POST: 2024-03-09T11:22:45+05:30

விஜிபி உலகத் தமிழ்ச்சங்கம்

‘உலகைத் தமிழால் உயர்த்துவோம்’ என்ற உன்னத நோக்கில் 21 திருக்குறள் மாநாடுகள் நடத்தி, உலகமெங்கும் 160-க்கும் மேற்பட்ட திருவள்ளுவர் சிலைகள் நிறுவிய

விஜிபி உலகத்தமிழ்ச் சங்கத்தின்

31 ஆம் ஆண்டு விழா!

நாள்: 08 மார்ச் 2024 வெள்ளிக்கிழமை

நேரம்: மாலை 4:30 மணி

இடம்: சத்யா ஸ்டூடியோ டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அடையாறு, சென்னை.

விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின்

31 ஆம் ஆண்டு விழா

தொழில் செய்து தொண்டு செய்வோம்!

பேரன்புடையீர் வணக்கம்.

1993-ஆம் ஆண்டு விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டு, இந்நாள் வரை, இந்தியா மற்றும் உலக நாடுகளில் 160-க்கும் மேற்பட்ட திருவள்ளுவர் சிலைகள் நிறுவியும், 21 பன்னாட்டு திருக்குறள் மாநாடுகள் நடத்தியும் தமிழ்ப் பணியாற்றிவரும் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் 2024 ஆம் ஆண்டு, மார்ச் மாதம். 08-ஆம் நாள். வெள்ளிக்கிழமை அன்று மாலை 4:30 மணிக்கு, சென்னை, அடையாறு, டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக் கலையரங்கத்தில், தனது 31-ஆம் ஆண்டு விழாவினைத் தமிழ் இலக்கியப் பெருவிழாவாகக் கொண்டாடுகிறது.

இவ்விழாவில், தமிழ்ச் சான்றோர் பெருமக்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. இவ்விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், 31-ஆம் ஆண்டு விழா மலர் வெளியீடு ஆகிய சிறப்பு நிகழ்வுகள் நடைபெற உள்ளன. எனவே, வரலாற்றுச் சிறப்புமிக்க இத்தமிழ் விழாவில் தாங்கள் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

வெல்க தமிழ்! வளர்க குறள் நெறி!!

டாக்டர் வி.ஜி.சந்தோசம் நிறுவனர் & தலைவர் – விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம்

விஜிபிரவிதாஸ், விஜிபிராஜாதாஸ், விஜிபி பாபுதாஸ், விஜிபி பிரசாத்தாஸ், விஜிபி மர்பிதாஸ்.

31ஆம் ஆண்டு விழா!

நிகழ்ச்சி நிரல்

தொடக்க விழா!

மாலை 4:30 மணி : இன்னிசை நிகழ்ச்சி
எம்.ஜி.ஆர்.ஜானகி மகளிர் கல்லூரி மாணவிகள் நடத்தும் கலை நிகழ்ச்சி

வானவில் பண்பாட்டு மையம் நடத்தும் கலை நிகழ்ச்சி

மாலை 6:00 மணி : தமிழ்த்தாய் வாழ்த்து

இறை வணக்கம் வரவேற்புரை : திருமிகு விஜிபி ரவிதாஸ் அவர்கள் துணைத் தலைவர் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம்

தலைமையேற்று விருது வழங்குபவர் : டாக்டர் வி.ஜி.சந்தோசம் அவர்கள் நிறுவனத் தலைவர் – விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம்

வாழ்த்துரை : முனைவர் ஔவை ந.அருள் அவர்கள் இயக்குநர் – தமிழ் வளர்ச்சித்துறை

டாக்டர் சாய் பிரகாஷ் லியோமுத்து அவர்கள் தலைவர் – சாய்ராம் கல்விக் குழுமம்

31 ஆம் ஆண்டு விழா மலர் வெளியிடுபவர் :மேதகு செந்தில் தொண்டமான் அவர்கள் இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர்

முதல் பிரதியைப் பெறுபவர் : நீதியரசர் டி.என்.வள்ளிநாயகம் அவர்கள் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி

திருமிகு மல்லை சி.ஏ.சத்யா அவர்கள் தலைவர் – மல்லை தமிழ்ச் சங்கம்

விருது பெற்று சிறப்புரையாற்றுவோர் : பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள் தலைவர் – நல்லி சில்க்ஸ்

மேதகு செந்தில் தொண்டமான் அவர்கள் இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர்

‘இஸ்ரோ’ திருமிகு வீரமுத்துவேல் அவர்கள் இந்திய விண்வெளி ஆய்வு மைய திட்ட இயக்குநர்

டாக்டர் மரியஜீனா ஜான்சன் அவர்கள் வேந்தர் – சத்யபாமா பல்கலைக் கழகம்

நன்றியுரை : திருமிகு விஜிபி ராஜாதாஸ் அவர்கள் செயலாளர் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம்

நிகழ்ச்சித் தொகுப்பாளர் : திரு கோ.மணிஅவர்கள் பண்பலைத் தொகுப்பாளர்

இரவு விருந்து

31 ஆம்ஆண்டு விழா!

வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுபவர்கள்:

பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள்
தலைவர் – நல்லி சில்க்ஸ்

மேதகு செந்தில் தொண்டமான் அவர்கள்
இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர்

‘இஸ்ரோ’ திருமிகு வீரமுத்துவேல்அவர்கள்
திட்ட இயக்குநர் – சந்திராயன் 3
இந்திய விண்வெளி ஆய்வு மையம்

டாக்டர் மரியஜீனா ஜான்சன் அவர்கள்
வேந்தர் – சத்யபாமா பல்கலைக் கழகம்

அன்புடன் அழைக்கும்:

டாக்டர் வி.ஜி.சந்தோசம் அவர்கள் நிறுவனர் & தலைவர் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *