POST: 2013-02-01T22:49:20+05:30

உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இன்று மாலை ஆய்வு மாணவர்கள் மத்தியில் தமிழ் வளர்ச்சி அரசு செயலாளர் தலைமையில் உரையாற்றினேன்.

POST: 2013-01-31T07:15:48+05:30

மலையேறுவது போல தமிழ் நிலையேற வேண்டிய சூழல் உள்ளது.பாதிப்படி ஏறினோம் என்பதால் துவக்கம் தொலைந்து தொடக்கம் மலர்ந்தது!விமானம் விழுந்து வானூர்தி வரம் பெறுகிறது. முனையங்கள், புறமுகப்பு,பதிவுக்கூடங்கள்,பாதுகாப்பு நலன் கருதி போன்ற சொற்கள் இந்திய வானூர்தி ஆணையத் த ...

POST: 2013-01-24T13:55:05+05:30

வேதாந்தம் என்பது அத்வைதக்கொள்கை.வேதம் என்று சொன்னால வெட்டப்பட்ட குழி என்று பொருள்.கை வைத்தால் நண்டுகளும்,நத்தைகளும் தான் கிடைக்கும். இந்த குப்பைக்கூளங்களை கொண்டு போய் அமெரிக்காவில் கொட்டி விட்டாரே.அவரால் அமெரிக்காவின் தூய்மை கெட்டுவிடும் என்று ஒரு மு ...

POST: 2013-01-24T13:15:42+05:30

தாழ்வு மனப்பான்மை என்பது தலைகனத்தைத் தரும் தமிழன் என்று சொல்லடா;தலைக்கனத்தோடு நில்லடா!என்று பலர் தவறாக படித்து விட்டார்கள் தீப்பெட்டி கேட்டதாம் என்மீது உராய்கிறாயே ஏன் நீ மட்டும் எரிந்து பொடியாகிவிடுகிறாய் என்று தீக்குச்சியிடம் சொன்னதாம் .தலைக்கனம் உட ...

POST: 2013-01-23T16:25:41+05:30

அடிக்கடி நண்பர்கள் சூழ அமர்ந்திருப்பார் என் தந்தை,அவருக்கு ஆயிரம் சிந்தனைகள் எந்த நாட்டைப்பிடிக்கலாம் என்பது போன்ற மாவீரன் அலெக்சாண்டரின் மனம். வரும் நண்பர்கள் எல்லாம் தளபதிகளாக நிற்பார்கள்.வருகிற ஒவ்வொருவரின் உடலிலும் தாங்க முடியாத தழும்புகள்,மனவலிகள ...

POST: 2013-01-18T16:37:33+05:30

ஒரு ஊரில் பத்துப்பேர் இருந்து ஐந்து பேர் நாம் ஏன் வேலை செய்ய வேண்டும்.மீதிப் பாதி பேர் வேலை செய்வார்கள் என்று நினைப்பார்கள் அந்தப் பாதி பேர் நாம் வேலை செய்வதால் எஞ்சிய பாதி பேர் தான் பலன் அடைவார்கள் என்று எண்ணி வேலை செய்வது போல் பாசாங்கு செய்யும் போது ...

POST: 2013-01-18T15:14:40+05:30

மகளிரின் மாட்சியைப்பற்றி பேசத்தொடங்கும் போதே மெல்லியள் என்று எண்ணாதீர்கள் சோர்விலாத பெண் தற்காத்து என்று திருவள்ளுவர் தொடங்குகிறார் இன்று தற்காப்பு என்று மகளிர்க்கு பேசுபவர்கள் இதை கருதிப்பார்க்க வேண்டும்

POST: 2013-01-18T15:05:59+05:30

தாய்வான் நாட்டில் தமிழ்ச்சங்கம் முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ளது. சீனக்கவிஞர் யூஷி 5.1.2013 தொடங்கி வைத்திருக்கிறார். தமிழுக்கு சீனம் சூட்டும் வைர மாலை என்று அழைக்கலாம். கவிஞர் யூஷி அறிஞர் அப்துல் கலாமின் நண்பர் என்ற பெருமையும் வாய்ந்தவர். மங்கோலியா ...

POST: 2013-01-12T18:12:15+05:30

வரலாற்று மாந்தர்களையும் அந்நாளைய வாழ்வியல் முறைகளையும் பொருத்தமுறப் புனைந்து வரலாற்றுக் கதைகளைத் திருத்தமுற எழுதுவதில் கதை வேந்தர் கல்கி அவர்களை நாடு எப்போதும் நன்றியோடு போற்றும். பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம் ஆகிய மூன்று நூல்க ...

POST: 2013-01-11T16:02:24+05:30

குறுந்தொகைத் தோன்றிய காலத்தில் வாங்கனுடைய மொழியாக இருந்து புறநானூற்றுக் காலத்தில் சிறந்த செல்வாக்கைத் தேடி தொல்காப்பியர் காலத்தில் திசைச்சொல்லுக்கு பின்வைத்து எண்ணப்பட்ட வடமொழி திருமுறை ஆசிரியர் காலத்தில் திசைச்சொல்லை பின்தள்ளி இரண்டாவது இடத்திற்கு வந்தது ...