தமிழ் வளர்ச்சித் துறை
செய்தி வெளியீடு
பன்னூறு ஆண்டுகளாக வற்றாதப் படைப்புகளைக் கொண்டு, சீரிளமையோடு இலங்கி வரும் தமிழுக்கும், தமிழ்மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்கும் தொண்டாற்றி வரும் தமிழ்த்தாயின் திருத்தொண்டர்களுக்கும், அமைப்பிற்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளையும் சிறப்புகளையும் அளித்து, அவர்தம் தமிழ்த்தொண்டுக்குப் பெருமை செய்து வருகிறது.
மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு. மு. பெ. சுவாமிநாதன் அவர்களால் 2022ஆம் ஆண்டிற்கான விருதுகளை திருவாடுதுறை டி.என்.ராஜரத்தினம் கலை அரங்கத்தில் (முத்தமிழ் பேரவை மன்றம்) மாலை 4.00 மணியளவில் வழங்கப்பட உள்ளது. அவ்விருதுகள் பின்வருமாறு.
தமிழ்த்தாய் விருது – திருப்பூர் தமிழ்ச்சங்கம்,
கபிலர் விருது – முனைவர் அமிர்த கௌரி (வயது – 77, சென்னை மாவட்டம்) ,
உ.வே.சா விருது – திரு. நாறும்பூநாதன் (வயது – 64, திருநெல்வேலி மாவட்டம்),
கம்பர் விருது –
திரு. மா. இராமலிங்கம் (வயது – 74, சென்னை மாவட்டம்),
சொல்லின் செல்வர் விருது – முனைவர் தி. இராசகோபாலன் (வயது – 84, சென்னை மாவட்டம்),
உமறுப்புலவர் விருது – முனைவர் பீ.மு.அஜ்மல்கான் (வயது – 73, மதுரை மாவட்டம்),
இளங்கோவடிகள் விருது – திரு. கூ.வ. எழிலரசு (வயது – 71, காஞ்சிபுரம் மாவட்டம்),
அம்மா இலக்கிய விருது – திருமதி தி. பவளசங்கரி (வயது – 65, ஈரோடு மாவட்டம்),
சிங்காரவேலர் விருது – திரு. நா. சு. சிதம்பரம் (வயது – 77, சென்னை மாவட்டம்),
அயோத்திதாசப் பண்டிதர் விருது – திரு.வை.தேசிங்குராசன் (வயது – 64, பெரம்பலூர் மாவட்டம்),
மறைமலையடிகளார் விருது – மருத்துவர் சு.நரேந்திரன் (வயது – 81, தஞ்சாவூர் மாவட்டம்),
அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது – முனைவர் ப. சரவணன் (வயது – 50, சென்னை மாவட்டம்),
காரைக்கால் அம்மையார் விருது – முனைவர்
த. வசந்தாள் (வயது – 64, சென்னை மாவட்டம்),
சி. பா. ஆதித்தனார் திங்களிதழ் விருது – முல்லைச்சரம் இதழ் (ஆசிரியர் கவிஞர் கலைவமாணி பொன்னடியான்),
ஜி.யு. போப் விருது – முனைவர் அமுதன் அடிகள் (வயது – 80, திருச்சிராப்பள்ளி மாவட்டம்
சிறந்த மொழிப்பெயர்ப்பாளர் 2022ஆம் ஆண்டுக்குரிய பத்து விருதாளர்களான
1. திரு. சிவா பிள்ளை கணபதிப்பிள்ளை என்கிற சிவகுருநாதபிள்ளை (வயது – 81, இலண்டன்)
2. திரு.பி.எஸ்.வி.குமாரசாமி (வயது -65, மும்பை)
3. பேராசிரியர் முனைவர் ப.சந்திரசேகரன் (வயது – 69, புதுக்கோட்டை மாவட்டம்)
4. திரு. சுப்ரபாரதிமணியன் (வயது – 68, திருப்பூர் மாவட்டம்)
5. திரு. அ.ஸ்டீபன் அருள்ராஜ் (வயது – 40, திருச்சி மாவட்டம்)
6. கவிஞர் அரு. சோமசுந்தரம் – மறைவு (வயது – 87, சிவகங்கை மாவட்டம்)
7. கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு (வயது – 69, சென்னை மாவட்டம்)
8. முதுமுனைவர் ஆ.இராசமாணிக்கம் (வயது – 86, நாமக்கல் மாவட்டம்)
9. திரு. கே. தட்சிணமூர்த்தி (வயது – 61, திருச்சிராப்பள்ளி மாவட்டம்)
10. புலவர். தி.வே.விஜயலட்சுமி (வயது – 73, சென்னை மாவட்டம்)
தமிழ்ச்செம்மல் விருது 2022ஆம் ஆண்டுக்கான 38 விருதாளர்கள்
அரியலூர் மாவட்டம் – திரு. ப.முத்துக்குமரன் (வயது – 92),
இராணிப்பேட்டை மாவட்டம் – முனைவர் பெ.தமிழ்ச்செல்வி குணசேகரன் (வயது – 59),
