POST: 2024-03-26T07:39:00+05:30

ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்

ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு

24/223, என்.எஸ்.சி. போசு சாலை, சென்னை-600 001.

நாள்: 26.03.2024 மாலை 6.00 மணி

இடம்: ஒய்.எம்.சி. ஏ. எசுபிளனேடு அரங்கம்

”கலைஞரின் படைப்பு இலக்கியங்கள்”

“வள்ளலாரின் காலமும் கருத்தும்”

நூல் அறிமுகம்-ஆய்வுரை

தலைமை

முனைவர் ஔவை ந. அருள்

இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ்நாடு அரசு

நூல் அறிமுகம் செய்து சிறப்புரை

முனைவர் கரு. ஆறுமுகத்தமிழன்

தமிழ் மெய்யியல் ஆய்வாளர் பேராசிரியர், விவேகானந்தா கல்லூரி, சென்னை.

ஏற்புரை

முனைவர் வா.மு.சே. ஆண்டவர்

முதல்வர், கந்தசாமி நாயுடு ஆடவர் கல்லூரி, சென்னை 600102.

உங்கள் வருகை எங்கள் உவகை!

முனைவர் ஒளவை. அருள் நடராசன்

தலைவர்

முனைவர் ப. தாமரைக்கண்ணன்

செயலாளர்

பு.சீ. கிருட்டிணமூர்த்தி

இணைச்செயலாளர்

ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்

டாக்டர் பெஞ்சமின் பிராங்கிளின்

தலைவர்

சே. கூ அன்பு

கிளைத்தலைவர்

சென்னை ஒய்.எம்.சி.ஏ

பா. ஆசீர் பாண்டியன்

பொதுச்செயலாளர்

ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு

ஆ டென்னிஸ் செயலாளர்

தினமணி

27 மார்ச் 2024

பக்கம் _ 2

உயர்ந்த அறநெறிகளை உலகுக்கு தந்தவர் வள்ளலார்

ஔவை ந.அருள்

உயர்ந்த அற நெறிகளை உலகுக்கு தந்தவர் வள்ளலார் என தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஒளவை ந.அருள் தெரிவித்தார்.

சென்னை கந்தசாமி நாயுடு ஆடவர் கல்லூரியின் முதல்வர் வா.மு.சே.ஆண்டவர் இயற்றிய ”வள்ளலாரின் காலமும் கருத்தும்’ மற்றும் அவர் தொகுத்த கட்டுரை நூலான ‘கலைஞரின் படைப்பு இலக்கியங்கள்’ ஆகிய நூல்களின் அறிமுக விழா சென்னை பாரி முனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் சென்னை விவேகானந்தா கல்லூரிப் பேராசிரியரும், தமிழ் மெய்யியல் ஆய்வாளருமான கரு.ஆறுமுகத்தமிழன் கலந்து கொண்டு நூல்களை அறிமுகம் செய்தார்.

இந்நிகழ்வுக்கு தலைமை தாங்கிய ஒளவை ந.அருள் பேசியது:

வள்ளலார் காலமும் கருத்தும்’ நூலில் வள்ளலாரையும் அவரின் கருத்துகளையும் தெளிவாகவும் மிக நுட்பமாகவும் முனைவர் வா.மு.சே.ஆண்டவர் விளக்கியுள்ளார்.

வள்ளலார் கூறிய கருத்துகள் மிக நுட்பம் வாய்ந்தவை.

வள்ளலார் இயற்றிய திருவருட்பாவின் சிறப்பை பல அறிஞர்களும் போற்றுகின்றனர்.

உயர்ந்த அற நெறிகளை உலகுக்கு தந்தவர் வள்ளலார்.

ஜாதி, மதம், ஏழை, பணக்காரர் என்ற எவ்வித வேறுபாடுமின்றி பசி எனவரும் அனைவருக்கும் உணவு வழங்கவேண்டும் என்ற நோக்கில் அணையா அடுப்பை உருவாக்கி கொடிய பசித்தீயை போக்கியவர் அவர்.

இன்று வரை அந்த வழிமுறை தொடர்ந்து செயல்பட்டு வருவது கூடுதல் சிறப்பு என்றார் அவர்.

இந்நிகழ்வில் ஓய்.எம்.சி.ஏ. பட்டிமன்ற அமைப்பின் செயலர் ப.தாமரைக்கண்ணன்,
இணைச் செயலர் பு.சீ.கிருஷ்ணமூர்த்தி
உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *