POST: 2024-03-29T12:29:05+05:30

8.3.24

பிறந்த நாள் வாழ்த்து

வெல்க தினத்தந்தி !

எழுத்துக்கூட்டிப் படிக்க முயலும் தமிழ் மக்களுக்கேற்ற எளிய நடையில் உலகச் செய்திகளோடு உள்ளூர் செய்திகளையும் நாள் தவறாமல் கோடிக்கணக்கான மக்களின் நெஞ்சத்தைக் கொள்ளை கொண்டிருக்கும் ஒரே நாளிதழாக தினத்தந்தி திகழ்கிறது.

தமிழர் தலைவர் தினத்தந்தியை வளர்த்தார்.
செம்மல் சிவந்தி ஆதித்தனார் செழிக்க வைத்தார்.

பெருமை மிகு பாலசுப்பிரமணியன் ஆதித்தனார் செழிப்போடு சிறப்பாக மெருகூட்டி செயற்கை நுண்ணறிவுக் கால மாற்றங்களுக்கு ஏற்பக் கொழிக்க வைத்திருக்கிறார்.

தமிழர்களின் மனத்தந்தியாக தினத்தந்தியே ஓங்கி ஒலிக்கிறது.

வள்ளுவம் காட்டியுள்ள வாழ்வியல் நலங்களான உடல் நலம், உள நலம், இன நலம், வினை நலம் ஆகிய அனைத்து நலங்களையும் ஒருங்கே பேணி அறம், பொருள், இன்பம் இயற்றி வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து சிறக்க

அண்ணல் பாலசுப்பிரமணிய ஆதித்தனார் அவர்களின்

பிறந்த நாளில் (08.03.24) பல்லாண்டு
வாழ்த்தி மகிழ்வதில் பெருமிதமடைகின்றேன்.

வாழ்க தமிழ் !
வெல்க தினத்தந்தியியல் !

ஒளவை அருள்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *