POST: 2024-01-23T09:15:54+05:30

தமிழ்நாடு அரசு
தமிழ் வளர்ச்சித் துறை

சங்கப்பெரும் புலவர் கணியன் பூங்குன்றனார்
நினைவுத்தூண் திறப்பு விழா

திறந்து வைப்பவர்
திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்

நாள்:22.01.2024
இடம்: மகிபாலன்பட்டி, சிவகங்கை மாவட்டம்

உலகையே தம் வாழிடமாகக் கருதிய பேரன்புப் பெருமகனார்;

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற சொற்றொடரைப் பொற்றொடராக உலகிற்கு வழங்கிய சங்கப் பெரும்புலவர் கணியன் பூங்குன்றனார் நினைவுத்தூண் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் மகிபாலன்பட்டியில் 276.75 சதுர அடி பரப்பளவில் ரூ.23.26 இலட்சம் மதிப்பீட்டில் நிறுவப்பட்டு தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் காணொலி வாயிலாக 22.01.2024 அன்று திறந்து வைக்கப்பட்டது..

3.4.1974ஆம் ஆண்டில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால், சங்கப்புலவர் கணியன் பூங்குன்றனாரின் புகழ்பெற்ற 192ஆம் புறநானூற்றுப் பாடலான
யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் பாடல் வரிகள் கல்வெட்டில் பதிக்கச் செய்து மகிபாலன்பட்டியில் திறந்து வைக்கப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *