4ae983d3-a404-4340-aa48-87f9871178e2

வாழ்த்தும் வணக்கமும்

மேல்சித்தாமூர்,
ஜினகஞ்சி சமண மடத்தின் மடாதிபதி, சங்கீதபூஷணம்.
Dr. ஸ்வஸ்திஸ்ரீ இலட்சுமிசேன பட்டாரகப் பட்டாச்சார்ய வர்ய ஸ்வாமிகள் 5.9.24 வியாழக்கிழமையன்று அண்ணா நகர் தாரகை இல்லத்திற்கு வருகை புரிந்து பெற்றோர்களைக் குறித்து நீண்ட நேரம் பேசி வாழ்த்தி விடைபெற்றார்.

01580be4-d62e-483b-933a-adcde634efa4

வற்றாத வரலாற்றுக் களஞ்சியம் வாழி!

94 அகவை நிறைந்த பத்மஸ்ரீ விருது பெற்ற அறிஞர்,
தில்லிப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர், எழுத்தாளர், திறனாய்வாளர், சாகித்திய அகாதமி இலக்கிய விருதினை குருதிப்புனல் புதினத்திற்காக 1977 ஆம் ஆண்டிலேயே பெற்றதோடு
கே கே பிர்லா அறக்கட்டளை வாயிலாக இராமானுஜர் நாடகத்திற்கான
சரசுவதி சம்மான் விருதினை 1999 ஆம் ஆண்டில் பெற்ற பெருந்தகையாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்களை 8.9.24 ஞாயிற்றுக்கிழமையன்று நேரில் சந்தித்து நீண்ட நேரம் பேசி மகிழ்ந்தேன்.

அந்நாள் அவர் மகள் திருமதி பத்மாவின் பிறந்தநாள் என்று தெரிவித்து தன் கையொப்பத்துடன்
அவரின் காலம் தோறும் கிருஷ்ணன் என்ற தமிழ்ப் புதினத்தை அவரே ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த
Forever Yours,Krishna புதினத்தினை வழங்கி மகிழ்ந்த பொழுது பெருமிதமடைந்தேன்.

af519ac9-85fa-4bce-827c-e58495db1c1d

அன்பின் வழியது உயிர்நிலை

இனிய நண்பர் வழக்கறிஞர் சதீஷ் திருமதி இரஞ்சனி இணையரின் ஒரே மகன் அறிவுத்திலகம் சஸ்வத்குமார்
பண்புத்திலகம் அனாகா திருமண உறுதி நிகழ்வில் (8.9.24) ஞாயிற்றுக்கிழமை காலை திருவான்மியூரில் அமைந்துள்ள துவாரகா வள மண்டபத்தில் கலந்து கொண்டு வாழ்த்தி மகிழ்ந்தேன்.

அன்றைய நிகழ்ச்சியில் கவிஞர் சதீஷின் தாயார் திருமதி வசந்தா சீனிவாசன் என்னைக் கண்டதும் பரிவு காட்டி அன்பாக வாழ்த்திய தருணம் நெகிழ்வாக அமைந்தது.

c6dba120-3faf-442a-8c68-be15d988e1c5

மழலை மலருக்குப்பண் பாடுவோம் !

பட்டிமன்ற பேச்சாளர் திருமதிஅனுகிரகா ஆதி பகவன், கவிஞர் தரன் இணையரின் மழலைச் செல்வம் ஆதினி பொற்பிறையின் முதலாண்டு பிறந்தநாள் விழாவில்(17.8.24) சனிக்கிழமையன்று மாலையில் அப்பாவின் செயலாளர்
பொன்னேரி பிரதாப் மற்றும் ஆட்சி மொழிக் காவலர்
கீ இராமலிங்கனாரின் பெயரன் கஜேந்திர பாபுவுடன் மழலைச் செல்வத்தை நேரில் கண்டு மகிழ்ந்து வாழ்த்தினேன்.

c90c4f15-69cb-48c5-b463-140ecaa00cf7

பெருமிதம் நாளும் வெல்க!

எந்தையார் ஒளவை நடராசன் தன் வாழ்நாள் எல்லாம் போற்றிய ஆசிரியர் திலகத்தின் 92ஆம் பிறந்த நாள் (2.12.2024) அன்று ஆசிரியரின் அடையாறு இல்லத்திற்கு நேரில் சென்று சங்கவிலக்கிய எழிலேடு வழங்கி சால்வை சூடி மகிழ்ந்தேன்.

பிறந்த நாள் தொட்டே பகுத்தறிவுப் பிடிப்போடு
தந்தை பெரியார்
ஆரத்தழுவிய அருமந்த மகனாக வளர்ந்து நாளும் உயர்ந்து
தன்மான இயக்கத்தையும் ,
திராவிடர் கழகத்தையும்
கண் போலக்காத்து வருபவர்
தலைவர் வீரமணி .

அல்லும் பகலும் அயராமல்
இனமான எழுச்சி உரைகளையும்
நிகரில்லாக் கல்விப் பணிகளையும் ஆற்றி ,
திராவிடர் சமுதாயத்தை
அங்குலம் அங்குலமாக உயர்த்தி வருபவர்
ஆசிரியர் மானமிகு வீரமணி அவர்கள் .

இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்

என்ற திருக்குறள் வாழ்வு
ஆசிரியர் திலகத்தின்
பெருமித வாழ்வு !

பல்லாண்டு வாழ்க !!
வாழ்க தமிழ் –
வெல்க பெரியாரியம் .