செய்தி வெளியீடு எண்: 324
நாள்:19.02.2024
தமிழ் வளர்ச்சித் துறை
உள்ளம் உகக்கும் உலகத் தாய்மொழி நாள் (21.02.2024)
‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்துச் சிறந்து பூத்துக் குலுங்கும் நம் புத்தமுதத் தேன்மொழியைப் போற்றிப் பரவிடும் வகையில். யுனெஸ்கோ நிறுவனத்தினால் 1999 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டவாறு, பிப்ரவரி 21ஆம் நாளன்று ஆண்டுதோறும் உலகத் தாய்மொழி நாளை தமிழ் வளர்ச்சித் துறை பெருமிதமாக உவகைப் பெருவிழாவாக கொண்டாடி வருகிறது.
அவ்வகையில், இவ்வாண்டும் உலகத் தாய்மொழி நாள் (21.02.2024) புதன்கிழமையன்று தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ஔவை அருள் அவர்கள் முன்னிலையில்
சென்னை, தாம்பரம். கிறித்தவக் கல்லூரியில் ஆண்டர்சன் அரங்கில்
காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை உற்சாகமாகக் கொண்டாடப்படவுள்ளது.
இவ்விழாவில், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் தலைமையுரை ஆற்றவுள்ளார்.
தமிழ் வளர்ச்சித் துறை அரசு செயலாளர் முனைவர் இல.சுப்பிரமணியன் இ.ஆ.ப. அவர்கள் நோக்கவுரை ஆற்றவுள்ளார்.
சென்னை கிறித்தவக் கல்லூரியின் முதல்வர் முனைவர் பால் வில்சன் மற்றும் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் ப.டேவிட் பிரபாகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கவுள்ளனர்.
மரு.ஜெய இராஜமூர்த்தி அவர்கள் தலைமையில் சிந்தை மணக்கும் இச்செந்தமிழ்ப் பெருவிழாவில் என்றுமுள தென்றமிழின் இணையில்லாப் பெருமையினை இளந்தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் நிகழ்த்தப்பெறவுள்ள பன்னருங் கலைதெரி பட்டிமன்றத்தில் தமிழ் இலக்கியங்கள் வாசித்து மகிழவே! எனும் தலைப்பில் முனைவர் சொற்கோ கருணாநிதி.
கல்பாக்கம் ரேவதி
திருமதி அனுகிரகா ஆதிபகவன் ஆகியோரும்
தமிழ் இலக்கியங்கள் வாழ்ந்து பழகவே! எனும் தலைப்பில் கவிஞர் சிந்தைவாசன்.
முனைவர் எஸ்தர் ஜெகதீசுவரி. முனைவர் சிவ சதீஷ்குமார் ஆகியோரும் உரையாற்ற உள்ளார்கள்.
கவிஞர் நெல்லை ஜெயந்தா அவர்களின் தலைமையில் காவில் ஆடும் களிமயிலாய்ப் பாவில் ஆடும் பாட்டரங்கம் ‘இவர்கள் இன்றும் இருக்கின்றார்கள்”
என்ற தலைப்பில் நடைபெறவுள்ளது.
இதில் திருவள்ளுவர் எனும் தலைப்பில் கவிஞர் கங்கை மணிமாறன் அவர்களும், இளங்கோவடிகள் எனும் தலைப்பில் கவிஞர் ப.சொக்கலிங்கம் அவர்களும், ஒளவையார் என்ற தலைப்பில் கவிஞர் ஆதிரா முல்லை அவர்களும்,
கம்பன் என்ற தலைப்பில் கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்களும், பாரதியார் என்ற தலைப்பில் கவிஞர் ஜான் தன்ராஜ் அவர்களும்
பாரதிதாசன் என்ற தலைப்பில் கவிஞர் இதயகீதம் இராமனுஜம் அவர்களும் கவிதை பாட உள்ளார்கள்.
தமிழ்நாடு மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் முழுநேர உறுப்பினரும். மேணள் மாவட்ட அமர்வு நீதிபதியான திரு.அ.முகமது ஜியாவுதீன் அவர்களின் தலைமையில் தாய்மொழி போற்றுவோம் எனும் தலைப்பில் புவியரங்கம் போற்றுகின்ற புகழ்மிக்க தாய்மொழியின் பெருமிதத்தை செவியரங்கில் ஏற்றவரும் சிந்தனைச் செயல் கிறித்துவக் கல்லூரிப் பேராசிரியர்கள் முனைவர் எஸ்.யக்னசேகர், முனைவர் எ.முனிராஜா. பேரா.டி.கே.சாந்தி, பேரா.எஸ்.ரஜினி,
முனைவர் சு.சதாசிவம், பேரா.பா.சுஜிதா. பேரா.ச.லிவிங்ஸ்டன் ஆகியோர் கருத்தரங்க உரை ஆற்றவுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சென்னை கிறித்தவக் கல்லூரி மாணவர்கள் கலை நிகழ்ச்சி நிகழ்த்த
உள்ளனர்.
தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் (பொ) திருமதி கு.ப.சத்தியப் பிரியா,
உதவி இயக்குநர் திருமதி தே.ஜெயஜோதி மற்றும் பணியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
உள்ளொளி பெருக்கும் உலகத் தாய்மொழி நாள் உற்சாகத் திருவிழா சிறக்க அனைவரும் வருகை புரியுமாறு கனிவன்புடன் அழைக்கிறோம்.
வெளியீடு:
இயக்குநர்,
செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9

Add a Comment