தினமணி 10.7.24
சனிக்கிழமை
பக்கம். 8
அன்புள்ள ஆசிரியருக்கு
நாவலரின் ‘மன்றம்’
4-8-2024 தமிழ்மணி ‘
இந்த வாரம்’ பகுதியில்
நாவலர் நெடுஞ்செழியன் நடத்தி வந்த ‘மன்றம்’ இதழில் வெளியான கட்டுரைகள் தொகுக்கப் பட்டுள்ளனவா என்று கலாரசிகன் வினா எழுப்பியிருந்தார்.
தமிழ்நாடு அரசின் தமிழ் இணையக் கல்விக் கழகம் மாபெரும் பணிகளை மிக அமைதியாக நுட்பமாக ஆற்றி வருகிறது.
அதன் வலைதளத்தில் அரிய நூல்கள், இதழ்கள், சுவடிகள் பதிவேற்றம்
செய்யப்பட்டுள்ளன.
நாவலர் நெடுஞ்செழியன் நடத்திய ‘மன்றம்’ இலக்கிய இதழ்களைத் தொகுப்பாக
(1948 முதல் 1980 வரை 474 இதழ்கள்)
தமிழ் இணையக் கல்விக்கழக வலை தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
பதிவேற்றம் செய்யப்பட்ட நூல்களை வாசிப்பத்துடன் வாசகர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் இயலும்.
ஔவை அருள்,
சென்னை.
முழுமையான கடித விவரம்
பெருந்தகையீர்
வணக்கம்
சென்ற வாரம் (4.8.24) தினமணியில்
கலாரசிகன் பகுதியில்
ஆசிரியர் பெருந்தகை திருக்கோவிலூர் கபிலர் விழா சென்றிருந்தபோது அவருக்கு வழங்கப்பட்ட நாவலர் நெடுஞ்செழியன் அவர்களின் திருக்குறள் உரையினை குறித்து பாராட்டி எழுதியதோடு நிறுத்தாமல் அப்பாவைப் போலவே யாரிடமும் எப்போதும் எங்கும் தான் பேசி முடிக்கும் பொழுது ஒரு கேள்வியை முன் வைத்து மீண்டும்
அவ்வுரையை தொடங்குவது அவரின் நுட்பமான செயலாகும்…
அவ்வண்ணமே ஆசிரியர் திரு வைத்தியநாதன் அவர்கள்
நாவலர் வெளியிட்டு மகிழ்ந்த மன்றம் இதழ்கள் தொகுக்கப்பட்டுள்ளனவா என்று வினா தொடுத்து முடித்துள்ளார்..
மறுமொழி
தமிழ்நாடு அரசின் தமிழ் இணையக் கல்விக் கழகம் மாபெரும் பணிகளை மிக அமைதியாக நுட்பமாக ஆற்றி வருவதை
தமிழ் கூறு நல்லுலகம் நன்கறியும்…
பாவேந்தர் பாரதிதாசனின் பாடல்களை
வரி விடாமல் சொல்லுக்குச் சொல் இடைவெளி விட்டு பாடல்களை பரப்புரைச்செய்த நடமாடும் பல்கலைக்கழகம் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களின் மன்றம் இதழ்களை இணையக் கல்விக் கழக வலைதளத்தில் தொகுப்பாக 1948 முதல்1980 வரை 474 மன்றம் இதழ்களை பதிவேற்றம் செய்த பாங்கினை தினமணி இதழ் தன் பொன்னேடுகளில் பதிவு செய்யுமாறு வேண்டுகிறேன்
நன்மதிப்புடன்
ஒளவை அருள்
6.8.24

Add a Comment