POST: 2024-04-06T06:53:47+05:30

ஊர்ப்பெயர்’ ஆராய்ந்தவுனக்கு
ஊரும் பேருமே ஔவை!

தமிழ் வளர்ந்த இடங்களில்
எல்லாம் நீ வளர
உன்னால் ஆய்வுகள் மலர

‘கலவை’யில் இருந்தபோதும்
எந்தக்
கலவையிலும் ஒன்றாதவன்!
தமிழ்வாழ்வு குன்றாதவன்!

அண்ணா மலை தமிழ்ப்புலத்தின்
அகன்ற வளாகம்-தமிழரும்
அகன்ற ‘சைவ சமயத்தையும்
‘ஞானாமிர்தத்தை’யும்
ஞாலத்திற்கு அளித்தது!

அச்சில் வராத உன் நூல்கள்
குழந்தையின்
எச்சில் படாதத் தாயின்
கன்னங்களாகவே
தமிழுலகு நினைக்கிறது!

சேர மன்னர் வரலாறு
தமிழரிடம் போய்ச்
சேர உன் நூல் தான்
நன்னூலாய் அமைந்தது!

நிறைவாழ்வு வாழ்ந்தவுன்
மறைவு நாளில் வணங்குகிறோம்!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *