POST: 2024-12-21T05:18:19+05:30

எங்கும் தமிழ்

எதிலும் தமிழ்

தமிழ் வளர்ச்சித்துறை

இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை

2024-2025

அழைப்பிதழ்

15.12.2024-21.12.2024

உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகம், மதுரை.

வாழ்த்துப்பா

பேரன்புப் பெருந்தகையீர்!

வணக்கம்

தென்னகத்தின் தொன்னகரும் தேமதுரத் தமிழ்விளங்கும் பொன்னகரும் ஆகிப் புகழ்பூத்துக் குலுங்கும் நான்மாடக் கூடலில், இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறையின் எழுச்சிமிகு விழா மலர்கிறது.

பரங்குன்றும் வையையும் பாரில் உள்ளளவும் நிறங்குன்றாதிருக்கும் எம் நித்திலத் தமிழ் என்று. நிமிர்ந்துரைக்கும் நேரிய தலைமுறை ஒன்றை நீடுருவாக்க வேண்டும் என்பதே தமிழ்நாட்டரசின் தலையாய கொள்கை.

சிந்தை செய்வது செந்தமிழே’ என்று நந்தம் இளந்தமிழர் நாவாடக் கற்கவும். நற்றமிழ்க் கலைகளின் நளினங்கள் தேர்ந்து நல்வழி நிற்கவும், துணைநலத் தோன்றலாய் நின்று தொண்டியற்றி மகிழ்வதே தமிழ் வளர்ச்சித் துறையின் தகைசான்ற குறிக்கோள்

கடலுக்கும் அலைதந்து கனலுக்கும் சுடர்தந்து மலருக்கும் மணம் தந்து மகிழ்விக்கும் மாண்புறு மனிதர்களை மலர்விக்க வேண்டும் என்பதே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தணியாத வேட்கை

இவை அனைத்தையும் இதயத்தில் ஏந்தி ஏழிசைத் தமிழ்கொண்டு ஏழுநாள் விழாக்கண்டு தமிழ்மணக்கக் காத்திருக்கிறது. மல்லிகை மாநகராம் மாமதுரைப் பெரும்பதி.

நாவுக்கரசென்னும் நாவிறு பெற்ற நாவலர்கள், பொங்குமலர்க் கமலத்தின் புதுமதுவோ வேறெதுவோ எனமயங்கச் செய்விக்கும் பாவலர்கள், ஈர நன்மதுரப் பதம்பேசும் இலக்கியவாணர்கள், செம்மாப்பு மிக்க செம்மதிச் செல்வர்கள் பற்பலரும் கூடிப் பயன்விளைக்க வருகிறார்கள்

பூமழை பொழிந்து தேன்மழை வழிந்து உள்ளமெலாம் களிகொள்ள ஓடிப் பெருகிவரும் உற்சாகத் தமிழ்விழாவில், புலன்கள் புலர்விக்கும் புத்தமுதப் பெருவிழாவில், ஏழு நாள் இலக்கியப் பயிற்சிப் பட்டறைக்கு அருந்தமிழ்ப் பற்றாளர்களான கல்லூரிகளில் பயிலும் இளந்தமிழர்களை அன்புடன் அழைக்கின்றேன்.

ஔவை ந. அருள்

தமிழ் வளர்ச்சி இயக்குநர்

நாள் 7

21.12.2024- சனிக்கிழமை

மு. ப. 10.00-10.45

கலைவடிவம்

: நாடகம் எனும் நடிகர் இ.வி.கணேஷ் பாபு திரைப்பட இயக்குநர். சென்னை

மு. ப. 10.45-11.30

அயலகத் தமிழ்

: ஆசிரியர் மா அர்ச்சுனன் கல்வி அமைச்சு, சிங்கப்பூர்

மு. ப. 11.45-12.30

பேச்சுக்கலை : கவிஞர் இராஜகம்பீரன் அப்பாஸ் திரைப்பட இணை இயக்குநர். சென்னை

பி.ப. 12.30-0115

மொழி காப்போம் இனம் காப்போம் : கவிஞர் பே.ராஜேந்திரன் தலைவர் பொதிகைத் தமிழ்ச் சங்கம், திருநெல்வேலி

பி.ப. 01.15-02.00

இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர் : இளைய சிலம்பொலி அருணை மா மதன்குமார் சென்னை

பி.ப. 02.45-03.15

இணையத்தமிழ் பயன்பாடுகள் சிந்தனைகள் : எழுத்தாளர் தேனி மு.சுப்ரமணி முத்துக்கமலம், மின்இதழ்

பி.ப. 03.15-04.00

சான்றிதழ் வழங்கி நிறைவுரை : ஔவை ந.அருள் இயக்குநர். தமிழ் வளர்ச்சித் துறை

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *