POST: 2024-04-01T10:42:54+05:30

ஒளவையின் நிழலும்
அருந்தமிழ் ஆளும்..

தனக்குத் தரப்படும் எந்தச் செயலையும் புரிந்து செயலாற்றுவதில் வல்லவர் பொன்னேரி பிரதாப் என்று பொன்னாரம் சுட்டலாம் என்ற அடிக்கடி அப்பா தன்னுடைய தனிச்செயலாளர் பற்றி குறிப்பிடுவது உண்டு

அன்றாடம் தான் கையாளும் எண்ணற்ற பணிகளை முன்னுரிமை தந்து வரிசைப்படுத்தி அவற்றுக்கான கால அளவை நிர்ணயித்து மன உறுதியோடு அவர் செய்து முடிக்கும் திட்பம் கண்டு மகிழ்ந்து என் பெற்றோர்கள்
பாராட்டுவது உண்டு.

பெற்றோர்கள் இன்று இருந்திருந்தால் பிரதாப்பை கொண்டாடியிருப்பார்கள்..

ஆமாம் பிரதாப் தானாகவே வரைந்த அருங்கட்டுரையினை தினமணியில் (21.3.24) நடுப்பக்கத்தில் இரண்டாம் கட்டுரையாக மலர்ந்ததை கண்டு ஆயிரம் பேரிடமாவது அப்பா சொல்லி சொல்லி மகிழ்ந்திருப்பார்

அப்பா சொல்ல நினைத்ததை முகநூலில் உலகில் உள்ள யாவருக்கும் யான் சொல்லி மகிழ்கிசிறந்த

ஒளவை வீட்டு அடுக்களையும் அவுடதம் ஆகும்

தினமணி

வியாழக்கிழமை

21 மார்ச் 2024

பக்கம் 6

வனமின்றி அமையாது உலகு

பொன்னேரி பிரதாப்

வானத்தை வசப்படுத்தி மழையை மண்ணுக்கு வருவிப்பதற்காக இயற்கை நீட்டும் கரங்களே மரங்களாகும்.

இத்தகு மரங்கனை வெட்டுவது இயற்கையின் கரங்களை வெட்டி முடமாக்குவதற்குச் சமம் மரங்களைப் பாதுகாப்பது என்பது இயற்கையில் காங்களுக்கு கரம் கொடுப்பதை
ஐம்பூதங்களான நிலம், நீர், காற்று ஆகாயம், நெருப்பு ஆகியவற்றின் ஒலி வொன்றையும் காக கொடுத்து வாங்கும் நிலை ஏற்படுவது என்பது மனிதகுல வீழ்ச்சிக்கான அறிகுறியாகும்.

முன்பு ஐம்பூதத்துள் ஒன்றாக விளங்கும் நிலம் விற்பனைக்கு வந்தது.

பின், நீர் விற்பனைக்கு வந்தது.

அடுத்து மூச்சுக் காற்றையும் கொடுத்து வாங்கவேண்டிய சூழல் வந்து கொண்டிருக்கிறது.

மனித குலத்தைக் காக்க நிலம், நீர், காற்று போன்றவற்றை முறையே பேண வேண்டும்.

அதற்கு மர வளர்ப்பே சிறந்த வழி.

புதிதாக மாங்களை நட்டு வளர்ப்பதைவிட இருக்கின்ற மரங்களை பாதுகாப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

நன்கு வளர்ந்த ஒரு மரம். ஓராண்டிற்கு 117 கிலோ ஆக்சிஜனை நமக்குத் தருகிறது.

நன்கு வளர்ந்த இரண்டுமரங்கள். ஒரு குடும்பத்திற்கான ஓட்டுமொத்த ஆகிஸிஜன் தேவையையும் நிறைவு செய்கின்றன என்கிறது ஓர் ஆய்வு முடிவு.

மரம் நடுதவென்பது அனைவராலும் எளிமையாக செய்யக்கூடிய மாபெரும் அறமாகும்.

நம்மை பாதுகாக்கும் மரங்களை நாம் பாதுகாத்தால் பல்வேறு நன்மைகள் நமக்குண்டு.

மரங்களே பூமி வெப்பமயமாதலை தடுக்கும் சுவாசமாக உள்ளன:

காற்றை சுத்திகரிக்கும் இயந்திரமாகவும் உள்ளன.

வானத்திலிருந்து மழையை வரவழைக்கும் கருவியாகவும் உள்ளன.

இப்படித்தான் வாழ வேண்டும் என்று மனிதனுக்கு வாழக்கற்றுக் கொடுப்பவை மரங்கள்.

திருமண இல்லத்தில் வாசலில் நின்று தன் குலைகளைக் காட்டி, நீங்களும் எங்களைப்போல் கட்டமாகக் கூடி வாழுங்கள் என்று வகுப்பெடுக்கும் வாழை மரங்களின் ஒவ்வோர் உறுப்பும் பயன் மிக்கவை.

