8b448c33-93c9-4799-b56c-4120e67f7ae0

மேகங்களையெல்லாம்தொட்டு விட ஆசை

கோவையைத் தாண்டி மலையும் மலை சார்ந்த குறிஞ்சிப் பகுதியில் மகத்தான முல்லை நிலப்பரப்பில் மயக்கும் பொன்மாலைப் பொழுதில்
சென்னை கிறித்துவ மேனிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் இணைந்து பயின்று பிறகு சென்னை மாநிலக் கல்லூரி மற்றும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வெவ்வேறு பாடப்பிரிவுகளில் பயின்றாலும் ஆழ்ந்த நட்பு பாராட்டியதோடு அரிமாக்குருளைகளாகத் தொண்டு நிறுவனத்தில் இணைந்து
பணியாற்றிய இனிய நண்பர் டெமிட்ரியஸ் ஐசக் அவர்களை 48 ஆண்டுக் காலமாக அறிந்திருந்தாலும் வாழ்வில் சிறந்த நான்கு மணி நேரத்தினை ஒதுக்கிக்கொண்டு நாங்கள் இருவரும் அவரின் நீண்டு நெடிய பண்ணை இல்லத்தில் 21.2.25 வெள்ளிக்கிழமையன்று சந்தித்து மகிழ்ந்து அளவளாவினோம்.

தன்னந்தனியாக தன்னுடைய நுட்பமான அறிவு நலத்தால் யாரும் எளிதில் செய்ய முடியாத பணியினை தன்னுடைய செம்மாந்த பணியாக அமைத்துக் கொண்டு உலகம் சுற்றும் வாலிபராக வலம் வருவதைக் கேட்டு மகிழ்ந்தேன்.

அவரைச் சுற்றி மனிதர்களை விட பண்ணையைக் காக்கும் நான்கு கால் உயர் குடி விலங்குகள் நாள்தோறும் அவர் முன் நடனமாடும் வண்ண கோல மயில்கள்
துள்ளி ஓடும் முயல்கள் அங்கிங்கெனாதபடி பல நாட்டைச் சார்ந்த பலவண்ணக் கோழிகள், பறவைகள்
தொட்டுவிடும் தூரத்தில் யானைகள் என நிமிர்ந்து நிற்கும் நண்பரைப்பாராட்டி மகிழ்ந்தேன்.

பல ஆண்டுகள் சந்திக்காமல் இருந்தாலும் புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும் என்ற அருங்குறள் தொடர்களுக்கு ஏற்ப நட்பு பாராட்டிய
நண்பரைக் கண்டு திரும்பி வரும் பொழுது தான் தலைப்பில் சொன்ன வரிகள் நினைவில் வந்து மோதியது.

835ecf33-bf07-4b0a-b4af-e6c7e1802284

ஊக்கத்தொகை…

சென்னையை அடுத்த மடிப்பாக்கம் – புழுதிவாக்கம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியின் 35-ஆவது ஆண்டு விழாவில் பள்ளியின் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று கல்வி ஊக்கத்தொகை பெற்ற மாணவ, மாணவிகளுடன் தமிழ் வளர்ச்சித் துறை துறை இயக்குநர் ஔவை ந.அருள், ஆன்மிக சொற்பொழிவாளர் நாகை முகுந்தன், பிரின்ஸ் கல்விக் குழுமங்களின் தலைவர் கே.வாசுதேவன், துணைத் தலைவர்கள் வா.விஷ்ணு கார்த்திக், வா.பிரசன்ன வெங்கடேஷ், செயலர் வ.ரஞ்சனி வாசுதேவன், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை கி.சொர்ணலதா உள்ளிட்டோர்.

53236d2f-712f-40b1-bc45-29e199348033

மனோரமா இயர்புக் 2025

  1. ஆம் ஆண்டு வெளியீடு

மலையாள மனோரமா

கோட்டயம், கோழிக்கோடு, கொச்சி, திருவனந்தபுரம், பாலக்காடு, கண்ணூர், கொல்லம், திருச்சூர், மலப்புறம், பத்தனம்திட்டை, ஆலப்புழை மும்பை, சென்னை, பெங்களூரு, தில்லி, துபாய்.

தமிழ்நாடு அரசின் தமிழ் விருதுகள்

தேனி மு. சுப்பிரமணி

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் வழியாக,

தமிழ் மொழி வளர்ச்சிக்கும், தமிழ்ப் பண்பாட்டு மேன்மைக்கும் தொண்டாற்றி வரும் தமிழறிஞர்கள், கவிஞர்கள், சமூக நீதிக்கு உழைக்கும் பெரியோர்கள் போன்றவர்களில் சிலரைத் தேர்வு செய்து சான்றோர்கள் பெயரில் ஆண்டுதோறும் திருவள்ளுவர் நாள் விருதுகள் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள் என்று இரு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

திருவள்ளுவர் நாள் விருதுகள்

திருவள்ளுவர் நாள் விருதுகளாக மொத்தம் ஏழு விருதுகள் வழங்கப்படுகின்றன.

திருவள்ளுவர் விருது

  • மகாகவி பாரதியார் விருது
  • பாவேந்தர் பாரதிதாசன் விருது
  • தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது
  • கி. ஆ. பெ. விசுவநாதம் விருது
  • பெருந்தலைவர் காமராசர் விருது
  • பேரறிஞர் அண்ணா விருது
  1. திருவள்ளுவர் விருது

திருவள்ளுவரின் நினைவாக வழங்கப்படும் இந்த விருது, ஆண்டுதோறும் திருக்குறள் இலக்கியத்திற்கும், அதன் தத்துவத்திற்கும் சிறப்பான பங்களிப்பைச் செய்தவர்களில் ஒருவருக்கு வழங்கப்படுகிறது.

1986 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இவ்விருது, ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி மாதத்தில், தமிழ்நாடு அரசால் திருவள்ளுவர் நாளாகக் கடைபிடிக்கப்படும்

தை மாதத்தின் இரண்டாவது நாளில் வழங்கப்படுகிறது.

விருதுத் தொகை: ரூபாய் இரண்டு இலட்சம் மற்றும் எட்டு கிராம் தங்கப் பதக்கம்.

  1. மகாகவி பாரதியார் விருது

பாரதியாரின் படைப்புகள் அனைத்தையும் முழுமையாகப் பயின்று ஆய்வு மேற்கொண்டு பாரதியாரைப் பற்றிய கவிதைகள் மற்றும் பாரதியின் புகழ் பரப்பும் வகையில் கவிதை, உரைநடை நூல்கள் படைதவர்களுக்கு மகாகவி பாரதியார் விருது வழங்கப் பெறுகிறது.

1997 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது.

விருதுத்தொகை: ரூபாய் இரண்டு இலட் சம் மற்றும் தங்கப்பதக்கம்.

முக்கிய நிகழ்வுகள்

  1. பாவேந்தர் பாரதிதாசன் விருது

சிறந்த கவிஞர் ஒருவருக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கப்பெறுகிறது.

1978 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது.

விருதுத் தொகை: ரூபாய் இரண்டு இலட்சம் மற்றும் தங்கப்பதக்கம்.

  1. தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது

தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கு தமிழறிஞர் திரு. வி. க. நினைவாக ஆண்டு தோறும் தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது வழங்கப்படுகிறது.

1979 ஆம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது.

விருதுத் தொகை: ரூபாய் இரண்டு இலட்சம் மற்றும் தங்கப்பதக்கம்.

  1. கி. ஆ. பெ. விசுவநாதம் விருது

தமிழ்நெறியில் தமிழ்த் தொண்டாற்றும் ஒருவருக்கு ஆண்டுதோறும் கி. ஆ. பெ. விசுவநாதம் விருது வழங்கப்படுகிறது.

2000 ஆண்டிலிருந்து வழங்கப்படும் இந்த விருக்கான பரிசுத்தொகை: ரூபாய் இரண்டு இலட்சம் மற்றும் தங்கப்பதக்கம்.

  1. பெருந்தலைவர் காமராஜர் விருது

காமராசர் வழியில் தமிழக மக்களுக்கு தொண்டாற்றி வரும் ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

2006 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருதுக் கான பரிசுத்தொகை: ரூபாய் இரண்டு இட்சம் மற்றும் தங்கப்பதக்கம்.

  1. பேரறிஞர் அண்ணா விருது

தமிழ் சமுதாயம் முன்னேற்றம் காண அயராது பாடுபடும் ஒருவருக்குப் பேரறிஞர் அண்ணா விருது வழங்கப்படுகிறது.

2006 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

விருதுத் தொகை: ரூபாய் இரண்டு இலட்சம் மற்றும் தங்கப்பதக்கம்.

தமிழ் வளர்ச்சித்துறை விருதுகள்

18 விருதுகள் வழங்கப்படுகின்றன:

  • தமிழ்த்தாய் விருது
  • கபிலர் விருது

•உ. வே. சா விருது

  • கம்பர் விருது
  • சொல்லின் செல்வர் விருது
  • உமறுப் புலவர் விருது
  • ஜி.யு. போப் விருது
  • இளங்கோவடிகள் விருது
  • முதலமைச்சர் கணினித் தமிழ் விருது
  • அம்மா இலக்கிய விருது
  • மொழிபெயர்ப்பாளர் விருது
  • சிங்காரவேலர் விருது
  • அயோத்திதாசப் பண்டிதர் விருது
  • மறைமலையடிகளார் விருது

•சி.பா. ஆதித்தனார் விருது

  • அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் விருது
  • காரைக்கால் அம்மையார் விருது
  • தமிழ்ச்செம்மல் விருது

தற்போது இவ்விருதுகள் அனைத்தும் சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள் என்பதிலிருந்து, தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள் என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டிருக்கிறது.

  1. தமிழ்த்தாய் விருது

தமிழகம் மற்றும் பிற மாநிலங்கள் மற்றும் பிற நாடுகளில் வாழும் தமிழர்கள், தங்கள் பண்பாட்டு வேர்களைக் காப்பதற்காகப் பல்வேறு அமைப்புகளை உருவாக்கி மொழி இலக்கியம், கலை ஆகிய பணி களை மேற்கொண்டு வரும் சிறந்த அமைப்புக்குத் தமிழ்த்தாய் விருது வழங்கப் படுகிறது.

2012 ஆம் ஆண்டு முதல் வழங்கப் படும் இந்த விருதுக்கான பரிசுத் தொகை: ஐந்து இலட்சம் ரூபாய்.

  1. கபிலர் விருது

பழந்தமிழர் தொன்மை, வரலாறு, நாகரீகம், பண்பாடு முதலியன புலப்படும் வகையிலும்; தமிழுக்கு உயிரூட்டும் வண்ணம் படைப்பு சினைப் புனைந்து வழங்கும் கவிஞர் மற்றும் கறிஞர் பெருமக்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

2012 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் இந்த விருதுக்கான பரிசுத்தொகை: ரூபாய் இரண்டு இலட்சம் மற்றும் தங்கப்பதக்கம்.

3.உ.வே.சா. விருது

கல்வெட்டுகள், அகழ்வாய்வுகள், ஒலைச் சுவடிகள், அரிய கையெழுத்துப் படிகள், கிடைத்தற்கரிய நூல்கள் முதலியவற்றை அரும்பெரும் முயற்சியால் கண்டறிந்தும், வெளிக்கொணர்ந்தும் தமிழுக்கு வளம் சேர்க்கும் பணிகளை மேற்கொள்ளும் தமிழறிஞர்களின் சேவைகளைப் பாராட் டும் விதமாக உ. வே. சா. விருது வழங் கப்படுகிறது.

2012 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் இந்த விருதுக்கான பரிசுத் தொகை: ரூபாய் இரண்டு இலட்சம் மற்றும் தங்கப் பதக்கம்.

