எந்தையாரின்
(ஔவை நடராசன்) அவர்களின் இனிய நண்பர் திரு .மலைச்சாமி இஆப
உயர் அலுவலராக பணியாற்றினாலும்
தமிழிலக்கியத்தில் பேரார்வம் கொண்டவர்.
தமிழாய்ந்த பல கூட்டங்களில் பல்வேறு மேடைகளில் அப்பாவுடன் நெடுநேரம் பேசிக் கொண்டிருப்பவர்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் யான் முதுகலை தமிழிலக்கியம் பயிலும்போது(1990) சென்னை மெரினா கடற்கரையில்
நடை பயிற்சிச் சங்கத்தின் மனமகிழ் நிகழ்ச்சியினை கல்வித்தந்தை என்று போற்றப்படும் அண்ணல் ஜேப்பியார் ஒருங்கிணைப்பில் பேரறிஞர் அண்ணாவைக் குறித்து ஒரு அருமையான பட்டிமன்றம் கடற்கரையிலேயே பெரிய பந்தல் அமைத்து நிகழ்ச்சி நடந்த போது தலைமை விருந்தினராக சட்டப்பேரவைத் தலைவராகவும், அமைச்சராகவும் திகழ்ந்த திரு கா ராஜாராம் அவர்களும் மேடையில் வீற்றிருந்தபொழுது
பட்டிமன்ற நடுவராக
திரு மலைச்சாமி இ ஆ ப அவர்களின் தலைமையில் உரையாற்றும் பெரும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றேன்.
பேரறிஞர் அண்ணாவைக் குறித்து அருந்தமிழில் அவருடைய பல மேற்கோள்களை உரையின்போது நான் பேசியதை கேட்டு
திரு மலைச்சாமி அவர்கள் பாராட்டிச் சொன்னதை என் நினைவில் பசுமையாக விரிகிறது.
அழுத்தம் திருத்தமாக பேசுவதும்
தன் கருத்துக்களை ஆழப்பதிகிற வகையில் உரையாற்றும் சிறந்த மேடைப் பேச்சாளரான திரு மலைச்சாமி இ ஆ ப அவர்களின் மறைவு துயரம் அளிக்கிறது.
Add a Comment