POST: 2024-06-17T09:03:37+05:30

இனிய உதயம் –
மே மாத இதழ் – 2024

புலவர் ந செந்தலை கவுதமன் திருப்பூர்

உரைவேந்தர் அவ்வையாரும் உ.வே.சா.வும் !

ஐங்குறுநூறு நூலுக்கு உரை எழுதி வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டார்
அவ்வை சு .துரைசாமி .

செய்தி அறிந்த உவே.சா அவர்கள் பதிப்புரிமை அடிப்படையில் வழக்கு தொடர்ந்து .
அவ்வை சு துரைசாமி அவர்களின் நூல் வராமல் தடுக்க முயன்றார்.

தடை முயற்சியை அறிந்து வருந்திய உரைவேந்தர் அவ்வை அவர்கள்.

இதை முறியடிக்க ஏற்றவர் திராவிடர் இயக்கத் தளபதி திரு ஏடி பன்னீர் செல்வமே என அறிந்து .

தந்தை பெரியார் வழியாக அவரை அணுகினார்.

” உவே.சாமிநாதையர் வழக்கு போட்டால் எனக்காக வாதாட வேண்டும் ”
என்று அவ்வை கேட்டுக்கொண்டார்.

ஏடி பன்னீர் செல்வமும் இசைந்தார்.

அவ்வை சு துரைசாமி அவர்களுக்கு வாதாட ஏடி பன்னீர் செல்வம் வருகிறார் என்ற செய்தி காட்டுத் தீயாய்ப் பரவியது.

செய்தி அறிந்த உவேசா, திகைத்துப் போனார்.

பன்னீர்செல்வம் என்ற பெயரே பலரைக் கலங்க வைத்தது.

வழக்கு தொடரும் முயற்சியை உவே.சா, உடனடியாய்க் கைவிட்டார்.

வழக்கு மன்றம் செல்லாமல் காத்த திராவிடர் இயக்கமும் தந்தை பெரியாரும் ஏடிபன்னீர் செல்வமும்
அவ்வை சு துரைசாமி அவர்களின் நன்றிக்கு உரியோராயினர்.

பழைய பதிப்பில் 207 பக்கங்களே உடைய ஐங்குறுநூற்றுக்கு 1003 பக்கங்களில் நுட்பமான உரை வரைந்திருந்தார் உரைவேந்தர்

அவ்வை இப்போதும் அண்ணாமலை பல்கலைக் கழக வெளியீடாக அடக்க விலைக்கு அவ்வை உரையுடன் ஐங்குறுநூறு கிடைக்கின்றது.

திராவிடர் இயக்கத்தின் மேல் கொண்ட பேரீடுபாடு காரணமாகத் தந்தை பெரியாரின்
பெரிய ஓவியத்தைக் கண்ணாடிச் சட்டமிட்டு வீட்டில் மாட்டி வைத்திருந்தவர் சைவப்பழமாகிய உரைவேந்தர்.

தந்தை பெரியார் தலைமையேற்று நடத்திய முதலாவது மொழிப்போரான 1938 இந்தி எதிர்ப்புப் போரில் கருத்துப் பரப்புரையாளராகவும் அவ்வை திகழ்ந்தார்.

“ தமிழர் எழுச்சிக்குப் பாடுபடும் ” தமிழின முனிவர் – எனப் பெரியாரை இறுதிக்காலம் வரை பாராட்டிக்கொண்டிருந்தவர் அவ்வை சுதுரைசாமி –

தமிழன் வாழ்ந்தால் தட்டிக்கொடு
தமிழன் தாழ்ந்தால் முட்டுக்கொடு !

தாம் உரைத்த இந்த வாசகத்தைத் தமது வாழ்க்கை நெறியாக்கி வாழ்ந்து காட்டியவர் தந்தை பெரியார்.

ஆரியத்தால் வேய்ந்த
அழிவுரைகள் மாய்ந்தொழிய
வீரியத்தால் செந்தமிழை
வென்றெடுத்தார் – சீரியத்தால்
அவ்வை துரைசாமி

ஆய்ந்துபல நூலுரைகள்
செல்லியவாய் நேரியவாய்ச்
செய்து

– பாவலரேறு பெருஞ்சித்திரனார்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *