POST: 2024-11-09T06:31:44+05:30

அன்னை சேது அறக்கட்டளை நடத்தும் பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் இணையர் அன்னை சேதுமதியின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் அருள்மங்கலம், பொற்கிழி வழங்கும் விழா நாள் : 09.11.2024 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு இடம்: நான் ஓர் ஐ.ஏ.எஸ். அகாடமி, (அஞ்சல் நிலையம் பின்புறம்) 3362, ஏ.இ. பிளாக், 8ஆம் தெரு, 10ஆம் முதன்மை சாலை, அண்ணாநகர், சென்னை - 600 040. தொண்டறச் செம்மல்களுக்குப் பட்டயம்-பொற்கிழி வழங்குநர் முனைவர் ஔவை அருள் அவர்கள், இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை.

POST: 2024-11-08T08:30:04+05:30

ஆக்கம்- ஊக்கம் பன்னாட்டு ஆலோசனைக் குழு உறுப்பினர் முனைவர் இரமேஷ் கவுர் அவர்களை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் திரு இராஜாராமன் இஆப அவர்களுடன் தலைமைச் செயலகத்தில் 27.9.24 வெள்ளிக்கிழமையன்று மாலையில் சந்தித்து உரையாடி நூல் பரிசுகளை வழங்கி மகிழ்ந்தோம்.

POST: 2024-11-07T07:01:07+05:30

எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! நேற்றைப் பொழுதின் (6.11.24, புதன்கிழமை) நிகழ்வுகள் அனைத்தும் நெஞ்சுக்கினிதாய் அமைந்து நெகிழ்வூட்டின. காலை தொடங்கி மாலை வரை அரசு அலுவலர்களுக்கு ஆட்சி மொழித் திட்டச் செயல்பாடுகள் குறித்துக் கருத்துரை வழங்கிக் கவின்சேர்க்கும் முயற்சி நிறைவு தந்தது. ஒரே நாளில் மூன்று அலுவலகங்களில் நடைபெற்ற ஆட்சி மொழித் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டங்களில் பங்கேற்று துறை அலுவலர்கள்,மற்றும் பணியாளர்களுக்கு ஆன்ற அறிவுரை வழங்கினேன். கோப்பு நடவடிக்கைகள் யாவும் அனைத்து நிலையிலும் நூற ...

POST: 2024-11-06T09:12:41+05:30

உண்ணாமை வேண்டும் புலாஅல் எனத்தொடங்கும் அருங்குறள் இருநூற்(று) ஐம்பத்(து) ஏழு; சொல்லாண்மை வலியுறுத்தும் பெருங் கட்டுரைகளைக் கட்டுக்குலையாமல் வெளியிடும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) ஐம்பத்(து) ஏழு

POST: 2024-11-05T09:32:19+05:30

மக்கள் குரல் 3.11.2024 பக்கம் 7 ஞாயிற்றுக்கிழமை திரு ராம்ஜி பெரிய புராணம் தனித்தமிழ் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநர் ஒளவை அருள் கைவண்ணத்தில் எண்ணத்தில் நிற்கும் படைப்பு. சென்னை மாநகரத்தின் பட்டியலிட்டபடி சிறப்புகளை கட்டுரை ஆரம்பம். முதல் பாடலிலேயே தான் சொல்ல வந்த நாயன்மார்கள் எண்ணிக்கையைச் சுட்டிக்காட்டி விடுகிறார் சேக்கிழார் பெருமான். ஆம், பாடலில் 63 எழுத்துக்கள். அவர் பாட எடுத்துக் கொண்ட நாயன்மார்கள் 63 பேர் தானே. உலகலாம் என்பதில் உகரமும் அலகில் அகரமும் வணங்குவாம் என்பத ...

POST: 2024-11-04T09:47:44+05:30

தினமணி 04.11.2024 திங்கட்கிழமை நடுப்பக்கம்- துணைக்கட்டுரை பக்கம்:6 நூலறிவு என்பது வாலறிவு! ஒளவை அருள் அறிவுசார் துறைகளில் தமிழ்நாடு சங்க காலம் முதலே முன்னோடியாக இருந்து வரும் மாநிலம். புலமையும் கலைகளும் வாழ வேண்டும் என அவற்றைப் போற்றிப் புரந்த பெருமக்கள் தமிழ்நாட்டின் அரசர்களாகத் திகழ்ந்து அணி கூட்டினர். புலவர்களையும் கலைஞர்களையும் பாதுகாப்பது தம் கடன் என எண்ணி வாழ்ந்த அரசர்களைக் கொண்ட நாடு இது. காலம் தாழ்த்திப் பரிசில் கொடுத்தால், அதனை ஏற்காமல், "அரசும் உனதோ வள நாடும் உனதோ' எனப் ...

POST: 2024-11-03T11:21:33+05:30

எல்லாம் சிவன் என்ன நின்றாய் போற்றி எரி சுடராய் நின்ற இறைவா போற்றி இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் திரு உத்தரகோசமங்கை அருள்மிகு மங்களநாத சுவாமி திருக்கோயில் இராமநாதபுரம் மாவட்டம் திரு உத்தரகோச மங்கை அருள்மிகு மரகத நடராஜர் அருள்மிகு சகஸ்ரலிங்கம் அருள் திரு மங்களநாதர் அருள் தரும் மங்கலேஸ்வரர் தலவிருட்சம் இலந்தை மரம் 3000 ஆண்டுகள் முற்பட்டது மணிவாசகப் பெருமான் வணங்கிப் பாடிய தலத்தில் அடியேனின் வழிபாடு திங்கட்கிழமை 30.9.24 அன்று நடைபெற்றது

POST: 2024-11-02T11:17:35+05:30

அமுதசுரபி 77 ஆம் ஆண்டு அக்டோபர் 2024 மலர் 77 இதழ் 6 தீபாவளிச் சிறப்பிதழ் பக்கம் 64,65,66 தேவையற்ற குடைகள்...! முனைவர் ஔவை அருள் இயக்குநர் -தமிழ் வளர்ச்சித் துறை தனியார் அல்லது பொதுத்துறை நிறுவன அமைப்பில் நிருவகிப்புக்கென அமைப்புரீதியான கட்டமைப்பு, நடைமுறைகள், நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் இவற்றின் சேர்க்கையே அதிகாரத்துவம் ஆகும். மரபுரீதியாக அதிகாரத்துவம் என்பது கொள்கைகளை உருவாக்கும் இடத்தில் இல்லை. அவற்றைச் செயலாக்குவதே அதிகாரத்துவமாக இருக்கின்றது. ஒரு பொதுவான அதிகாரத்துவத்தின ...

POST: 2024-11-01T11:58:33+05:30

கலைமகள் தீபாவளி மலர் 2024 பக்கம் - 44,45,46 பெரியபுராணம் தனித்தமிழ் நூல் ஔவை அருள், இயக்குநர் தமிழ் வளர்ச்சித் துறை சென்னை மாநகரத்திற்கு எத்தனையோ - சிறப்புகள் உண்டு. சென்னை மாநகரத்திற்கு வடபுறத்தில் திருவொற்றியூரும், தென்புறத்தில் திருவான்மியூரும், கிழக்குப் பகுதியில் மயிலாப்பூரும், மேற்குப் பகுதியில் இராமானுசர் தோன்றிய திருப்பெரும்புதூரும், இவையெல்லாம், சென்னை மாநகரத்தின் காவலுக்கு அமைந்த அறம் பெருக்கும் அரண்களாகத் திகழ்கி ...

POST: 2024-10-31T08:54:58+05:30

ஈத்துவக்கும் இன்பம் தீப ஒளிப் பெருவிழா முன்னிட்டு கொடுப்பதே கொண்டாட்டம் என்று ஆண்டு தவறாமல் தீபாவளிக்கும், பொங்கலுக்கும் எந்தையார் அகமகிழ்ந்து வழங்குவதைப் போலவே அண்ணா நகர் தாரகை இல்லத்தின் காவலர்கள் காந்திக்கும், சாமுவேலுக்கும் இனிப்புப் பெட்டிகளுடன் பரிசிலும் அப்பாவின் தனிச்செயலர் பல நிலைகளில் என்னையும் வழிநடத்தும் பொன்னேரி பிரதாப்புக்கும் இனிப்பும் பரிசில்களும் பெற்றோர்களின் ஒளிப்படம் முன்பு வழங்கி மகிழ்ந்தேன்...