POST: 2024-04-16T09:56:35+05:30

‘அறிவுச் சுடர் அண்ணல் அம்பேத்கர்’ அவர்களின் 134ஆம் பிறந்த நாளான
14.04.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி அளவில்
தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில்
அண்ணல் அம்பேத்கரின் அறிவுக் கருவூலங்கள் எனும் தலைப்பில் முதற்கட்டமாகத்

தீண்டாமையும் மனித உரிமைகளுக்கான அறப்போராட்டங்களும்

(Untouchability and Satyagraha for Human Rights);

அரசியல் போராட்டங்களும் இந்துமத வெளியேற்ற முடிவும்

(Political Struggles-Decides to Renounce Hinduism);

அரசியல் சட்டப் போராட்டங்களும் பவுத்தமும்

(Constitutional Struggles and Buddhism);

இந்து மதத்தின் தத்துவமும் பொதுவுடைமைக்கான முற்படு தேவைகளும்

(Philosophy of Hinduism and Pre-requisites of Communism);

பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும், பவுத்தத்தின் வீழ்ச்சியும் சாதிகளின் தோற்றமும்

(Revolution and Counter-revolution in Ancient India. The Decline of Buddhism and Origin of Castes);

பண்டைய இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும் – இந்துமதத்தின் ஆதாரப் பகுதி சாதி தான்

(Revolution and Counter-revolution in Ancient India. Caste is one Essential Part of Hinduism);

சூத்திரர்கள் யார்? சூத்திரர்களுக்கு எதிரான பிராமணிய கருத்தியல் ஒடுக்குமுறை

(Who are the Shurdras? Brahminical ideological oppression against Shudras);

சூத்திரர்கள் யார்? சூத்திரர்கள் இழிநிலைக்கு தள்ளப்பட்ட வரலாறு

(Who were the Shudras? The Degradation of the Shudras);

தீண்டப்படாதவர்கள் யார்? அவர்கள் எவ்வாறு தீண்டப்படாதார் ஆயினர்?

(Who are the Untouchables? How they became untouchable?);

இந்தியாவில் சாதிகள் – இந்துமதச் சீர்திருத்தம்

(Castes in India-Hindu Reform)

என தொகுக்கப்பெற்ற பத்து தொகுதிகளைக் கூர்ந்தாய்வு மேற்கொள்ளும் பணி நடைபெற்றது.

இக்கூட்டத்தில்
புலவர் செந்தலை கௌதமன்,
முனைவர் மு. வளர்மதி,
திரு. அ. மதிவாணன்,
ஆகியோருடன் பங்கு கொண்டேன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *