பிறந்த நாள் புகழ் வணக்கம் 24.04.1936 தில்லை நடவரசர் நட அசைவே நானிலத்தின் இயக்கமென்பார் ஒளவை நடராசர் நாவசைத்தால் நற்றமிழும் நடனமிடும் முல்லை மலர்ச் சிரிப்பால் எமை ஆளும் முத்தமிழின் வேந்தே என்றும் நும் நினைவில் கண்ணன் அருள் பரதன். 24.4.24
POST: 2024-04-26T08:29:47+05:30
வி ஜி பி எனதன்பு நண்பர், நடராசரே! எனதன்பு நண்பர், நடராசரே! திருவள்ளுவர் தம்மை நீர் உரையில் வைத்தீர், கடல் கடந்தும் தமிழ்மணம் கமழச் செய்தீர்! நாடறிந்த பட்டிமன்றத் தலைவரே! நூற்றுக்கணக்கான இலக்கிய வாணர்களின் பயிற்சிப்பட்டறையே! விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் நுமைக் கவர்ந்து நின்றது யான் பெற்ற பேறு! இன்றைய நும் பிறந்த நாளில் நிலைபெறுக நிலனுள்ளவரை நும் புகழ் என வாழ்த்துகின்றேன், விண்ணுலகப் பூவே! டாக்டர் வி.ஜி.சந்தோசம்
POST: 2024-04-25T09:01:07+05:30
இளங்கோவடிகள் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் 24.04.2024 செய்திக்குறிப்பு இளங்கோவடிகள் வேந்தர் குலத்திற் பிறந்தவர், உயர் கல்வி பெற்று வளர்ந்தவர். கணியன் கூறியபடி அரசாளும் திருப்பொறி வாய்ந்தவர், காதலை வெறுத்தோ - கடமைக்கு அஞ்சியோ இவர் துறவு மேற்கொள்ளவில்லை. மூத்தவன் ஆளும் அரச மரபு பிறழக்கூடாது என்பதற்காகவே துறவு மேற்கொண்டார். அடிகளான பின்னுங் கூட "குடக்கோச்சேரல் இளங்கோ" என்றே குறிப்பிடுகிறார். செந்தமிழ்ச்செல்வியின் காற்சிலம்பு காரணமாக அருந்தமிழ் அன்னைக்கு நூற்சிலம்பு அணிவித்த பெருமை ...
POST: 2024-04-24T08:08:33+05:30
ஆடு இயல் அழல் குட்டத்து எனத் தொடங்கும் புறப்பாடல் இருநூற்று இருபத்து ஒன்பது பாடுபொருள் கொண்ட பொருத்தமான படைப்புகளை ஏந்தி வரும் உலகத்தமிழிதழ் இருநூற்று இருபத்து ஒன்பது
POST: 2024-04-23T08:18:53+05:30
தொல்காப்பியர் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி 23.04.2024 செய்திக்குறிப்பு தொல்காப்பியம் காலப்பழைமையும் கருத்துச்செழுமையும் கொண்ட ஒரு கருவூலமாகும். பழைமையான நூல் இலக்கணப் பனுவலாக தமிழ்மொழிக்கு வாய்த்திருப்பது பெரும் பேறாகும். தொல்காப்பியத்துக்கு முன்னரே இலக்கிய இலக்கண நூல்கள் பலவாக இருந்தன. முன்பு நூல் கண்டு உரைப்பட எண்ணி புலன் தொகுத்தார் என்றே பாயிரம் சொல்கிறது. எழுத்து, சொல், பொருள் என அமைத்துக்கொண்டு ஒன்பது இயல்கள் என்ற ஒழுங்கினதாய் இருபத்தேழு இயல்களாக, 1610 நூற் ...