இராமநாதபுரம் மாவட்டம் – திரு. செ. மாணிக்கவாசகம் (வயது – 65),
ஈரோடு மாவட்டம் – திரு. நாமக்கல் நாதன் (வயது – 74),
கடலூர் மாவட்டம் – கவிகை சா. கணேசன் (வயது – 66)
கரூர் மாவட்டம் – நன்செய்ப்புகழுர் அழகரசன் (வயது – 82),
கள்ளக்குறிச்சி மாவட்டம் – திரு. மா. முத்தமிழ்முத்தன் (வயது – 77), கன்னியாகுமரி மாவட்டம் –
புலவர் வே. இராமசுவாமி (வயது -80), காஞ்சிபுரம் மாவட்டம் –
திரு. சு. ராஜேஸ்வரன் (வயது – 76), கிருட்டினகிரி மாவட்டம் –
முனைவர் கு. வணங்காமுடி (வயது . 71), கோயம்புத்தூர் மாவட்டம் –
திரு. சொ. க. முருகன் (எ) கவிஞர் அழகு சக்திகுமரன் (வயது – 75) சிவகங்கை மாவட்டம் –
ஆறு. மெ. ஆண்டவன் (வயது – 76), செங்கல்பட்டு மாவட்டம் –
திரு. மோசசு மைக்கேல் பாரடே (வயது – 67), சென்னை மாவட்டம் –
புலவர் ப. கி. பொன்னுசாமி (வயது – 92), சேலம் மாவட்டம்
– திரு. க. இராசமாணிக்கம் (எ) கவிதை தாதை உபதேசி (வயது – 84), தஞ்சாவூர் மாவட்டம் –
திரு. ரா. சிவகுமார் (வயது -72), தருமபுரி மாவட்டம் –
புலவர் க. தீயாகசீலன் (வயது – 82), திண்டுக்கல் மாவட்டம் –
திரு. து. இராசகோபால் (வயது – 82), திருச்சிராப்பள்ளி மாவட்டம் –
நாவை. சிவம் என்கிற சிவராமலிங்கம்(வயது – 77), திருநெல்வேலி மாவட்டம் –
திரு. ஜா. பீட்டர் மைக்கேல் ராஜ் (வயது – 42), திருப்பத்தூர் மாவட்டம் –
கவிஞாயிறு பெரும்புலவர் துரை. கருணாகரன் (வயது – 68), திருப்பூர் மாவட்டம் –
கவிஞர் க. குமாரசாமி (வயது – 76), திருவண்ணாமலை மாவட்டம் –
திரு. எஸ்.சையத் இஸ்மாயில் (வயது – 55), திருவள்ளூர் மாவட்டம் –
திரு. தி. தாயுமானவன் (வயது – 71), திருவாரூர் மாவட்டம் –
திரு. சு. கந்தசாமி (வயது – 76),
தூத்துக்குடி மாவட்டம் – திரு. கா. உதயசங்கர் (வயது – 63),
தென்காசி மாவட்டம் –
மருத்துவர் ஜ. பத்மானந்தன் (வயது -65),
தேனி மாவட்டம் – திருமதி சு, புவனேஸ்வரி (வயது – 76),
நாகப்பட்டினம் மாவட்டம் – புலவர் கணேச. இராஜேந்திரன்(வயது – 74),
நாமக்கல் மாவட்டம் – திரு. அ. செ. பரணிராஜா (வயது – 80),
நீலகிரி மாவட்டம் – திரு. கோ. ம. பெள்ளி (வயது – 77),
புதுக்கோட்டை மாவட்டம் – திரு. நெ. இராமச்சந்திரன் (எ). இரா. சந்திரன் (வயது – 53),
பெரம்பலூர் மாவட்டம் – திரு. வே. இளங்கோவன் (வயது 75),
மதுரை மாவட்டம் – கவிஞர் இரா. இரவி (வயது – 57),
மயிலாடுதுறை மாவட்டம் – திரு. இரெ. கங்கை மணிமாறன் (வயது – 65),
விருதுநகர் மாவட்டம் – திருமதி கி.இராமதிலகம் (வயது – 69),
விழுப்புரம் மாவட்டம் – திரு.பு. அறிவுடைநம்பி (நயம்பு. அறிவுடைநம்பி) (வயது – 79),
வேலூர் மாவட்டம் – திரு. ஆ. முனிரத்தினம் (வயது – 87)
மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு. மு. பெ. சுவாமிநாதன் அவர்களின் திருக்கரங்களால் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் முனைவர் இல. சுப்பிரமணியன் அவர்களின் முன்னிலையில் திருவாடுதுறை டி.என். ராஜரத்தினம் கலை அரங்கத்தில் – (முத்தமிழ்ப் பேரவை மன்றம்) 22.02.2024 வியாழக்கிழமை மாலை 4.00மணியளவில் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் ஔவை அருள் மற்றும் ,அரசு உயர் அலுவலர்கள், தமிழ் வளர்ச்சித்துறை அலுவலர்கள் / பணியாளர்கள், தமிழறிஞர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தமிழ் வளர்ச்சித் துறை மேற்கொண்டு வருகிறது.
தமிழ் வளர்ச்சி இயக்குநர்

Add a Comment