குறுந்தொகைத் தோன்றிய காலத்தில் வாங்கனுடைய மொழியாக இருந்து புறநானூற்றுக் காலத்தில் சிறந்த செல்வாக்கைத் தேடி தொல்காப்பியர் காலத்தில் திசைச்சொல்லுக்கு பின்வைத்து எண்ணப்பட்ட வடமொழி திருமுறை ஆசிரியர் காலத்தில் திசைச்சொல்லை பின்தள்ளி இரண்டாவது இடத்திற்கு வந்தது.
தொல்காப்பியர் இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்ற வரிசையில் வடமொழிக்கு நான்காம் இடத்தையே கொடுத்தார்.
திருஞானசம்பந்தர் காலத்தில் “தென் சொல் விஞ்சமர் வடசொல் திசைச்சொல்“ என்று சொல்லும்படி திசைச் சொல்லைப் பின்னே தள்ளி வடசொல் முன்னே வந்தது.
செந்தமிழும் வடகலையும் தேசிகமும் என்று சேக்கிழார் வாக்கிலும் தேவார காலநிலையே பேசப்படுகிறது.
மாணிக்க வாசகர் காலத்தில் மட்டும் “இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்“ என்று இருமொழியாளரும் ஓரிடத்திலிருந்து பாடியிருக்கின்றனர்.
அப்பர் சம்பந்தர் காலத்திலோ வடமொழியும் செந்தமிழும் மறைகள் நான்கும் ஆனவன் என்று சொல்லிக்காட்டினர்.

Add a Comment