POST: 2024-04-23T08:18:53+05:30
தொல்காப்பியர் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி 23.04.2024 செய்திக்குறிப்பு தொல்காப்பியம் காலப்பழைமையும் கருத்துச்செழுமையும் கொண்ட ஒரு கருவூலமாகும். பழைமையான நூல் இலக்கணப் பனுவலாக தமிழ்மொழிக்கு வாய்த்திருப்பது பெரும் பேறாகும். தொல்காப்பியத்துக்கு முன்னரே இலக்கிய இலக்கண நூல்கள் பலவாக இருந்தன. முன்பு நூல் கண்டு உரைப்பட எண்ணி புலன் தொகுத்தார் என்றே பாயிரம் சொல்கிறது. எழுத்து, சொல், பொருள் என அமைத்துக்கொண்டு ஒன்பது இயல்கள் என்ற ஒழுங்கினதாய் இருபத்தேழு இயல்களாக, 1610 நூற் ...
POST: 2024-04-22T09:51:31+05:30
ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு 24/223 என்.எஸ்.சி. போசு சாலை, சென்னை-600 001. தாமரைத்திரு ஔவை நடராசன் 89 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா நாள்: 23.4.2024 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி இடம்: ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு அரங்கம், சென்னை. தலைமை: புலவர் பா. வீரமணி அறங்காவலர், சிங்காரவேலர் அறக்கட்டளை நூல் வெளியீடு; பெரும்பேராசிரியர் எஸ் ஏ சங்கர நாராயணன் இயற்றிய AvvaipPillai Thamizh மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணிமகுடம் மற்றும் ஒளவையின் சிந்தனைப் புதையல் ஆகிய இரு நூல்களின் நு ...
POST: 2024-04-21T11:28:39+05:30
ஒளிப்படக் கோப்பு ஓம் ஜொஹனெஸ்பேர்க் மெல்ரோஸ் ஸ்ரீ சிவ சுப்பிரமணியர் ஆலயம் மெல்ரோஸ் ஆலயம் 1890 ஆம் ஆண்டளவில் கட்டப்பட்டு 1996 ஆம் ஆண்டில் மீண்டும் திருப்பணி வேலைகள் செய்யப்பட்டு தாது வருஷம் ஐப்பசித் திங்கள் 11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை (27.10.1996) புனராவர்த்தன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகம் நிறைவேற்றப்பட்டது. AUM Johannesburg Melrose Shree Siva Subramaniar Temple. The Melrose Temple was built circa (about) 1890 and was extensively renovated during 1996, culminating in the performing of ...
POST: 2024-04-20T12:04:40+05:30
ஏன்? எப்படி?? அழியாத மை என்று எப்படி நேற்று எழுதினீர்கள் என்று என் அப்பாவின் உதவியாளர் பிரதாப் இன்று காலை வினவினார்.. நேற்று வாக்குச்சாவடியில் வைத்தது சாதாரண மை அல்ல. விரலின் மீது வைக்கப்பட்டால் எந்த ஒரு ரசாயனம், சோப்பு, எண்ணெய்யாலும் அகற்ற முடியாது. ஒரு சில மாதங்களுக்கு அழியாமல் அப்படியே இருக்கும் என்றேன். கருநாடக அரசு நிறுவனமான மைசூர் பெயிண்ட்ஸ் மற்றும் வார்னிஷ் நிறுவனம் கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அழியாத மையை தயாரித்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கு வழங்கி வருகிறதாம் . கடந்த ...
POST: 2024-04-19T16:15:47+05:30
அழியாத மை ! நாடாளுமன்றத் தேர்தல் முன்னிட்டு அண்ணா நகர் வள்ளியம்மாள் பள்ளிக்கு இன்று வெள்ளிக்கிழமை 19.4.24 மாலை 3.30 மணிக்கு வாழ்வரசியுடன் வாக்களிக்கச் சென்றேன். வள்ளியம்மாள் பள்ளிக்கு என்னை அம்மா கைப்பிடித்து அழைத்துச் சேர்த்ததும் அங்கே 2,3,4,5 ஆம் வகுப்புக்கள் படித்ததும் என் நினைவில் படர்கிறது. வகுப்புக்குச் செல்வது போல வாக்களிக்கச் செல்வதும் மக்களாட்சியின் பொலிவுக்கு வலுவூட்டும். ஒரு வகுப்பின் பாடம் போலத்தான் !
