POST: 2024-08-26T08:06:39+05:30

செய்தி வெளியீடு

திரு.வி. கலியாணசுந்தரனார் அவர்களின் 141ஆவது பிறந்த நாள் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் வணக்கம் செய்தல்

26.08.2024

தமிழ் உரைநடையைப் பாமரரும் கேட்கும் வண்ணம் எளிமைப்படுத்தி, எழில் கூட்டி, வீறுகாட்டி, மிடுக்கு ஊட்டி வழங்கியவரும் உரைநடையின் பொருளில் புதுமை கண்டவரும் தமிழ்த்தென்றல் என அனைவராலும் போற்றப்படுபவருமான திரு.வி.கலியாணசுந்தரனார் அவர்களின் 141ஆம் பிறந்தநாள் 26.8.2024 திங்கள்கிழமையன்று அமைகிறது.

திரு.வி.க

(திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார்) அவர்கள் தற்போதுள்ள சென்னை மாவட்டம், மதுரவாயல் வட்டம். துண்டலம் கிராமத்தில் 26.08.1883 அன்று பிறந்தார்.

இவர் சென்னையில் இராயப்பேட்டையில் வெசுலிப் பள்ளியில் ஆறாம் வகுப்பு வரை படித்தவர்.

வெசுலிப் பள்ளியில் ஆசிரியராக இருந்த யாழ்ப்பாணம் நா.கதிரைவேற்பிள்ளை மற்றும் மயிலை தணிகாசல முதலியாரிடம் தமிழ்க்கல்வி கற்றவர்.

திரு.வி.க. அவர்கள் தேசபக்தன், திராவிடன், நவசக்தி போன்ற நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றியதன் மூலம் சிறந்த பத்திரிக்கையாளராகவும் தமிழ்நாட்டில் தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்துத் தொழிலாளர்களின் உரிமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டதன்மூலம் சிறந்த தொழிற்சங்கவாதியாகவும் “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்று 50 ஆண்டுகளில் அரசியல், சமுதாயம், சமயம் சார்ந்த 55 க்கு மேற்பட்ட நூல்களையும் எழுதி சிறந்த எழுத்தாளராகவும் தமிழுக்கு தொண்டாற்றியுள்ளார்.

தூய தமிழை உயர்த்தி பிடித்த திரு.வி.கலியாணசுந்தரனார் அவர்கள் சிறந்த மேடைப் பேச்சாளர்.

மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்,
பெண்ணின் பெருமை, வாழ்க்கைத் துணை, உள்ளொளி, உரை நூல்கள், பெரிய புராணம் குறிப்புரையும் வசனமும்,
முருகன் அல்லது அழகு, இலங்கைச் செலவு (பயணநூல்) போன்ற பல நூல்களையும், பாடல்களையும் எழுதியுள்ளார்.

இவரது படைப்பிலக்கியங்களில் இவரால் கையாளப்பட்ட தமிழ்நடையின் காரணமாக இவர் ‘தமிழ்த்தென்றல்’ என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டார்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த ‘தமிழ்த்தென்றல்’ திரு.வி. கலியாணசுந்தரனார்
அவர்களின் புகழைப் போற்றும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி
எல்லைக்குட்பட்ட மதுரவாயல் வட்டத்தில் அவர் பிறந்த ஊரான துண்டலம் கிராமத்தில்
அமைக்கப்பட்டுள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு அவருடைய பிறந்தநாளான
26.08.2024 திங்கள்கிழமை
காலை 10.00 மணிக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில், தமிழ்
வளர்ச்சித் துறையால் மாலை அணிவித்து, அவர்தம் திருவுருவப் படத்திற்கு மலர் வணக்கம்
நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், அரசு
அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

நிகழ்ச்சிக்கான
ஏற்பாடுகளைத் தமிழ் வளர்ச்சித் துறை மேற்கொண்டுள்ளது.

தமிழ் வளர்ச்சி இயக்குநர்

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9 .

திரு.வி.க.வுக்கு விரைவில் மணிமண்டபம். டி.ஆர்.பாலு எம்பி பேட்டி. – https://thegreatindianews.com/politics/hourly-for-the-mr-vk-sooninterview-with-dr-balu-mp

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *