POST: 2024-05-18T11:12:21+05:30

செருமனியில்
செந்தமிழ் மணக்கும் நூலகம்

புலம் பெயர்ந்து அயல்நாடுகளில் வாழும் தமிழர்கள் அவர்தம் குழுந்தைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுப்பதற்கு ஏதுவாக அடிப்படைத் தமிழ் இலக்கியம், இலக்கணம், தமிழ்ப் பண்பாடு மற்றும் மொழி வரலாறு குறித்த நூல்கள் அளித்து தமிழ்மொழியை மறக்காமல் அவரது தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் செருமனியிலுள்ள
முன்சென் தமிழ்ச் சங்கத்திற்கு தமிழ் நூல்கள் மற்றும் நிலைப்பேழைகள் வழங்கப்படும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 19.04.2022 அன்று
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பாகும்.

அவ்வறிவிப்பினை செவ்வனே செயற்படுத்தி
செருமனியிலுள்ள
முன்சென் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக தலைவர் திரு. செல்வகுமார் பெரியசாமி அவர்களின் ஒருங்கிணைப்பில் செந்தமிழ் மணக்கும் எழில் ததும்பும் நூல் நிலையம் 03.03.2024
ஞாயிற்றுக்கிழமையன்று திறப்பு விழா இனிதாக நடந்தேறியது.

நூலகத்தினை மாண்புமிகு மாநிலங்களவை உறுப்பினர் திரு. எம். எம். அப்துல்லா அவர்கள் நேரில் சென்று தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர்
முனைவர் வீ.ஜெயசீலன் இ.ஆ.ப., மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந. அருள் ஆகியோர் காணொளி வாயிலாக வாழ்த்து தெரிவித்தனர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *