POST: 2024-05-19T10:55:07+05:30

கடை சிலம்பு ஏந்தல்

முழு நிலவு நாளான 23.04.2024 செவ்வாய்க்கிழமையன்று கண்ணகி திருவுருவச் சிலைக்கு அரசு சார்பாக மலர் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது என் அருகில் இருந்த நண்பரிடம் இவர்களுடைய மரபினர் என்று சொல்லிக்கொண்டு யாரும் வர இயலாது என்று தெரிவித்தேன்.

அதற்கு அந்த நண்பர் வேறு ஒருவரை அறிமுகப்படுத்தி அவருடைய தலைமுறையாம் இவர்.

அவர் கண்ணகி மதுரையில் வாழ்ந்த இல்லத்தினுடைய சான்றுகளையும் ஒளிப்படத்தையும் உடனே எடுத்துக் காட்டினார்.
திகைத்தேன்.

தமிழ்க் கவிஞர் நாள் விழாவுக்காக மதுரைக்குச் சென்றபொழுது, 30.04.2024 அன்று விடியற்காலையில்

நாடுபோற்றும் தமிழாசிரியர் சந்திரன், நண்பர் கஜேந்திரபாபு, பொன்னேரி பிரதாப் ஆகியோருடன் கடச்சனேந்தல்
(கடை சிலம்பு ஏந்தல்) என்ற பகுதிக்குச் சென்ற பொழுது அருகிலிருந்தவர் முட்செடி சூழ்ந்த ஒரு சிறிய நிலப் பகுதியைச் சுட்டிக்காட்டி இதுதான் கண்ணகி, கோவலன் இறுதியாக வாழ்ந்த வீட்டின் நிலப்பகுதியாகும்.. இங்கே தான் கவுந்தியடிகள் அவர்கள் இருவரையும் மாதரி,ஐயயை அருந்துணையால் இருப்பிடம் கொடுத்து தங்கியிருந்த நிலப்பகுதியாகும்..

இங்கிருந்து தான் சினம் கொண்டு, பாண்டியர் அரண்மனைக்குச் சீற்றத்துடன் கண்ணகி ஒற்றைச்சிலம்புடன் சென்றார் என்று தெரிவித்தவுடன் வியப்பில் விழிகள் விரிந்தன.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *