
இந்த நினைவு நாளை (3.4.2025) வியாழக்கிழமை என் சித்தப்பா டாக்டர் ஒளவை மெய்கண்டார் மதுரை மாநகரில் 1000 பேருக்கு உணவளிக்கும் வகையில் அமைத்திருக்கிறார்.
கம்ப இராமாயணத்தில் குகனுக்கு இலக்குவனின் தாயை அறிமுகப்படுத்தும்
“உளன் எனப் பிரியா தான் ஒரு தம்பி”
என்ற தொடர் தான் என்னை உருக வைக்கிறது என்று அப்பா அடிக்கடி சொல்லக் கேட்டு இருக்கிறேன்.
ஈடில்லா பேராசிரியர்களான திருமதி.நிர்மலா மோகன்(28.2.2018),
நினைவில் வாழும் பேராசிரியர் கு சிவமணி (25.2.2020)
மாநிலக்கல்லூரி முதல்வர் பேராசிரியர் இராமன் (15.2.2021)
பெரும்பேராசிரியர் முனைவர்
சோ ந கந்தசாமி எழுதிய உரைவேந்தரின் உரை மாட்சி
நூல் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நிறுவப் பெற்றுள்ள ஒளவை துரைசாமி அறக்கட்டளை வாயிலாக (18.3.25)அன்று வழங்கப்பட்டது.
அடடா ஈதென்ன ஆண் ஒளவை என வியப்பா !
ஏடும் எழுத்துமாக வாழ்ந்து பீடும் பெருமையும் அணி செய ஒளவையின் வாழ்வு மிளிர்ந்ததை நினைவு கூர்கிறோம் .
வாழ்வில் அவர் தொடங்கிய முதற்பணி
உரை வரைதல் தான் ,
அவருடைய நிறைவுப்பணியும் திருவருட்பா உரை தான் .
நற்றிணை ,
ஐங்குறுநூறு ,
பதிற்றுப்பத்து,
புறநானூறு ஆகிய சங்க நூல்களும்
சிவஞானபோதம்,
ஞானாமிர்தம், திருமுறை ,
திருப்பதிக உரைகள் ,சன்மார்க்க உலகுக்கு கொடையாக வழங்கிய திருவருட்பா உரையும் எண்ணினால் அறுபதாயிரம் பக்கங்களைத் தாண்டும்.
அவர் வாழ்வின் பயன் இலக்கிய விளக்கமாகவே அமைந்தது.
சங்க இலக்கியங்களுக்கு உரை கண்டதற்கு ஓர் அரியணையும்.
சைவ சித்தாந்த நூல்களுக்கு உரை விளக்கம் வழங்கியதற்கு இரண்டாம் அரியணையும்
சமுதாய வரலாற்றுக் கல்வெட்டுப் பொருண்மைகளுக்கு விளக்கம் வரைந்ததற்கு மூன்றாம் அரியணையும்,
சன்மார்க்க மாமலையாகத் திருவருட்பாவுக்குப் பேருரை எழுதியதற்கு நான்காம் அரியணையும்
என நான்கு அரியணையில் ஏற்றி, உரைவேந்தரைப் ” பேருரை விளக்கப் பெரும்புலவர் “
என்று தமிழ் உலகம் போற்றுகிறது.
ஒளவை துரைசாமியின் அளப்பெரும் புகழ், என்றும் நம்மைக் களிப்பில் ஆழ்த்தும்!
என் சித்தி திருமதி சீதை மெய்கண்டான் உரைவேந்தரை குறித்து கவிஞர் மீரா எழுதிய பாடலை பண்ணிசைத்துப் பாடுவதையும் பதிவேற்றியுள்ளேன்
—– ஔவை அருள்

சித்தாந்த கலாநிதி எனச்சிறப்புற்றவர்.மதுரைத் தியாகராசர் கல்லூரியில் அவரிடம் தமிழ் முதுகலை பயின்றவர்கள் என்ற பெருமிதம் எம் அணியினர்க்கு (1965-67) எப்போதும் உண்டு. ம.பெ.சீனிவாசன்.
Add a Comment