Capture

உலகத்தமிழ் இதழ் – 265

புலிகொல் பெண்பால்
பூவரிக் குருளை
எனத் தொடங்கும் கபிலரின் ஐங்குறுநூற்றுப்
பாடல் எண்
இருநூற்(று) அறுபத்(து) ஐந்து

ஒலிகொள் தமிழ்ச் சொற்களைப் புவிமிசை போற்றும் வண்ணம் திரட்டி வெளியிடும் உலகத்தமிழிதழ்
இரு நூற்(று)
அறுபத்(து) ஐந்து

Capture

உலகத்தமிழ் இதழ் – 264

பாம்(பு)அளைச் செறிய முழங்கி…
என முழங்கும் ஆவூர்க் காவிதிகள் சாதேவனாரின் நற்றிணைப் பாடல் எண் இருநூற்(று) அறுபத்(து) நான்கு;

ஓம்புகின்ற தமிழாய்ந்த ஒள்ளிய கருத்துகளைத்
தாங்கிவரும் உலகத்தமிழிதழின் இனிய வரிசை இருநூற்(று) அறுபத்(து) நான்கு

Capture

உலகத்தமிழ் இதழ் – 263

பிறை வனப்பு இழந்த நுதலும்… எனத் தொடங்கும் இளவெயினனாரின் நற்றிணைப்பாடல் இருநூற்(று) அறுபத்(து) மூன்று;

நிறை வனப்பு நிறைந்த அருந்தமிழ்க் கட்டுரைகளை அள்ளித்தரும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) அறுபத்(து) மூன்று

Capture

உலகத்தமிழ் இதழ் – 262

தண்புனக் கருவிளைக் கண்போல் மாமலர் …
எனத் தொடங்கும் பெருந்தலைச் சாத்தனாரின் நற்றிணைப்பாடல் எண் இருநூற்(று) அறுபத்(து) இரண்டு;

கண்போன்ற தமிழாய்ந்த அறிவார்ந்த அறிஞர்தம்
அருங்கட்டுரைகளை ஐந்தாண்டுகளாய் அழகுற வெளியிட்டுவரும் உலகத் தமிழிதழ் இருநூற்(று) அறுபத்(து) இரண்டு.

Capture

உலகத்தமிழ் இதழ்-261

“உற்றநோய் நோன்றல்”
என்று தவத்தை வரையறுத்துத் தொடங்கும் அருங்குறள் இருநூற்(று) அறுபத்(து) ஒன்று;

கற்றாய்ந்த அருந்தமிழைச் செழுமையான கட்டுரைகள் வாயிலாக வெளியிடும் உலகத் தமிழிதழ்
இருநூற்(று) அறுபத்(து) ஒன்று.

Capture

உலகத்தமிழ் இதழ் – 260

கழுநீர் மேய்ந்த கருந்தாள் எருமை
எனத் தொடங்கும் பரணரின் நற்றிணைப் பாடல் இருநூற்(று) அறுபது

விழுநீர் விசைக்(கு)ஏற்ப வினைநலச் சொற்களின் அணிவகுப்பாம் உலகத்தமிழிதழ் இருநூற்(று) அறுபது

Capture

உலகத்தமிழ் இதழ் – 259

அவிசொரிந்(து)
ஆயிரம் வேட்டலின் …
எனத் தொடங்கிப் புலால் மறுக்கும் அருங்குறள் இருநூற்(று) ஐம்பத்(து) ஒன்பது;

புவிவெல்லும் கருத்துகளை எழில்-தமிழில் எடுத்துக்காட்டும்
உலகத் தமிழிதழ் இருநூற்(று) ஐம்பத்(து) ஒன்பது.

Capture

உலகத்தமிழ் இதழ்-258

பல்பூங் கானல் பகற்குறி மரீஇச் செல்வல் கொண்க!
எனத் தொடங்கும் நற்றிணைப்
பாடல் இருநூற்(று) ஐம்பத்(து) எட்டு

சொல்லின் அணி மலர்களைக் கட்டுரைப் பூமாலையாகச் செழித்திருக்கும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) ஐம்பத்(து) எட்டு.

Capture

உலகத்தமிழ் இதழ்-257

உண்ணாமை வேண்டும் புலாஅல்
எனத்தொடங்கும் அருங்குறள் இருநூற்(று) ஐம்பத்(து) ஏழு;

சொல்லாண்மை வலியுறுத்தும் பெருங் கட்டுரைகளைக் கட்டுக்குலையாமல் வெளியிடும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) ஐம்பத்(து) ஏழு

Capture

உலகத்தமிழ் இதழ்-256

நீயே பாடல் சான்ற பழிதபு சீறடி
எனப்பாலை பாடிய பெருங்கடுங்கோவின் நற்றிணைப் பாடல்,
இருநூற்(று) ஐம்பத்து ஆறு

தாயே தமிழே எனத் தகத்தகாயமாக ஒளிரும் பொருண்மைகளைப் பொருத்தி வரும் உலகத் தமிழிதழ் இருநூற்(று) ஐம்பத்து ஆறு