மை தமிழினுக்குண்டு
தமிழே ஞாலத்தில் தாய்மொழி பண்டு. – பாவேந்தர் பாரதிதாசன்

தமிழ் வளர்ச்சித் துறை
சேலம் மாவட்டம்
ஆட்சிமொழிக் கருத்தரங்கம் 2023-2024

நிகழ்ச்சி நிரல்
திருவள்ளுவராண்டு 2054, கார்த்திகை – 28
இரண்டாம் நாள் : 14-12-2023 வியாழக்கிழமை

பிற்பகல் 3.30: தமிழ்த்தாய் வாழ்த்து

வரவேற்புரை:
திருமதி க.பவானி
மண்டிலத் தமிழ்வளர்ச்சித் துணை இயக்குநர், சேலம்.

தலைமையுரை: திரு. செ. கார்மேகம் இ.ஆ.ப.
மாவட்ட ஆட்சித் தலைவர்,
சேலம் மாவட்டம்.

ஆட்சிமொழித் திட்டச்
செயலாக்கத்தில் சிறந்த அலுவலகத்திற்கு
கேடயம், சிறந்த வரைவுகள் குறிப்புகள்
எழுதும் பணியாளர்களுக்குப்
பாராட்டுச் சான்றிதழ்
வழங்கி விழாப்பேருரை :
முனைவர் ஔவை ந.அருள்
தமிழ் வளர்ச்சி இயக்குநர்
சென்னை

கருத்துரையாளர்கள்:
கலைமாமணி முனைவர் கு.கணேசன்
தமிழ்ச்செம்மல் விருதாளர், சேலம்

திரு. தாரை குமரவேல்
உறுப்பினர், பெரியார் பல்கலைக்கழக
தமிழ்த்துறை பாடத்திட்டக் குழு, சேலம் மாவட்டம்.

நன்றியுரை:
திரு.ச.சுவாமிநாதன்
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், சேலம் மாவட்டம்

நாட்டுப்பண்

“அகம் புறம் என்ற வாழ்க்கையினுடைய இரு கூறுபாடுகளைப் பிரித்து, நூல்களை இயற்றி இலக்கியங்களைத் தந்துள்ள மொத்தப் பெருமை நம்முடைய தாய்மொழிக்கு மாத்திரமே உள்ளது வேறு எம்மொழிக்கும் இல்லாத புதுமை”
– முத்தமிழறிஞர் கலைஞர்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *