நீயே பாடல் சான்ற பழிதபு சீறடி
எனப்பாலை பாடிய பெருங்கடுங்கோவின் நற்றிணைப் பாடல்,
இருநூற்(று) ஐம்பத்து ஆறு
தாயே தமிழே எனத் தகத்தகாயமாக ஒளிரும் பொருண்மைகளைப் பொருத்தி வரும் உலகத் தமிழிதழ் இருநூற்(று) ஐம்பத்து ஆறு
நீயே பாடல் சான்ற பழிதபு சீறடி
எனப்பாலை பாடிய பெருங்கடுங்கோவின் நற்றிணைப் பாடல்,
இருநூற்(று) ஐம்பத்து ஆறு
தாயே தமிழே எனத் தகத்தகாயமாக ஒளிரும் பொருண்மைகளைப் பொருத்தி வரும் உலகத் தமிழிதழ் இருநூற்(று) ஐம்பத்து ஆறு
உலகு கிளர்ந்தன்ன
உருகெழு வங்கம்
எனத் தொடங்கும் மதுரை மருதன் இளநாகனாரின் அகநானூற்றுப் பாடல் எண்
இரு நூற்(று) ஐம்பத்(து)ஐந்து;
அணித்தமிழ்ச் சொற்களால் அணியம் செய்து அறிவன் தோறும்
அருகில் வரும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) ஐம்பத்(து)ஐந்து.
வண்டல் தைஇயும்
வரு திரை உதைத்தும் எனத் தொடங்கும்
உலோச்சனாரின் நற்றிணைப் பாடல் இரு நூற்(று) ஐம்பத்து நான்கு;
கண்டார் மயங்கும் கவினார்ந்த வண்ணப் படங்களுடன் தண்டார் தமிழில் வரும்
உலகத் தமிழிதழ்
இருநூற்(று) ஐம்பத்து நான்கு
கல்லென்று தந்தை கழற எனத் தொடங்கும் நாலடியார் பாடல் இருநூற்று ஐம்பத்து மூன்று;
வெல்லத் தமிழ்க் கட்டுரைகளைத் தாங்கி வரும் உலகத்தமிழிதழ் இரு நூற்று ஐம்பத்து மூன்று.
” நகுகம் வாராய் பாண ! பகுவாய் அரிபெய் கிண்கிணி ஆர்ப்ப, தெருவில் தேர்நடை பயிற்றும் தேமொழிப் புதல்வனைப்” பாடும் மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையாரின் நற்றிணைப் பாடல் எண் இருநூற்(று) ஐம்பது;
வளர்நடைத்தமிழில் தடைபல கடந்து, தடம்பதித்து, வலம்வரும்
உலகத் தமிழிதழ் எண்,
இருநூற்(று) ஐம்பது.
இரும்பின் அன்ன கருங்கோட்டுப் புன்னை
எனத் தொடங்கும் உலோச்சனாரின் நற்றிணைப் பாடல் எண்
இரு நூற்று நாற்பத்(து) ஒன்பது;
கரும்பின் சுவையுடன் கனியமுதாம் கட்டுரைகளை உவந்தளிக்கும் உலகத் தமிழிதழ் இருநூற்(று) நாற்பத்து ஒன்பது.
நகை நீ கேளாய் தோழி
எனத் தொடங்கும் கபிலரின் அகநானூற்றுப் பாடல்
இருநூற்று நாற்பத்(து) எட்டு;
வகையாய் அரும்பெரும் கட்டுரைகளை நகையாக அணிந்து வரும் உலகத் தமிழ் இதழ்
இருநூற்று நாற்பத்(து) எட்டு.
அருள்
இல்லார்க்(கு)
அவ்வுலகம் இல்லை
எனத்தொடங்கும் அருங்குறள் இருநூற்று நாற்பத்(து) ஏழு;
பொருள் பொதிந்த கட்டுரைகளை இவ்வுலகத்தார்க்கு ஏந்திவரும் உலகத் தமிழிதழ்
இருநூற்று நாற்பத்(து) ஏழு.
“இடூஉ ஊங்கண் இனிய படூஉம்; நெடுஞ்சவர்ப் பல்லியும் பாங்கில் தேற்றும்”
என அமையும் நற்றிணைப் பாடல் எண்
இருநூற்று நாற்பத்து ஆறு;
இனிதே வந்து பாங்காய்த் தேற்றும் உலகத் தமிழிதழ் இருநூற்று நாற்பத்து ஆறு.
” கானங் கோழிக் கவர்குரற் சேவல் ” எனத் தொடங்கும் குழற்றத்தனாரின் குறுந்தொகைப் பாடல் எண் இருநூற்று நாற்பத்(து) இரண்டு;
தேனாய்ப் பாயும் தீந்தமிழ்த் திரட்டுகள் திசையெங்கும் பரப்பும்
உலகத் தமிழிதழ் இருநூற்று நாற்பத்(து) இரண்டு.