எல்லாம் சிவன் என்ன நின்றாய் போற்றி எரி சுடராய் நின்ற இறைவா போற்றி இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம்திரு உத்தரகோசமங்கை அருள்மிகு மங்களநாத சுவாமி திருக்கோயில் இராமநாதபுரம் மாவட்டம் திரு உத்தரகோச மங்கை அருள்மிகு மரகத நடராஜர் அருள்மிகு சகஸ்ரலிங்கம் அருள் திரு மங்களநாதர் அருள் தரும் மங்கலேஸ்வரர் தலவிருட்சம் இலந்தை மரம் 3000 ஆண்டுகள் முற்பட்டது அடியேனின் வழிபாடு திங்கட்கிழமை 30.9.24 அன்று நடைபெற்றது
காணக்கிடைக்காத கலை வண்ணக் கற்கோயில்
இந்தியத் தலைநகரிலுள்ள தில்லியில் மாபெரும் வளாகமாக கண்ணையும் எண்ணங்களையும் கவரும் வகையில் அக்ஷர்தம் என்ற வனப்பான பெரு மாளிகையினை 08.05.2024 புதன்கிழமை கண்டு மகிழ்ந்து வியந்த கவினார்ந்த கருவூலத்தை பெருநிதிச் செல்வத்தால் எழுப்பப்பட்டதை என் உள்ளத்து உணர்வின் நளினங்களையெல்லாம் வெண்தாழை மடலில் செம்பஞ்சுக் குழம்பால் குழைத்து எழுதுவதைப் போல முகநூலில் வரைவதை எண்ணி மகிழ்கிறேன். இந்திய நாட்டின் நீண்ட இதிகாச மரபினுடைய எண்ணற்ற அழகுகளைக் கொண்ட பெருந்திட்டத் திருக்கோயிலினை காணும் போது மயில் ஒன்று ...


