உலகச் செம்மொழித் தமிழ்ச் சங்கம்
சென்னை -600023
பாராட்டு விழா
நாள்/நேரம் : 6.10.2024 காலை 9.45 மணியளவில் இடம் : பிரெசிடென்சி கிளப், முத்து அரங்கம், எத்திராசு சாலை, எத்திராசு கல்லூரி எதிரில் எழும்பூர், சென்னை -600008.
பிரான்சு நாட்டில் தமிழ்மொழி மற்றும் பண்பாட்டு வளர்ச்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் ஒரு தமிழுறவுப் பாலமாகத் திகழும் பிரான்சு தமிழ்ச் சங்கத்தின் பொதுச்செயலாளர்
திரு. கோகுலன் கருணாகரன் அவர்களின்
ஒப்பற்ற தமிழ்த் தொண்டுகளைப் பாராட்டித் “தமிழ்ப் பண்பாட்டுச் செம்மல்” விருது வழங்கப்படுகிறது.
சிறப்பு விருந்தினர் முனைவர் ஔவை அருள்
இயக்குநர்.
தமிழ் வளர்ச்சித்துறை தமிழ்நாடு அரசு
தமிழறிஞர்கள். கல்வியாளர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள். பதிப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.
நிகழ்வில் கலந்துரையாடலில் பங்கேற்க இலக்கியவாணர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்!
செம்மொழிக்கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு
அச்சுத்துறை வல்லுநர் திரு.ப. சந்தர்
காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை சிற்றுண்டி உண்டு!
தினமலர் 7.10.2024
*பிரான்சு தமிழ்ச் சங்கத்தின் பொதுச்செயலாளர் கோகுலன் கருணாகரனுக்குப் பாராட்டு விழா!*
கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு தலைமையில் திரு.கோகுலன் கருணாகரனுக்கு உலகச் செம்மொழித் தமிழ்ச் சங்கம் நடத்திய பாராட்டுவிழா 6.10.2024 அன்று சென்னையில் மிகச் சிறப்பாக நடந்தது. தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஒளவை அருள், திரு.கோகுலன் கருணாகரனுக்கு “தமிழ்ப்பண்பாட்டுச் செம்மல்” விருதினை வழங்கினார். அறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் பலரும் வந்திருந்து விழாவைச் சிறப்பித்தனர். மேனாள் நூலகத்துறை இயக்குனர் திரு.ந.ஆவுடையப்பன், அச்சுத்துறை வல்லுநர் திரு.ப.சந்தர், திரு. தாயுமானவர் (மறைமலையடிகள் பேரன்) உள்ளிட்ட பல ஆளுமைகள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
அன்புடன்
கவிஞர் மெய்ஞானி

Add a Comment