அமைதி, பொறுமை, வாய்மை என்ற அடிப்படை இயல்புகளோடு வளர்ந்தவர் என் அருமை இளவல் சீனிவாசன்.
அவரின் தாயாரின் தொடர் கண்காணிப்பில் வளர்ந்தாலும் பள்ளிக்கல்வியில் ஆர்வம் காட்டாமல் சுணக்கமாக இருந்த பருவத்தில் எங்கள் பெற்றோரின் அண்ணா நகர் இல்லத்தில் வைத்துக் கொள்ளுங்கள் என்று அவர்கள் தாயார் கேட்க எந்தையார் என்னிடம் உன் தம்பி போல் பேணுக என்றார்…
1989 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை யான் பணியாற்றிய கிளியா விளம்பர நிறுவனத்தில் சீனிவாசன் என் குதியுந்து ஓட்டுனராகவும், அலுவல் உதவியாளராகத் தொடங்கி மக்கள் தொடர்புப் பணியில் அலுவலர் நிலைவரை படிப்படியாக வளர்ந்து அனைத்து ஊடக நண்பர்கள் மத்தியில் சீனு, சீனு என்று அன்பாக அனைவரும் அழைக்கும் வண்ணம் பண்பாளராக மிளிர்ந்தார்..
தான் பெற்ற நீண்ட அனுபவத்தில் புத்தாயிரத்திற்க்குப் பிறகு ஊடகயுலகில் தனித்து JK PR என்ற நிறுவனத்தை தொடங்கி தங்கு தடையின்றி அயராத உழைப்பால சோர்வின்றி வளர்ந்து செம்மாந்தமாய் சொந்த அலுவலகத்தைக் கொண்டு தன்னுடைய பணியாளர்களுக்குத் திங்கள் தவறாமல் சம்பளம் வழங்கும் முதலாளியாகவும் ஊடக
நண்பர்களுக்கும் வணிக உறவினை மெருகேற்றும் அன்பர்களுக்கும் பரிவாக பரிசில்களை ஈந்தும் புரவலராகவும் ஓங்கி வளர்ந்திருக்கும் என் இனிய
இளவல் சீனிவாசனை மீனம்பாக்கத்தில் அமைந்துள்ள புதிய அலுவலகத்தில் 18.10.24 வெள்ளிக்கிழமை மாலை அவரிடம் எதுவும் சொல்லாமல் சென்று கண்டு பேசியதில் எல்லையில்லாத மகிழ்ச்சியில் திளைத்தோம்…
அப்பா அடிக்கடி என்னிடம் சொல்வார்
நாம் வளர்வது போலவே நம்மிடம் இருந்தவர்கள் பெருமிதமாக வளர்ந்து ஓங்கி வளர்வதைக்காண்பது தான் பெரு மகிழ்ச்சி என்பார்கள்..
தம்மின் தம் மக்கள் அறிவுடைமை
என்ற இனிதான திருக்குறள்
சிந்தையெலாம் பரவியது.
Add a Comment