தெளிவாக சிந்தனை இருக்கும் பொழுது கேள்விகள் பிறக்காது
சஞ்சலமாக மருளும் பொழுது விடைகள் கிடைக்காது

தெளிவாக சிந்தனை இருக்கும் பொழுது கேள்விகள் பிறக்காது
சஞ்சலமாக மருளும் பொழுது விடைகள் கிடைக்காது
விழைவினை சோம்பல் வீழ்த்தி விடும்
ஞானப்பெருக்கினை கோபம் வீழ்த்தி விடும்
கனவுகளை பயம் வீழ்த்தி விடும்
வளர்ச்சியினை செருக்கு வீழ்த்திவிடும்
அமைதியினை பொறாமை வீழ்த்தி விடும்
தன்னம்பிக்கையினை சந்தேகம் வீழ்த்திவிடும்
இடம் மாற்றி படித்தாலும் பொருள் ஒன்றாகத்தான் புரியும்
எவ்வித நஞ்சும் வளர்முக சிந்தனையாளரை கொல்ல முடியாது அவ்வண்ணமே எவ்வித மருந்தும் தீங்கிழைக்கும் சிந்தனையாளரை காப்பாற்ற முடியாது
சுவரில் விரிசல் ஏற்பட்டால் உடைந்து விழும்
உறவில் விரிசல் ஏற்பட்டால் குட்டிச்சுவராகிவிடும்
வாழ்வின் இருண்ட பகுதிகளைக் கூட மருண்டு போகும் அளவிற்கு ஓளியேற்றும் சக்தி கொண்டது நம்பிக்கை மட்டும்தான்
அதனால் தான் என்னவோ கடவுளைக் கூட நம்புங்கள் நாராயணனை என்று விளித்தோம். மேலும் நம்பினோர் கெடுவதில்லை இது நான்மறைத்தீர்ப்பு.
வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் தொடர்ந்து சொல்வது நான் காற்றை சுவாசிப்பதில்லை நம்பிக்கைதான் சுவாசிக்கிறேன்
எண்ணங்கள் தொடர்ந்து வண்ணமயமாக மாறிக்கொண்டிருந்தால் வாழ்வு வளம் பெறுவதைப் போல அணியும் கண்ணாடியையும் மாற்றினால் கண்பார்வையும் மெருகேறும்
நீங்கள் செய்யாத ஒன்றைச் செய்துக் காட்டினால் கிடைக்கவில்லையே என்று ஆசைப்பட்டது உங்களுக்குக் கிட்டும்
நன்மையும் தீமையும் என்ற இரு எருதுகள் நாள்தோறும் நம் எண்ணங்களில் முட்டி மோதும்
வெல்லும் எருதுகள் யாதனின் எத்தன்மைக்கு நீங்கள் உட்படுகிறீர்களோ
எண்ணப்போக்கும் எடுக்கும் முயற்சியும் ஆகிய இரண்டும் தங்கள் முழுமையான ஆற்றலில் பொதிந்துள்ளது