  1. கம்பர் விருது

தமிழ் இலக்கிய உலகில் சிறந்து விளங்கிய கம்பரைப் பற்றித் திறனாய்வு செய்வோர், கம்பர் படைப்புகளை ஆய்வு செய்வோர், கவிபாடும் ஆற்றல், கதை நிகழ்ச்சி, பாத்திரப் படைப்பு மற்றும் அவரின் புகழ் பரப்பும் வகையில் கவிதை நூல்களைப் படைப்போர் மற்றும் பிற வகையில் தமிழ்த் தொண்டு செய்துவரும் தமிழறிஞர் ஒரு வருக்கு கம்பர் விருது வழங்கப்படுகிறது.

2013 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரு கிறது. விருதுத் தொகை: ரூபாய் இரண்டு இலட்சம் மற்றும் தங்கப்பதக்கம்.

  1. சொல்லின் செல்வர் விருது

சிறந்த இலக்கியப் பேச்சாளராகவும், தமிழர் நாகரிகம், பண்பாட்டை மக்கள் மனத்தில் சொற்பொழிவு வழி விதைப்பவராகவும், பிற வகையில் தமிழ்த் தொண்டு செய்வோ ராகவும் உள்ள ஒரு வருக்கு சொல்லின் செல்வர் விருது வழங்கப்படுகிறது.

2013 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்படும் இந்த விருதுக்கான பரிசுத வழங்கப்படும் இந்த இரண்டு இலட்சம் மற்றும் தங்கப் பதக்கம்.

  1. உமறுப் புலவர் விருது இஸ்லாமிய தமிழ்க்

காப்பியங்களில் சிறந்த காப்பியமான சீறாப்புராணத்தை இயற்றிய உமறுப்புலவர் தமிழுக்கு ஆற்றிய அருந்தொண்டை போற்றும் வகையில், தமிழுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் தொண்டாற்றி வரும் தமிழறிஞர் ஒரு வருக்கு 2014 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

விருதுத் தொகை: ரூபாய் இரண்டு இலட்சம் மற்றும் தங்கப் பதக்கம்

  1. ஜி.யு.போப் விருது

அயல்நாட்டு மொழிகளில் தமிழ் இலக்கி யங்களை மொழிபெயர்க்கும் சிறந்த தமிழ் மொழி பெயர்ப்பாளருக்கு ஜி.யு.போப் விருது வழங்கப்படுகிறது.

2014 ஆம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வரும் இவ்விருதுக் கான பரிசுத் தொகை: ரூபாய் இரண்டு இலட்சம் மற்றும் தங்கப்பதக்கம்.

  1. இளங்கோவடிகள் விருது

இளங்கோவடிகளின் நடையையொட்டி புதிய காப்பியம் படைப்பவர்க்கோ அல்லது சிலப்பதிகாரத்தின் புகழ் பரப்பி வரு பவர்க்கோ இந்த விருது வழங்கப்படுகிறது.

2015 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. விருதுத் தொகை: ரூபாய் இரண்டு இலட்சம் மற்றும் தங்கப்பதக்கம்.

  1. முதலமைச்சர் கணினித் தமிழ் விருது

சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்கிய நிறுவனம் அல்லது உருவாக்கியவருக்கு கணியன் பூங்குன்றனார் பெயரில் வழங்கப் பெற்று வந்த விருது தற்போது பெயர் மாற்றம் செய்யப் பெற்று முதலமைச்சர் கணினித்தமிழ் விருது என்ற பெயரில் வழங்கப்படுகிறது.

2013 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. விருதுத் தொகை: ரூபாய் இரண்டு இலட்சம் மற்றும் தங்கப் பதக்கம்.

  1. அம்மா இலக்கிய விருது

மகளிர் இலக்கியங்களைப் படைப்பதில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தித் தொண் டாற்றி வரும் பெண் படைப்பாளர் ஒரு வருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் இலக்கிய விருது,

2015 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்படுகிறது. விருதுத் தொகை: ரூபாய் இரண்டு இலட்சம் மற்றும் தங்கப்பதக்கம்.

மொழி பெயர்ப்பாளர் விருது

பிறமொழிப் படைப்புகளைச்
தரமான முறையில் தமிழாக்கம் செய்யும் 10 சிறந்த மொழி பெயர்ப்பாளர் விருது வழங்கப்படுகிறது.

2015 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் இந்த விருதுக்கான பரிசுத் தொகை: ரூபாய் இரண்டு இலட்சம் மற்றும் தங்கப்பதக்கம்.

  1. சிங்காரவேலர் விருது

தமிழில் அறிவியல் கருத்துக்களை நூலாக எழுதுபவர்களிலும், சமுதாய முன்னேற் றத்திற்காகவும், சமத்துவ கொள்கைக் காகவும், தொழிலாளர் நலனுக்காகவும் போராடுபவர்களில் சிறந்த ஒருவருக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் விருது.

2018 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. விருதுத் தொகை: ரூபாய் இரண்டு இலட்சம் மற்றும் தங்கப் பதக்கம்.

  1. அயோத்திதாசப் பண்டிதர் விருது

சமத்துவம், பொதுவுடைமை, தமிழியல் ஆகியவற்றில் தனக்கென தனி முத்திரை பதித்த தகைமையாளர், தமிழறிஞர் அயோத்திதாசப் பண்டிதர் பெயரில், அவர் தம் இலட்சிய நோக்கோடு செயலாற்றும் ஒருவருக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படுகிறது.

2019 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் இந்த விருதுக்கான பரிசுத்தொகை: ரூபாய் இரண்டு இலட்சம் மற்றும் தங்கப்பதக்கம்.

  1. மறைமலையடிகளார் விருது

தனித்தமிழில் படைப்புகள் அருகிவரும்

நிலையில் தனித்தமிழில் படைப்புகளை உருவாக்கும் படைப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழறிஞர் ஒருவருக்கு ஆண்டுதோறும் மறைமலையடிகளார் விருது வழங்கப்படுகிறது.

2019 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் இந்த விருதுக்கான பரிசுத்தொகை: ரூபாய் இரண்டு இலட்சம் மற்றும் தங்கப்பதக்கம்.

15 தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் விருது

தமிழ் மொழியில் நாகரிகம், பண்பாடு. ஆகியவற்றைப் போற்றியும், பிறமொழி கலப்பின்றி எழுதியும் வெளியிடும் திங்களிதழ் தெரிவு செய்து “தமிழர்த் தந்தை சி.பா. ஆதித்தனார்” அவர்களின் பெயரில் ஆண்டுதோறும் திங்களிதழ் விருது என்கின்ற விருது வழங்கப்படுகின்றன.

விருதுத் தொகை: ரூபாய் இரண்டு இலட்சம் மற்றும் தங்கப்பதக்கம்.

  1. அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது

சமரச நெறிகளால் ஆன்மிகத் தொண்டாற்றும் ஒருவருக்கு அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது வழங்கப்படுகிறது.

2020 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் இந்த விருதுக்கான பரிசுத்தொகை: ரூபாய் இரண்டு இலட்சம் மற்றும் தங்கப்பதக்கம்.

  1. காரைக்கால் அம்மையார் விருது

காரைக்கால் அம்மையாரின் படைப்பிலக் கிய நெறிகளில் தமிழ்த் தொண்டாற்றி வரும் மகளிர் ஒருவருக்கு வழங்கப்படுகிறது.

2020 ஆம் ஆண்டு முதல் வழங்கப் பட்டு வருகிறது. விருதுத் தொகை: ரூபாய் இரண்டு இலட்சம் மற்றும் தங்கப்பதக்கம்.

  1. தமிழ்ச்செம்மல் விருது

தமிழ்நாட்டில் தமிழ் வளர்ச்சிக்காக தமிழ்த் தொண்டை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ்ச் செம்மல் விருது வழங்கப்படுகிறது.

2015 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் இந்த விருதுக்கான பரிசுத் தொகை: ரூபாய் 25,000. இவ்விருது மாவட்டத்திற்கு கும் 38 வீதம், தமிழ்நாட்டில் தற்போதிருக்கும் 38 மாவட்டங்களுக்கு வழங்கப்படுகிறது.

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்கக விருதுகள்

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் செந்தமிழ்ச் சொற் பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்ககம் வழியாக, தூய தமிழ்ப் பயன்பாட்டை வளர்க்கும் நோக்கத்துடன் ஆறு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்ற.

  • தூயதமிழ்ப் பற்றாளர் பரிசு
  • நற்றமிழ்ப் பாவலர் விருது
  • தூயதமிழ் ஊடக விருது
  • தேவநேயப் பாவாணர் விருது
  • வீரமாமுனிவர் விருது
  1. தூயதமிழ்ப் பற்றாளர் பரிசு

நடைமுறை வாழ்க்கையிலும், பேச்சு வழக்கிலும், பிறமொழிக் கலப்பில்லாமல், எப்பொழுதும், எங்கும், எதிலும், தூய தமிழையேப் பயன்படுத்துபவருக்கு வழங்கப்படுகிறது.

2020 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்படும் இந்தப் பரிசுக்கான பரிசுத்தொகை: ரூபாய் 5,000.

இந்த விருதுக்கு விண்ணப்பிப்போரின் தமிழ்ப்பற்றை ஆராயும் வகையில், எந்த நாளில் வேண்டுமானாலும் முன்னறிவிப் பின்றி அலைபேசி வழியாக நேர்காணல் நடத்தப்பெற்று, அதன் வழியாக, தூய தமிழ்ப் பற்றாளர் பரிசுக்குரியவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

  1. தூயதமிழ்ப் பற்றாளர் விருது

தமிழ் மொழியைப் பிழையில்லாமல் நடைமுறை வாழ்க்கையிலும் தூய தமிழிலேயே பேசும் தனித்தமிழ்ப் பற்றாளர்களுக்கு 2020 ஆம் ஆண்டிலிருந்து, மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் வழங்கப்பட்டு வருகிறது. விருதுத் தொகை: ரூபாய் 20,000. இந்த விருதுக்கு விண்ணப்பிப்போரின் தமிழ்ப் பற்றை ஆராயும் வகையில், எந்த நாளில் வேண்டுமானாலும் முன்னறி விப்பின்றி அலைபேசி வழியாக நேர் காணல் நடத்தப்பெற்று, அதன் வழியாக, தூய தமிழ்ப் பற்றாளர் விருதுக்கு உரிய வர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

  1. நற்றமிழ்ப் பாவலர் விருது

மரபுக்கவிதை அல்லது புதுக்கவிதைப் படைப்புகளில் பிற மொழிக் கலப்பில்லாத தூய தமிழ்ச் சொற்களையும், புதிய தமிழ்க் கலைச்சொற்களையும் பயன்படுத்தும், இரு கவிஞர்களை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மரபுக்கவிதைக்கு ஒருவர், புதுக்கவிதைக்கு ஒருவர் என் இருவருக்கு நற்றமிழ்ப் பாவலர் விருது வழங்கப்படுகிறது.
விருதுத் தொகை: ரூபாய் 50,000.

  1. தூய தமிழ் ஊடக விருது

தூய தமிழைப் பயன்படுத்தும் காட்சி மற்றும் அச்சு ஊடகங்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் காட்சி ஊடகம் (வலைத்தளம் / தொலைக்காட்சி) ஒன்றிற்கும், அச்சு ஊடகம் ஒன்றுக்கும் தூய தமிழ் ஊடக விருது வழங்கப்படுகிறது. விருதுத் தொகை: ரூபாய் 50,000.

  1. தேவநேயப் பாவாணர் விருது

தமிழ்வேர்ச்சொல் ஆய்வு, அகராதி உருவாக்குதல் மற்றும் தனித்தமிழைப் பின்பற்றுதல் உள்ளிட்ட ஆய்வும், தமிழ் ஈடுபாடும் கொண்டு பணியாற்றுகிற, அகராதியியல் துறையில் சிறந்து விளங்குகிற தகுதி வாய்ந்த ஒருவருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
2020 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. விருதுத் தொகை: ரூபாய் இரண்டு இலட்சம் மற்றும் தங்கப் பதக்கம்.

  1. வீரமாமுனிவர் விருது

வீரமாமுனிவர் நெறியில் லெக்கியவர்தம் வீரமாமுனிவடையில் சிற்றிலக்கியங்கள், மொழிபெயர்ப்புகள் உருவாக்கியும், தமிழ் அகராதித் துறையில் சிறந்து விளங்கிள்ள, தமிழ் அகராதிகளையும் வெளியிட்டுள்ள, தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத, பிறப்பால் வெளிநாட்டைச் சார்ந்த தகுதி வாய்ந்த அகராதியியல் அறிஞர்கள், இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழும் அகராதியியல் அறிஞர்கள், தமிழ்நாட்டில் வாழும் அகராதியியல் அறிஞர்களில் ஒருவரைத் தேர்வு செய்து, அவர்களுக்கு வீர மாமுனிவர் விருது வழங்கப்படுகிறது.

2020 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது, விருதுத் தொகை: ரூபாய் இரண்டு இலட்சம் மற்றும் தங்கப்பதக்கம்.

உலகத் தமிழ்ச் சங்க விருதுகள்

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் மதுரையில் செயல்பட்டு வரும் அரசு நிறுவனமான உலகத் தமிழ்ச் சங்கம் வழியாக, இலக்கியம், இலக்கணம் மற்றும் மொழியியல் துறையில் சிறந்து விளங்கும் அயலகத் தமிழறிஞர்கள் மூவருக்கு ஆண்டு தோறும் உலகத் தமிழ்ச் சங்க விருதுகள் வழங்கப்படுகின்றன.

2016 ஆம் முதல் வழங்கப்படும் இந்த விருதுக்கான பரிசுத்தொகை: ரூபாய் இரண்டு இலட்சம்.

இலக்கியமாமணி விருது

தமிழ் வளர்ச்சித் துறையின் வழியாக, தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்கள், அறிஞர்களுக்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் மரபுத்தமிழ், ஆய்வுத் தமிழ், படைப்புத்தமிழ் ஆகிய மூன்று வகைப்பாட்டில் ஆண்டுதோறும் மூவருக்கு இலக்கிய மாமணி விருது வழங் கப்படுகிறது.

2022 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் இவ்விருதுக்கான பரிசுத்தொகை: ஐந்து இலட்சம் ரூபாய் மற்றும் ஒரு சவரன் தங்கப் பதக்கம்.

ஔவையார் விருது

தமிழ்நாடு அரசு, தமிழகத்தில் சமூகச் சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியில், பண்பாடு, கலாச்சாரம் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு ஆண்டுதோறும் “ஔவையார் விருது” வழங்கி கௌரவித்து வருகிறது.

2024-ஔவையார் விருது பெற்றவர், பாஸ்டினா சூசைராஜ் என்ற பாமா. இலக்கியத்தின் மூலமாக, தலித் மக்களின் குரலாக ஒலித்து, சமூக தொண்டாற்றி வருபவர்.

இவரது நூல்கள்: சுருக்கு, சங்கதி, வன்மம், மனுஷி (நாவல்கள்) குசும்புக்காரன், கொண்டாட்டம், ஒரு தாத்தாவும் எருமையும் (சிறுகதைத் தொகுப்புகள்).

இவரின் ‘சுருக்கு’ என்ற நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, 2000-ஆம் ஆண்டின் கிராஸ் வேர்ட்புக் விருதை வென்றுள்ளது.

955f97ea-0f6a-4a8a-8b0d-0ce9952bfd72

பொங்கலோ பொங்கல்

தமிழர்களின் திருவிழாவான தைப்பொங்கலை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகத்திலும் மதுரையிலுள்ள உலகத் தமிழ்ச் சங்க அலுவலகத்திலும் 13.1.25 திங்கட்கிழமையன்று அலுவலர்களால் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது.

93d9c55b-a358-4636-8a70-9ad7bcf6c8c0

இனிய புத்தாண்டுநல்வாழ்த்துகள் !

புதுப்புனலாய்ப்

புதுவழியாய்ப்

புத்தொளியாய்

இனிமை பெறு புத்தாண்டே
வருக !

நலமனைத்தும் எமக்காக்கித்
தங்குகவே !

இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துகள் !

முக்கடல் சூழ் குமரி முனையிலிருந்து

  • ஔவை அருள்

1.1.2025