தன் காலில் கழிவுநீரைப் பாய்ச்சினாலும் அதனை உடல் வழியாக உறிஞ்சி தன் தலையின் வழியாக இனிமையான இளநீரைத் தரும் தென்னை மரங்கள், நமக்கு நன்றியுணர்வை கற்றுத்தரும் அன்னை மரங்களாகும்.

இதனை.
தெய்வ வழிபாடுகளில் மரத்திற்கு முன்னிடம் கொடுத்தது நம் தமிழ் மரபு.

வாகை மரத்தை ‘கடவுள் வாகை’ என்றும் வேப்பமரத்தை தெய்வம் சான்ற பராரை வேம்பு என்றும் சிறப்பிக்கிறது சங்க இலக்கியாம்.

இன்றும் வேப்பமரத்தையும் அரசமரத்தையும் கடவுளாகவே காண்கிறோம்.

இப்படி இறைவனாக வழிபடப்படும் மரங்கள் இயற்கை கொடுத்த வரங்களாகும்,

என்றாலும் மரங்கள் தருகிற வரங்களும் ஏராளம்.

குறிப்பாக அரசமரம் வெளியிடும் செரிடோன் என்ற வாயுவை சுவாசித்தால் பெண்ணினது கரு பாதுகாப்பாக காக்கப்படும் என்பது அறிவியல் உண்மை.

அதனால் தான் பெண்கள் அரசமரத்தை சுற்றும் வழக்கம் இன்றும் உள்ளது.

சங்ககாலப் பெண்மணி ஒருத்தி தன் தோழியரோடு விளையாடும் போது என்ண்ணில் புதைத்த புன்னை விதை மரமாக விளைந்ததைதால் அதற்கு நெய்யும் பாலும் கலந்தநீரினைப் பெய்து வளர்த்தாள்.

அதைக்கண்ட அவளின் தாய் இது உன்னைவிடச் சிறத்தது.

மேலும் இம்மரம் தங்கையைப் போல என்று மரத்தை உயர்திணையாக உயர்த்திச் சொல்கிறாள்.

அதனால் தன் தங்கையாகவே எண்ணி வளர்க்கப்பட்ட அந்தப் புன்னைமரத்தின் அருகில் தன் காதலனைக் காண நாணுகிறான்.

இது மட்டுமா? மான உணர்வு வந்ததும் ஆதாமும் ஏவாளும் மறைந்து நின்றது மரத்திற்குப் பின்புறத்தில்தான், மானம் மட்டுமன்றி கல்வி கற்கவும் மரங்கனே தாய் மடி தந்துள்ளன.அவ்வகையில் மரங்களே கல்விக்கூடங்களாக விளங்குகின்றன.

சனகாதி முனிவர்களுக்கு அறம் சொல்ல சிவ பெருமான் அமர்ந்தது கல்லால மரத்தின் கீழ்தான்.

தத்துவத்திற்கு போதிமரத்தையும் உடம்பின் உறுதியை சொல்லும்போது தேக்கு மரத்தை உதாரணமாகக் காட்டும் நாம் ஒருவர் செய்த உதவியை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கும் பனை மரத்தையே அளவு கோவாக்குகிறார் வள்ளுவர்.

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையா
கொள்வர் பயன்தெரி வார்

என்பது குறள்.

மங்கள் நிகழ்வுகளில் தலைமுறை தழைக்க வேண்டுமென்பதற்காக ஆல் போல் தழைத்து என்று வாழ்த்தும் மரபு உள்ளது.

ஆனால் அந்த மாங்களின் தலைமுறை தழைக்க வேண்டும் என்பதை நாம் மறந்துவிடுகிறோம்.

மனிதனின்றியும் மரங்கள் வாழும்.

ஆனால் மரங்களின்றி மனிதனால் வாழவே முடியாது.

இது எழுதப்படாத சாசனமாகும்.

இப்படி எழுதுவதற்கும்கூட ஒரு காலத்தில் ஓலைகளைத் தந்த பனை மரங்கள்தான் இன்றுவரை நிலத்தடி வளத்தை பாதுகாத்துக் கொண்டுக்கின்றன.

ஆனால். மனித இனமோ மண்ணின் மடியை அறுத்துக் குடிப்பதுபோல அதிக அளவிலான ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து அகிலத்தை சீரழிக்கிறது.

மறுநாள் மதுக்கடைகள் விடுமுறை என்றால் முதல்நாளே கடைக்குச் சென்று மதுவை வாங்கிவைக்கும் அளவுக்கு விழிப்புணர்வு மிக்க சமூகம், நானை நமது மனிதகுலம் உயிர்த்திருக்க வேண்டுமானால் மரங்களை வெட்டும் இழிசெயலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்கிற விழிப்புணர்வு பெறாதது மிகவும் துரதிருஷ்டவசமானது.

இனியாவது மரங்களை வளர்ப்போம்:
வனங்களைக் காப்போம்.

இன்று (மார்ச் 21) உலக வன நாள்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *