செய்தித்தாள் கட்டுரைகள் – டாக்டர் தாரா நடராஜன்

குழந்தையின் நல வாழ்வே குடும்பத்தின் வேராகும்

செய்தித்தாள் கட்டுரைகள்|

மருத்துவர் தாரா நடராசன் குழந்தை நோய் நிபுணர் ,
முன்னாள் முதல்வர்
மதுரை மருத்துவக் கல்லூரி ராசாசி மருத்துவமனை

குழந்தைக்குத் தாய்ப்பாலை ஊட்டவேண்டிய ஊக்கத்தையும் சூழ்நிலையையும் தாய்க்கு நாம் ஏற்படுத்தவேண்டும் .அதற்கு வேண்டிய மனநலம் சத்துணவு தண்ணீர் போதிய நம்பிக்கை யாவையும் தாய்க்குக் குறையாமல் அமைய ஊக்குவிக்க வேண்டும் .குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே தாய் பாலை ஊட்டத் தொடங்கலாம் .குழந்தை பசிக்காக அழும் பொழுதெல்லாம் பால் கொடுப்பதே சிறந்த முறையாகும் தொடக்கத்தில் இளம்பாலும் பிறகு தாய்ப்பாலும் குழந்தைக்கு ஏற்றதாகும் .குழந்தை இரண்டு அல்லது மூன்று மணிநேரத்திற்கு ஒருமுறை பால் அருந்தும் ஒவ்வொரு முறையும் முதலில் சில மணித்துளிகளே குடிக்கும் பிறகு 15 20 மணித் துளிகள் தொடர்ந்து பால் அருந்தும் பசிக்காகக் குழந்தை அழுதால் குழந்தைக்குப் பால் கொடுப்பதில் தவறில்லை சில குழந்தைகள் இரவு நேரங்களிலும் பாலுக்காக அழும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் இப்பழக்கம் தானே நின்று விடும்.
இயல்பாகவே குழந்தைகள் தாமாகவே தமக்கென்ற ஒரு நெறிமுறைக்கு வந்துவிடும் இரண்டு மூன்று மணி நேர திற்கு ஒரு முறை பால் அருந்தும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளும் இரண்டு மூன்று மாதத்திற்கு மேல் இரவில் பால் அருந்துவதையும் நிறுத்தி நிம்மதியாக உறங்கும்
ஒவ்வொரு பக்கமாகக் குழந்தைக்கு முழுமை யாகப் பால் ஊட்ட வேண்டும். குழந்தை ஒழுங்காகப் பாலை உறிஞ்சுமானால் பால் சுரப்பது எளிதாகும் ஒவ்வொரு முறையும் முழுமையாக உறிஞ்சிப் பாலுண்ணும் திறனை இயல்பாகவே குழந்தைக்குக் கற்பிக்கலாம் .குழந்தைக்குப் போதுமான வசதியான உடை அணிவது அவசியம் குழந்தையை வெகு வெதுப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்
தாய்க்குப் போதுமான சத்துணவும் அடிக்கடிப் பாலூட்டுவதும் பால் சுரப்பதைப்பெருக்குகின்றன. பால் உற்பத்தியை மருந்துகள் மூலம் அதிகமாக்க முயல்வது தேவையற்றது பேறுகாலத்தில் பேதலித்து நிற்கும் தாய்மார்கள் தாய்ப்பால் ஊட்டுவதால் மனத்தெளிவையும் பெறுவர் தாய் குழந்தைக்குத் தன் பாலை வசதியாகக் கொடுக்கும் போது குழந்தைக்கும் தனக்கும் எந்த இடையூறு நேராமலும் பழகிக்கொள்ள வேண்டும் சில குழந்தைகள் பால்குடிக்க ஆரம்பித்தவுடனே தூங்கி விடும் அக்குழந்தைகளை எழுப்பி வயிறு நிறையப் பாலூட்டவேண்டும் குழந்தை பாலைக் குடிக்கும் வரை அளவுக்கதிகமான பால் சுரப்பினால் குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் அப்பொழுது சில வினாடி கள் இடைவெளிவிட்டுக் குழந்தைக்குப் பாலூட்ட வேண்டும்.
குழந்தை பாலைக் குடிக்கும்பொழுது காற்றை யும் உறிஞ்சிவிடும் அதனால் குழந்தையைத் தோளில் முதுகில் தட்டி ஏப்பமிட வைக்க வேண்டும் இவ்வாறு செய்யவில்லையென்றால் குழந்தை குடித்த பாலை உடனே வாந்தி எடுத்துவிடும் இந்த வாந்தி யெடுத்த பொருள் சுவாசப் பைக்குள் போகவும் நேரிடும் குழந்தை எப்பம் விட்டபிறகு குழந்தையை அதன் வலது பக்கத்திலோ குப்புறவோ படுக்க வைக்கவேண்டும் இவ்வாறு படுக்கவைப்பதால் உணவு குடல் வழியே செல்ல வசதியாகவுமிருக்கும்
குறைமாதக் குழந்தைகளாலும் பிளவுபட்ட உதடுகளுடைய குழந்தைகளாலும் தொடக்கத்தில் பாலை உறிஞ்சிக் குடிக்க இயலாது அப் பொழுது தாய் தன் பாலைக் கையால் கறந்துகொடுக்கவேண்டும் அலுவலகத்
திற்குச் செல்லும் மகளிர் கையால் கறந்த பாலைப் புட்டிகளில் சேகரித்துக் குளிர்பதனப் பெட்டியில் வைத்துத் தேவைப்படும்பொழுது அப்பாலைத் தண்மை நீங்கியதும் குழந்தைக்குப் புகட்ட செய்யலாம்தாய்ப்பாலைப் பெருக்கும் முறைகள் குழந்தைக்கு தாய் பாலூட்ட எல்லா முயற்சிகளையும் செய்த பிறகும் பால் வரவில்லை .என்றால் தான் தாய்ப்பாலை போதிய அளவு சுரக்கவில்லை என்று ஒப்புக்கொள்ள முடியும். முதலில் தாய்ப்பால் எப்பொதும் தாய்ப்பால் தான் ஊட்டவேண்டுமென்று அனைவரும் இப்போது வலியுறுத்தி வருவதால் எவ்வாறேனும் முயற்சி செய்து தாய்ப்பாலைச் சுரக்கவைப்பதுதான் ஒரு தாயின் இன்றியமையாத கடமையாகும் ஒரு குவளை பால் பழச்சாறோ வேறு சுவை நீர்களையோ தாய்ப்பால் கொடுப்பதற்கு முன் ஒரு தாய் அருந்தவேண்டும் தாய்ப்பால் கொடுக்கும் இடைவெளி அதிகமாக இருந்தால் குழந்தைக்கு அவ்வப்போது பாலூட்டு முறையைக் கடைப் பிடிக்கவேண்டும் முதலிலிருந்தே இரு பக்க மார்பகங்களிலிருந்தும் பாலூட்டும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்

குழந்தை பால் குடித்தபிறகு மார்பகத்திலுள்ள எஞ்சிய பாலை மருத்துவத் தாதியரின் உதவியுடன் உள்ளங்கையைத் தட்டையாக வைத்து மெது மெதுவாக முழுமையாகப் பிழிந்து எடுத்துவிட வேண்டு ம் இவ்வாறு அறவே பாலை முழுமையாகத் தீர்த்துக்கொண்டால்தான் பிறகு பால் சுரப்பது இயல்பாகும் அவ்வப்போது தாய் அமைதியாக ஓய்வில் இருக்கவேண்டும் ஓய்வுக்குப் பிறகு பால் சுரப்பது எளிதாகிறது தாய் களைப்பாக இருந்தால் போதுமான ஒய்வெடுத்துக்கொள்ளவேண்டும்
தாய்ப்பால் எவ்வாறு உருவாகிறது?

பெண்ணின் ஒவ்வொரு மார்பகமும் ஏறத்தாழ 20 கூறுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கூறும் பல இலைகள் கிளைகளைஉடைய மரத்தைப் போன்ற அமைப்பையுடையது பால் வழி வழிநாளங்கள் மரத்தின் அடிப்பாகத்தைப் போன்று கிளைகளாகப் பிரிந்து பால் கரக்கும் குழி வாய்களுடன் இணைந்திருக்கிறது முலையைச் சுற்றிஉள்ள கருத்த தோலின் கீழ் இந்தப் பால்வழி நாளங்கள் அகலமாக விரிந்திருக்கும் ஏனெனில் கரக்கும் பால் இங்குதான் சேமித்து வைக்கப் படுகின்றது. முலையின் முகட்டிலும் பால்வழி நாளங்களைச் சுற்றிலும் பல நரம்புகள் படர்ந்துள்ளன. குழந்தை தாயின் முலையை உறிஞ்சும்போது அந்த உணர்வு இந்த நரம்புகளின் மூலம் மூளையைச் சென்றடைகிறது ஒரு பெண் கருவுறும்போது சினைப் பயிலிருந்தும் நஞ்சு (placenta) சுரக்கும் சுரப்பிகள் பால் உற்பத்தியாவதைத் தடுக்கிறது. ஆனால் குழந்தை பிறந்தவுடன் இந்தகைய பால் உற்பதியைக் குறைக்கும் சுரப்பிகள் மங்கிவிடுவதால் பிறந்த குழந்தை முலையினை உறிஞ்சுவதால் பால் சுரப்பு உருவாகிறது.
தேவையான பால் சுரப்பதற்கு 2 முதல் 12 நாள்கள் ஆகும் இந்த நாள்களில் குழந்தையின் தேவைக்கேற்பப் பால் குறைவாகவே அதிகமா கவே இருக்கும் குழந்தை உறிஞ்சும்பொழுது முலையில் உள்ள நரம்புகள் ஊக்கம் பெறுகின்றன இவ்வுணர்வுகள் நரம்புகளின் மூலம் மூளையின் அடிப்பாகத்தைச் சென்று அடைகிறது உடனே ப்ரொலாக்டீன் என்ற சுரப்பி சுரந்து இரத்தத்துடன் கலக்கிறது கலந்தபிறகு அது பால் சுரப்பிகளை இயக்குகிறது. ஆகையால் எவ்வளவு அதிகமாகக் குழந்தை ஈர்த்து உறிஞ்சுகிறதோ அவ்வளவு அதிகமாக ப்ரொலாக்கனும் உற்பத்தியாகி ஆகையால் ஒரு குழந்தையின் பசியுணர்வே அதிக பால் உற்பத்திக்குத் துண்டுகோலா அமைகிறது
பால் உருவாக்கத்துக்குக் குழந்தை தாய் ஆகிய இருவருடைய ஒத்துழைப்பும் தேவை குழந்தை மட்டும் உறிஞ்சிக் கொண்டிருந்தால் ஒரு சிறிதளவு பாலிற்கு மேல் அதற்குக் கிடைக்காது குழந்தை பால் உறிஞ்சும் போது நரம்புகள் செல்லும் உணர்வுகள் மூளையின் பிற்பகுதியைத் தாக்கி ஆக்ஸ்டோசின் என்ற சுரப்பியை சுரக்கச் செய்கிறது இவ்வாக்ஸ்டோசின் இரத்தத்துடன் கலந்து பால்வழி நாளங்களையும் பால் சுரக்கும் குழிவாய் களையும் விரிந்து சுருங்கடையச் செய்து சுரக்கும் பாலினை முலையை நோக்கித் தள்ளிப் புறத்தே பாய்ச்சுகிறது. ஒரு தாய் தன்னால் தேவையான பாலை உற்பத்தி செய்ய முடியாது என்று நினைத்தாலோ அஞ்சினாலோ பால் சுரப்பது குறைந்துவிடும் ஆகையால் அத்தாய் எந்த வகையான மனச்சோர்வு மில்லாமல் நெஞ்சுரந்தோடு நிகழவேண்டும்
தாய்ப்பாலுக்கு ஈடாகச் செயற்கை மாவின் பாலைப் பயன்படுத்தலாம் என வரும் விளம்பரங்களைத் தடை செய்யவேண்டும் என்று 1951ஆம் ஆண்டில் நடந்த உலக நல மாநாடு வலியுறுத்தி புள்ளது பிரேசில் பிலிப்பைன்ஸ் போன்ற செயற்கைப் பாலைப் பெருக்கும் நாடுகளில் கூடக் குழந்தைகளின் நலத்திற்கு ஊறு விளைவிக்கும் இப்பால் தூளிலிருந்து சேய்களைக் காக்க வேண்டியதை உணர்ந்து செயற்படலாயினர் குழந்தை னால மருத்துவர் மருத்துவக்கல்லூரிகள் தாய்சேய் நல மருத்துவ மனைகள் ஆகியவற்றில் தாய்பால் தவிர பிற செயற்கைப் பாலால் நேரும் கேடுகளை வலியுறுத்த வேண்டும் பள்ளிக்கூட அளவிலேயே தாய்ப்பாலின் பெருமையைப் பரப்ப வேண்டும் வளமான நாடுகளில் தாய்மார்கள் தாய்ப்பாலின் சிறப்பை உணர்ந்து குப்பிப் பாலைத் தவிர்ப்பது போலவே வறுமையில் அகப்பட்டுத் தவிக்கும் நாடுகளைச் சேர்ந்த தாய்மார்களுக்கு இக்கருத்தை ஊட்டவேண்டும் கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவதைப் போல எளியவர்கள் வறுமையாளர்கள் என்ற வேறுபாடில்லாமல் அனைத்துத் தாய்மார்களுக்கும் இயல்பாய்ச் சுரக்கும் தாய்ப்பாலைப் போற்றும் எண்ணம் உருவாக வேண்டும்.
அலுவலக வாழ்க்கை தாய்மார்கள் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் அளிப்பதில் இடையூறுகளை விளைவிக்கலாம் அலுவலக அன்னையர் தாய்ப்பால் அளிப்பதற்குத் தேவையான சூழ்நிலையை உருவாக்கித் தரவேண்டும் நீண்ட பேறுகால விடுப்பு கருவுற்ற தாய்மார்களுக்கும் . பாலூட்டும் தாய்மார்களுக்கும் வழங்க வேண்டும் இத்தாய்மார்களுக்கு ஆடவர்களின் ஒத்துழைப்பும் தேவையாகும் ஆடவரும் குழந்தை வளர்ப்பில் ஆர்வங்கொண்டு மகளிர் நிம்மதியாக எந்த வகை மன இறுக்கமும் தாய்ப்பால் அளிக்கும் சூழ்நிலையை இல்லத்திலும் பணியாற்றும் இடங்களிலும் உருவாக்க வேண்டும் அலுவலுக்கு உறுதிப்பாட்டையும் போதிய சூழ்நிலையையும் நாம் நல்கவேண்டும்
தமிழகததில் ஆயிரக்கணக்கான ஆண்டுக ளுக்கு முன்னால் தாயப்பால் புகட்டும் இயல்பை போற்றும் நெறி வளர்ந்திருப்பதையும் நாம் ஊட்டிய தாய்ப்பால் மானத்தையும் வீரத்தையும் ஒருசேர ஊட்டும் உரமுடையதென்பதை ஒரு தாய் புறநானுற்றில் சூளுரைக்கும் காட்சியையும் நினைத்து மகிழலாம் உலகளாவிய நிலையில் தாய்மையைப் போற்றும் நெறியில் தமிழகம் பலருக்கு வழிகாட்டியாக விளங்கியது . தொடர்ந்தும் விளங்க வேண்டும் என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது.

நல்வாழ்வைப் பற்றிய எந்த ஒரு நற்செய்தியும் நாம் அறிந்தவுடன் அதை ஏற்றுக் கடைப் பிடித்து நல்வாழ்வை நோக்கி நடை போடுகின்ற ஸ்கேண்டிநாவின் முதலிய மேலை நாட்டார் இந்தத் திருப்பதையும் முதலில் மகிழ்வோடு ஏற்றுக் தங்கள் நாட்டு மழலைச் செல்வங்களின் நல்வாழ்வைப் போற்றிக் காத்து வருகின்றனர்.தாய்ப்பாலை தவிர பிற உனைவை அந்த நாடுகள் நீக்கிவிட்டன என்றே கூறலாம்.நம் நாட்டில் பல்வேறு முயற்சிகளுக்குப் பின்னரும் தாய்ப்பாலைத் தொடர்ந்து அருந்தும் குழந்தைகளின் என்னிக்கை குறைந்த அளவிலேயே உள்ளது.பிறந்தபொழுது 80-90 விழுக்காடு என்றாகி ஆறாவது மாதத்தில் 30-40 விழுக்காடு கூட தாய்ப்பாலை அருந்துவது இல்லை என்ற புள்ளி பிவிவரம் கூறுகிறது.இதனால் இன்னும் நம் நாட்டில் குழந்தைகளின் வளர்ச்சியும் நோயின்மையும் அறிவுடைமையும் போதிய முன்னேற்றமடையால மிருப்பதை அறிந்து திகைப்படைகிறோம் அணைத்து மக்களுக்கும் இச்செய்தியை ஆழமாக அறிவுறுத்தி தாய்ப்பாலையே ஓராண்டு வரையிலாவது குழைந்தாள் அருந்தினால் எதிர் காலத் தமிழ்நாடு இளைஞர்கள் ஆற்றலோடும் அறிவுதிறனோ டும் நாட்டின் நன்மணிகளாக மிளிர்வார்கள் இந்த நற்போக்கு நன்கு வளர்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Create AccountLog In Your Account