POST: 2024-10-05T07:34:37+05:30

திருக்கயிலாயப் பரம்பரைத் தருமை ஆதீனத் திருமடத்தில் செம்பதிப்புச் செம்மல் விருது பெற்ற தமிழவேள் சிவாலயம் திரு.ஜெ.மோகன் அவர்களின் பாராட்டு விழா அழைப்பிதழ்

நாள் : 06.10.2024, ஞாயிற்றுக்கிழமை
நேரம் காலை 09:00 மணி

இடம் :தமிழ் இணையக் கல்விக்கழகக் கலையரங்கம் (அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் அருகில்) கோட்டூர்புரம், சென்னை.

திருக்கயிலாயப் பரம்பரைத் தருமை ஆதீனத் திருமடத்தில்

செம்பதிப்புச் செம்மல் விருது பெற்ற தமிழவேள் சிவாலயம் திரு.ஜெ.மோகன் அவர்களின் பாராட்டு விழா

பெருந்தகையீர் வணக்கம்,

திருக்கயிலாயப் பரம்பரைத் தருமை ஆதீனத் திருமடத்தில் தருமை ஆதீனம் 27ஆவது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தங்கள் திருக்கரங்களால் ஸ்ரீ சொக்கநாதர் பூஜை மடத்தில் தமிழவேள் சிவாலயம் திரு.ஜெ.மோகன் அவர்களின் பதிப்புப் பணியைப் பாராட்டி ஆவணி மூலத் திருநாளில் ‘செம்பதிப்புச் செம்மல்’ எனும் உயரிய விருதினை வழங்கி கௌரவித்து ஆசி அருளினார்கள்.

அதனைப் பாராட்டும்

பொருட்டு அறிஞர்களும், தமிழகத்து பெருமக்களும் விழைந்ததன் வண்ணம், 06.10.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 09:00 மணிக்கு ‘தமிழ் இணையக் கல்விக் கழகக் கலையரங்கில்’ பாராட்டு நன்மங்கலப் பெருவிழாவினை ஏற்பாடு செய்துள்ளோம்.

அறிஞர் பெருமக்கள் பலர் கலந்து கொண்டு சிவாலயம் திரு.ஜெ.மோகன் அவர்களைப் போற்றி நிகழ்ச்சி நிரலில் உள்ள வண்ணம் பங்கேற்க இசைந்துள்ளார்கள்.

இவ்வினிய விழாவில் தாங்களும் கலந்துக் கொண்டு விழாவிற்கு பெருமை சேர்க்க வேண்டுகிறோம்.

அன்புடன்,

மாண்பமை நீதியரசர் திரு. எஸ்.ஜெகதீசன்

தலைவர் சேக்கிழார் ஆராய்ச்சி மையம்.

காலை 09:00 – 10:00

: திருமுறை விண்ணப்பம் ‘பண்ணிசைப் பேரறிஞர்’ திரு. பா.சற்குருநாத ஓதுவார் குழுவினர்

காலை 10:00-01:00

: பாராட்டரங்கம்

இறைவணக்கம்

முனைவர் ஞா.கற்பகம்

வரவேற்புரை

நீதியரசர் திரு. எஸ். ஜெகதீசன் தலைவர், சேக்கிழார் ஆராய்ச்சி மையம்

அறிமுக உரை

வழக்கறிஞர் திரு. அ.க. இராஜாராமன் துணைச்செயலாளர், சேக்கிழார் ஆராய்ச்சி மையம்

ஆசியுரை

: திருக்கயிலாய பரம்பரை மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் திருமடம் இருபதாம் பட்டம்

திருக்கயிலாய பரம்பரை திண்டுக்கல் சிவபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு தேசிய பரமாச்சாரிய சுவாமிகள்

தலைமை

திரு. டி.எஸ்.தியாகராசன் அறங்காவலர், சேக்கிழார் ஆராய்ச்சி மையம்

முன்னிலை

திரு. ஏ.ஆர். சந்தானகிருஷ்ணன் தலைவர், ரசிக ரஞ்ஜனி சபா, சென்னை

மகிழ்வுரை

‘பெரும்பாண நம்பி’ மா.கோடிலிங்கம்

எழிலுரை

முனைவர் அரங்க.இராமலிங்கம் மேனாள் தலைவர், தமிழ்மொழித் துறை. சென்னைப் பல்கலைக்கழகம்

சிறப்புரை

‘திருமந்திரத் திலகம்’ முனைவர் மா.கி. இரமணன் நிறுவுநர், பாரதி பாசறை, திருவொற்றியூர்

வாழ்த்துரை

முனைவர் ஔவை ந. அருள் இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ்நாடு அரசு

முனைவர் தெ.ஞானசுந்தரம் மேனாள் துணைத் தலைவர், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்

திரு. ஏ.எம்.சுவாமிநாதன், இ.ஆ.ப. (பணிநிறைவு), துணைத் தலைவர், சேக்கிழார் ஆராய்ச்சி மையம்

‘கவிஞர் திலகம்’ திரு. மலர்மகன்

இணைச்செயலாளர், கம்பன் கழகம், சென்னை முனைவர் உலகநாயகி பழனி

தலைவர், பாரதியார் சங்கம், சென்னை

ஏற்புரை

தமிழவேள் சிவாலயம் திரு.ஜெ.மோகன்

செயலாளர், சேக்கிழார் ஆராய்ச்சி மையம்

நன்றியுரை

ஆசிரியர் திரு. கோ. மணி

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *