POST: 2024-12-03T07:13:46+05:30

பெருமிதம் நாளும் வெல்க! எந்தையார் ஒளவை நடராசன் தன் வாழ்நாள் எல்லாம் போற்றிய ஆசிரியர் திலகத்தின் 92ஆம் பிறந்த நாள் (2.12.2024) அன்று ஆசிரியரின் அடையாறு இல்லத்திற்கு நேரில் சென்று சங்கவிலக்கிய எழிலேடு வழங்கி சால்வை சூடி மகிழ்ந்தேன். பிறந்த நாள் தொட்டே பகுத்தறிவுப் பிடிப்போடு தந்தை பெரியார் ஆரத்தழுவிய அருமந்த மகனாக வளர்ந்து நாளும் உயர்ந்து தன்மான இயக்கத்தையும் , திராவிடர் கழகத்தையும் கண் போலக்காத்து வருபவர் தலைவர் வீரமணி . அல்லும் பகலும் அயராமல் இனமான எழுச்சி உரைகளையும் நிகரில்ல ...

POST: 2024-12-02T06:02:14+05:30

விழிகளைக் கவரும் ஊடக வெளிச்சம் தமிழ் வளர்ச்சித் துறையின் பெருமிதமான திட்டங்களை செய்தித்துறையின் ஊடக மையம் (Media Hub)வாயிலாக வண்ணமயமான வடிவங்களில் வெளியிடுவதைக்கண்டு தமிழுலகம் பாராட்டி மகிழ்கிறது.

POST: 2024-12-01T08:42:30+05:30

அப்பாவின் ஈர்ப்பு - தொடர் காவியம் அப்பா மறைந்து ஈராண்டுகள் கடந்தும் ஈரமான அவரின் நினைவுகளைப் பலர் பல நிலைகளில் என்னிடம் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்கள். அதில் குறிப்பாக அப்பாவுடன் மிக நெருக்கமாகத் தன் பள்ளிப்பருவநாள் முதல் பழகத் தொடங்கி அடக்கமாக செயலாற்றிய அன்பு இளவல் கலாநிதி தன்னுடைய திருமணம், மக்கள் செல்வங்கள், வணிகத் தொடர்புகள் என்று வளர்ந்த சூழலிலும் அப்பாவை தொடர்ந்து கொண்டாடுபவர்... இன்றும் எங்கள் அண்ணா நகர் தாரகை இல்லத்தில் நாள்தோறும் விடியற்காலை பெற்றோர்கள் ஒளிப்படங்களுக ...

POST: 2024-11-30T05:54:45+05:30

எங்கும் திருக்குறள் என்றும் திருக்குறள். மதுரையிலுள்ள உலகத் தமிழ் சங்க பெருவளாகத்தில் யாவரும் பார்க்கும் வண்ணம் முகப்பிலுள்ள மதிற்சுவற்றில் அணிசெய்யும் தெரிவு செய்யப்பட்ட அருங்குறள் மணிகளை புது வண்ணம் தீட்டி பொலிவாக்கம் செய்யப்பட்டு மதிற்சுவர் மாண்புற்றது.

POST: 2024-11-29T06:50:30+05:30

மங்கலம் என்ப மனைமாட்சி பெரியப்பா சுந்தரமூர்த்தி பெரியம்மா பரமேஸ்வரி (அம்மாவின் மூத்த அக்கா) திருமகன் முரளியுடன் மழலைப் பருவம் முதல் மிக நெருங்கிப் பழகி வரும் உறவுச் செம்மலின் அருமை மகள் நற்சோணை மணமகன் யோககேஸ்வரன் திருமணத் திருமுக நிகழ்வில் ஆகத்து 22 ஆம் தேதி வியாழக்கிழமையன்று சிவனகம் அருளரசு தலைமையில் நடைபெற்ற மங்கல நிகழ்வில் குடும்பத்துடன் கலந்து கொண்டு பெருமகிழ்ச்சி அடைந்தேன்.

POST: 2024-11-28T07:36:22+05:30

உலகத் தமிழ் சங்கத்தின் பொதுக்குழு மற்றும் நிருவாகக் குழு கூட்டம் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சரும் மற்றும் உலகத் தமிழ்ச் சங்கத் தலைவருமான திரு மு. பே சாமிநாதன் அவர்கள் தலைமையில் இன்று (27.11.24) சென்னை அருங்காட்சியகக் கூட்ட அரங்கில் மதுரை உலகத் தமிழ் சங்கத்தின் 3-ஆம் பொதுக்குழு மற்றும் 15 வது நிருவாகக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் திரு வே ராஜாராமன் இஆப மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந அ ...

POST: 2024-11-27T07:50:30+05:30

கழுநீர் மேய்ந்த கருந்தாள் எருமை எனத் தொடங்கும் பரணரின் நற்றிணைப் பாடல் இருநூற்(று) அறுபது விழுநீர் விசைக்(கு)ஏற்ப வினைநலச் சொற்களின் அணிவகுப்பாம் உலகத்தமிழிதழ் இருநூற்(று) அறுபது

POST: 2024-11-26T09:43:01+05:30

ஔவை நடராசன் ஒளி 24.04.1935 நிழல் 21.11.2022 எந்தை ஈராண்டு நிறைந்த எங்களின் சிந்தை பெருந்தகையீர், வணக்கம். உடுக்கணக்கு மரபின்படி, எங்கள் அருமைத் தந்தையார் ஒளவை நடராசன் (21.11.2022) மறைந்து ஈராண்டுகள் நிறைவுபெற்று, எதிர்வரும் கார்த்திகைத் திங்கள் பதினோராம் நாள் செவ்வாய்க்கிழமை (26.11.2024) காலை 7.30 -09.00 மணிக்குத் 'தாரகை இல்லத்தில்' (ஜெ 82 இரண்டாம் முதன்மைச் சாலை அண்ணா நகர் கிழக்கு, சென்னை-600 102) இரண்டாமியாண்டு நினைவேந்தல் மரபுளி வழாது தமிழ் வேள்வி சைவத் தமிழ்மணி ஒளியகம் ந. ...