செய்தி வெளியீடு எண்: 1103
நாள்: 01.08.2024
செய்தி வெளியீடு
தகைசால் தமிழர் விருதிற்கு திரு. குமரி அனந்தன் அவர்கள் தேர்வு
சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தின்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களால் வழங்கப்படும்.
தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், தகைசால் தமிழர் என்ற விருதை உருவாக்கவும், இந்த விருதிற்கான விருதாளரைத் தேர்வு செய்திட ஒரு குழுவை அமைத்திடவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் கடந்த 2021-សំ ஆணையிட்டிருந்தார்கள்.
இந்த விருதினை கடந்த 3 ஆண்டுகளில்
திரு. சங்கரைய்யா அவர்கள், திரு.ஆர். நல்லகண்ணு மற்றும் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ்விருதிற்கான நடப்பாண்டு விருதாளரைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் (1.8.2024) நடைபெற்றது.
அக்கூட்டத்தில் இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, சட்டமன்ற உறுப்பினராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும்
காந்தி ஃபோரம் அமைப்பின் தலைவரும்
இலக்கியச் செல்வராகவும், இலக்கியக் கடலாகவும், எவரோடும் பகை கொள்ளாத பண்பாட்டுச் செம்மலாகவும் விளங்கும் திரு. குமரி அனந்தன் அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் இவ்வாண்டிற்கான தகைசால் தமிழர் விருதுக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டு அவருக்கு இவ்விருதினை வழங்க முடிவு செய்யப்பட்டது.
‘தகைசால் தமிழர் விருது’க்கு தேர்ந்தெடுக்கப்பட்ட
திரு. குமரி அனந்தன் அவர்களுக்கு, பத்து இலட்சம் ரூபாய்க்கான காசோலையும் பாராட்டுச் சான்றிதழும்
வருகிற ஆகஸ்ட் திங்கள் 15ஆம் நாள் நடைபெறும் சுதந்திர தின விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களால் வழங்கப்படும்.
வெளியீடு:
இயக்குநர். செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9

Add a Comment