இந்தியத் தலைநகரிலுள்ள தில்லியில் மாபெரும் வளாகமாக கண்ணையும் எண்ணங்களையும் கவரும் வகையில் அக்ஷர்தம் என்ற வனப்பான பெரு மாளிகையினை 08.05.2024 புதன்கிழமை கண்டு மகிழ்ந்து வியந்த கவினார்ந்த கருவூலத்தை பெருநிதிச் செல்வத்தால் எழுப்பப்பட்டதை என் உள்ளத்து உணர்வின் நளினங்களையெல்லாம் வெண்தாழை மடலில் செம்பஞ்சுக் குழம்பால் குழைத்து எழுதுவதைப் போல முகநூலில் வரைவதை எண்ணி மகிழ்கிறேன். இந்திய நாட்டின் நீண்ட இதிகாச மரபினுடைய எண்ணற்ற அழகுகளைக் கொண்ட பெருந்திட்டத் திருக்கோயிலினை காணும் போது மயில் ஒன்று ...

