செய்திப்பரல்
தினமணி கொண்டாட்டம் 18.08.2024
ஞாயிற்றுக்கிழமை
பக்கம் – 01
குன்றக்குடி ஆதினம் விதைத்த விதை
பள்ளத்தூர் பழ. பழனியப்பன்
சைவம், வைணவம் என்று இல்லை.
தமிழ் என்பதுதான் எனக்குத் தெரிந்தது.
‘வைணவ இலக்கியங்களுக்கு நிறைய உரைகள்
இருக்கின்றன.
திருமுறைகளுக்கு மிகக் குறைவாகவே விளக்கவுரைகள் இருப்பதால் திருமுறைகளுக்கு விளக்கம் எழுதுங்கள்.
நானே வந்து
வெளியிடுகிறேன்’ என்று அவ்வை நடராஜன் அன்புக் கட்டளை இட்டார்கள்.
அதற்கான அபூர்வமான தற்போது பதிப்பில் இல்லாத நூல்களை அவரே வரவழைத்துக் கொடுத்தார்.
சிவாலயம் மோகனும் நூல்களைத் தந்து ஆதரித்தார்.
அதை ஏற்றுக் கொண்டு
பெரிய புராணத்தில் இருந்து தொடங்கலாம் என்று முடிவு செய்தேன்.

Add a Comment