முக்கடல் சூழும் குமரி முனையில்
அய்யன் திருவள்ளுவர் சிலை
வெள்ளி விழா
30.12.2024 – 1.1.2025
முக்கடல் சூழும் குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா
அய்யன் திருவள்ளுவர் சிலையை விவேகானந்தர் பாறையுடன் இணைக்கும் கண்ணாடி இழைப் பாலம் திறப்பு
வெள்ளி விழா சிறப்பு மலர் வெளியிடுதல்
திருக்குறள் கண்காட்சி தொடங்கி வைத்தல்
அய்யன் திருவள்ளுவர் தோரணவாயில் அடிக்கல் நாட்டுதல்
அன்புடையீர் வணக்கம்,
நிகழும் திருவள்ளுவர் ஆண்டு 2055, மார்கழித் திங்கள் 15 முதல் 17 வரை (30.12.2024 – 1.1.2025) முக்கடல் சூழும் குமரிமுனைக் கடல் நடுவே முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் 133 அடி உயரமுடைய அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் வெள்ளி விழா மூன்று நாள்கள் கொண்டாடப்படுகிறது.
இவ்விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாண்புமிகு மேயர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தமிழ் அறிஞர்கள், சீர்மிகு பெருமக்கள் பங்கேற்றுச் சிறப்பிக்கிறார்கள்.
தாங்கள் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்
இரண்டாம் நாள் நிகழ்ச்சி
31.12.2024 செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணி
தமிழ்த்தாய் வாழ்த்து
திரு. நா.முருகானந்தம், இ.ஆ.ப., அவர்கள்
வரவேற்புரை
தலைமைச் செயலாளர்
முன்னிலையுரை
தவத்திரு
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள்
கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்
அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலை
வெள்ளி விழாச் சிறப்பு மலரை வெளியிட்டு
திருக்குறள் சார்ந்த போட்டிகளில்
வெற்றி பெற்ற மாணவர்களுக்குப்
பரிசுகள் வழங்கி விழாப் பேருரை
திருக்குறள் இசை நிகழ்ச்சி
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள்
பியானோ இசைக் கலைஞர்
செல்வன் லிடியன் நாதஸ்வரம் அவர்களின்
திருக்குறள் இசை நிகழ்ச்சி
நன்றியுரை
திருமதி ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர், கன்னியாகுமரி மாவட்டம்
கருத்தரங்கம்
செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணி
தலைமை
திரு. தங்கம் தென்னரசு அவர்கள்
மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்
பேராசிரியர் அ.கருணானந்தன் சமகாலத்தில் வள்ளுவர்
புலவர் செந்தலை ந.கவுதமன் வள்ளுவம் போற்றும் சமய நல்லிணக்கம்
திரு. கரு.பழனியப்பன் வள்ளுவம் காட்டும் அறம்
திரு. ஆர்.பாலகிருஷ்ணன் இ.ஆ.ப., (ப.நி.) திருக்குறளும் சங்க இலக்கியமும்
வழக்கறிஞர் அருள்மொழி திருக்குறள் போற்றும் மகளிர் மாண்பு
பேராசிரியர் விஜயசுந்தரி திருக்குறளில் இசை நுணுக்கம்
Add a Comment