திருக்குறள் முற்றோதலில் பங்கேற்க குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும்

தினமணி 26.1.2025
ஞாயிற்றுக்கிழமை
பக்கம் 6

திருக்குறள் முற்றோதலில் பங்கேற்க குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும்

தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை ந.அருள்

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சியில் மாணவர்களை பங்கேற்கச் செய்யும் வகையில் பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும் என தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஒளவை ந.அருள் வலியுறுத்தினார்.

சென்னை பல்கலைக்கழக திருக்குறள் ஆய்வு மையம்,
உலகத் திருக்குறள் மையம் ஆகியவை சார்பில் திருக்குறள் உலக நூல் என்ற தலைப்பில் திருக்குறள் உலக சாதனை 2025 மாநாடு பல்கலை. வளாகத்தில் சனிக்கிழமை நடை பெற்றது.

இதில் திருக்குறள் ஆய்வு மையத்தின் தலைவர் பேராசிரியர் வாணி அறிவாளன் வரவேற்றார்.

தமிழ்மொழித் துறைத் தலைவர் ய.மணிகண்டன் தலைமை வகித்தார்.

உலகத் திருக்குறள் மையத்தின் தலைவர் பேராசிரியர் கு.மோகனராசு நோக்கவுரையாற்றினார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக ஔவை ந. அருள் பங்கேற்று மாநாட்டு மலரை வெளியிட்டுப் பேசியதாவது:

கன்னியாகுமரியில் கடந்த டிசம்பர் மாதம் 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு வெள்ளிவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அதில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக திருக்குறள் சார்ந்த நூல் கண்காட்சியும் உலகெங்கும் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைகளின் கணினி காட்சியும் இடம்பெற்றது.

நமது நாட்டில் உள்ள 26 மொழிகளில் வெளியான திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்களும், உலகளவில் 26 மொழிகளில் வெளியிடப்பட்ட திருக்குறள் நூல்களும் கண்காட்சியில் இடம்பெற்றது பெரும் வரவேற்பை பெற்றது.

உலகப் பொதுமறையாக விளங்கும் திருக்குறளில் உள்ள கருத்துகளை மாணவ, மாணவியர் அறிந்துகொண்டு கல்வி அறிவுடன் நல்ல ஒழுக்கம் மிக்கவர்களாக விளங்கச் செய்யும் வகையில் 1330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் திறன் பெற்ற மாணவ, மாணவியருக்கு
ரூ.15 ஆயிரம் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் ஆண்டுதோறும் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பெற்று வருகிறது.

இந்த முற்றோதலில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆண்டுதோறும் 100 முதல்150 மாணவர்கள் வரை பங்கேற்று வந்த நிலையில், பரிசுத் தொகை உயர்த்தப் பட்டதால் தற்போது அந்த எண்ணிக்கை 350-ஆக அதிகரித்திருக்கிறது.

இந்த எண்ணிக்கை அடுத்து வரும் ஆண்டுகளில் ஆயிரமாக அதிகரிக்க இதுபோன்ற திருக்குறள் மாநாடுகள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

பெற்றோர்களும் தங்களது குழந்தைகளுக்கு திருக்குறள் குறித்து பயிற்சியளித்து முற்றோதலில் பங்கேற்கச் செய்ய வேண்டும் என்றார் அவர்.

மாநாட்டில் ‘உலகச் சான்றோர்களின் பார்வையில் உலகப் பொதுமறை’ என்ற தலைப்பில் பேராசிரியர் ப.விமலா அண்ணா துரை, ‘அயோத்திதாச பண்டிதர் பார்வையில் திருக்குறள்’ என்ற தலைப்பில் பேராசிரியர் அரங்க. மல்லிகா உள்ளிட்டோர் உரையாற்றினர்.

சென்னைப் பல்கலைக்கழகம் -திருக்குறள் ஆய்வு மையம்

மற்றும்

உலகத் திருக்குறள் மையம்

இணைந்து நிகழ்த்தும்

திருக்குறள் உலகச் சாதனை மாநாடு – 2025

பொருண்மை: ‘திருக்குறள் உலக நூல்”

நாள் & நேரம்: 25.01.2025, சனிக்கிழமை – முற்பகல் 10.00 மணி

இடம்: பவளவிழா அரங்கம், மெரினா வளாகம், சென்னைப் பல்கலைக்கழகம்.

வரவேற்புரை:

முனைவர் வாணி அறிவாளன்

உதவிப் பேராசிரியர், தமிழ்மொழித் துறை, தலைவர் (பொ) திருக்குறள் ஆய்வு மையம்.

நோக்கவுரை:

பேராசிரியர் கு. மோகனராசு தலைவர் உலகத் திருக்குறள் மையம்.

தலைமையுரை:

பேராசிரியர் ய. மணிகண்டன்

தலைவர் – தமிழ்மொழித் துறை

சிறப்புரை:

முனைவர் ஔவை ந. அருள்

இயக்குநர் – தமிழ் வளர்ச்சித் துறை, இயக்குநர் (முழுக் கூடுதல் பொறுப்பு), உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை

மாநாட்டு ஆய்வுக்கோவை வெளியீடு

நூல் வெளியிட்டு வாழ்த்துரை

: பேராசிரியர் கோ. பழனி

இயக்குநர் – மெரினா வளாகம்

நூல் பெற்று வாழ்த்துரை:

பேராசிரியர் ஆ. ஏகாம்பரம் தலைவர் – தமிழ் இலக்கியத்துறை.

நன்றியுரை:

செல்வன் ச. சிவக்குமார் – முதுகலை மாணவர்

நிகழ்ச்சித் தொகுப்பு: திரு

கோ. மணிகண்டன் – முனைவர் பட்ட ஆய்வாளர்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *