POST: 2024-10-12T11:02:21+05:30

அண்ணலைப் பறிகொடுத்தோமே!

3497 தாரகை அண்ணா நகர் (கிழக்கு) வருவதற்கு முன்,

பெற்றோர்கள் இராயப்பேட்டை,
10 பெசன்ட் தெருவில் முதல் தளத்தில் குடியிருந்த பொழுது,

தரைத்தளத்தில் நினைவில் வாழும் வழக்கறிஞர் நல்லியண்ணன் தன் குடும்பத்தோடு தங்கியிருந்தார்.

அன்றாடம் மாலை வேளையில் அண்ணல் முரசொலி செல்வம்,
மாண்புமிகு அமைச்சர் துரைமுருகன்,
நண்பர்கள்,
மேலும் இருவரும் எப்போதும் வந்து அரட்டை அரங்கத்தை அறிவரங்கமாக நடத்தும் பொழுதெல்லாம் எந்தையார் பங்கு கொண்டதைப் பலமுறை சொல்லி மகிழ்ந்துள்ளார்.

தமிழறிஞர்களின் மரபு வழியினருக்கு மருத்துவப் படிப்பில் இணைவதற்குத் தனிநிலை மதிப்பெண் வழங்கப்பட்ட நேர்வில், முத்தமிழறிஞர் கலைஞரின் பெயர்த்திக்குப் புரட்சித் தலைவர் ஆட்சியில் இடம் கிடைத்த பொழுது, அண்ணாநகர் இல்லத்திற்கு நேரில் வந்து நன்றி தெரிவித்தவர் அண்ணல் முரசொலி செல்வமாவார்…

முத்தமிழறிஞர் கலைஞர் போற்றி வளர்த்த செல்வம் …

சிந்தனையாளர் முரசொலி மாறன் அவர்களின் இனிய இளவல்!

ஊடகவுலகில், புள்ளி விவரங்களை தெளிவாக அடுக்கிச் சொல்லும் ஊற்றுக் கண்ணான
அண்ணல் முரசொலி செல்வம் மறைந்த செய்தி துயரச் செய்தியாகும்….

எந்த வேறுபாடும் எவரிடமும் காட்டாமல் பரிவுடன் பழகியவர், ஆற்றல் திலகமாக வாழ்ந்தவர் மறைந்தார் என்ற செய்தியறிந்து 11.10.2024 வெள்ளிக்கிழமையன்று மாலை புகழ் வணக்கம் செலுத்தினேன்…

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *