POST: 2021-07-30T10:03:01+05:30

அருளின் குரல் வரிகள் – குயில் பாட்டு ! – 19.

பெருமக்களே !

பாரதியாரின் பாடல்களை உருக்கமாகவும் துணிவாகவும் பல்வேறு இசைநிலைகளில் பாடிவருவதை நீங்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டு வருகின்றீர்கள்.

அருமை நண்பர் கலைமாமணி டாக்டர் சூர்ய பிரகாஷ் பாடும் இன்னிசைவெள்ளம் , குயில் பாட்டை புதிய உலகத்திற்கு நம்மை அழைத்துச் சென்றது.

குயில் பாட்டினுடைய தத்துவ அடுக்கங்களையும் அவர் எடுத்துச் சொல்கின்ற அந்தப் பாடலினுடைய நுட்பத்தையும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அவ்வப்போது நானும் சில தொடர்களாக அந்தப் பாடலுக்கு விளக்கம் சொல்வதற்கு மெருகேற்றுவதற்கு முயன்றேனே தவிர பாட்டா, உரையா என்று நீங்கள் எல்லோரும் வினவினால் குயில் பாட்டினுடைய சிறப்பும், கலைமாமணி டாக்டர் சூர்யபிரகாஷ் இசை அறிவால்தான் இந்த கலைமாமணியின் குயில் பாட்டினுடைய வெற்றித்தூணாக விளங்குகிறது .

எனக்கும் வாய்ப்புத் தந்த அருமை நண்பர் சூர்ய பிரகாஷ் அவர்களுக்கு நான் நன்றிக்கடன்பட்டுள்ளேன்.

அவருடன் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயின்றதனால் எனக்கு அந்த வாய்ப்பு.

வாய்ப்பை நல்கிய சூர்ய பிரகாஷின் இத்தனை இசைக் கோலங்களையும் செய்து காட்டுகின்ற நுண்ணாற்றலை அவருடைய குடும்பத்தினர் போற்றி வளர்க்கின்றனர்.

தன்னுடைய தங்கை துபாயிலிருந்து
இதற்கு வரைகலை செய்வதும் இது புலனத்தில் வெற்றி காண்பதும் அவர்களுடைய குடும்பத்தினுடைய பெருமையாகும் என்று சொல்லிக் குயில் பாட்டினுடைய பெருமையாக இந்த முறை என்ன சொல்லப்போகிறார், என்னப் பாடப்போகிறார் என்றால் நண்பர்களே

பெருமக்களே

வியப்படைவீர்கள்.

அந்தக் குயில் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பாரதியாரை கவிஞரை ஏமாற்றியதனால் கவிஞர் குயில் மீது கோபமுற்றார்.

சினம் கொண்டார்

ஏன் இது ! எத்தனை கோலங்கள் செய்கின்ற இந்தக் குயிலைக் கொன்றே விடலாமா என்று பாரதியார் கொந்தளித்த போது தன்னுடைய முன் கதையைச் சொல்லத் தொடங்கியது அந்தக் குயில் பேசுகிறது .

நமது கவிஞரின் மனதைக் கவர்ந்த குயில், ஒரு குரங்கோடும், மாட்டோடும் குலவுவதைக் கண்டு உள்ளம் துடிதுடிக்கக் கோபக்கனலில் கொன்று விடவும் துணிகின்றார்.

பின் நெஞ்சம் இளகிடவே, குயில் சொல்லும் கதையைக் கேட்கத் துணிகிறார்.

குயில் தன் கதையைத் தொடங்கியது.

என் இறைவனே !
என் செல்வமே !
என் உயிரே !
நான் சொல்வதைக் கொஞ்சம் பொறுமையாகக் கேளுங்கள் !

ஒரு முறை, பொதிய மலையருகில் உள்ள ஒரு பூஞ்சோலையில் நான் தனித்து இருக்கையில் ஒரு முனிவர் வந்தார்.

அவர் காலில் விழுந்து வணங்கினேன்;

அவரிடம் நான் கேட்டேன்” எனக்கு மட்டும் எவ்வாறு அனைவரும் பேசும் மொழி புரிகின்றதே !

மனிதர்கள் போன்ற சிந்தை எனக்கு எங்ஙனம் வாய்ந்தது ?

என வினவினேன்.

அந்தப் பெரியவர் கூறினார் –

குயிலே !

நீ முற்பிறவியில் சேர நாட்டின் தெற்குப் பகுதியில் வாழ்ந்து வந்த ஒரு வேடர் தலைவனின் மகளாகப் பிறந்தாய் !

நல்ல இள மங்கையாய், தமிழகத்தின் மூன்று பகுதிகளிலும் அழகில் உன்னை வெல்வார் யாரும் இல்லை எனும்படி வளர்ந்திருந்தாய் !

உன் மாமன் மகன் மாடன் என்பவன் உன்னையே திருமணம் செய்ய வேண்டுமென உன்னையே நாளும் எண்ணியிருந்தான்.

உனக்காக தினமும் மலைத்தேனையும் ,புது மலரையும் கொண்டுவந்து கொடுத்து மகிழ்ந்திருந்தான்.

அவன் உன்னையே எண்ணி உருகுவதையும் உடல் வருந்துவதையும் கண்டு மனமிரங்கி அவனையே மணந்து கொள்வதாக வாக்களித்தாய்!

அவனை ஒன்றும் நீ காதலிக்கவில்லை ;

அது பரிதாபத்திலிருந்து வந்த பாச மொழி மட்டும் தான்.

அதற்குள் மற்றொன்று நடந்துவிட்டது.

தேன்மலை என்ற இடத்தைச் சேர்ந்த மொட்டைப் புலியன் எனும் வேடர் தலைவன் தன் மூத்த மகன் நெட்டைக் குரங்கன் என்பவனுக்குத் திருமணம் செய்ய எண்ணி, உன்னைப் பெண் பார்க்க, உன் தந்தையை அணுகினான்;

அவனோ, பார்த்தாலே பயத்தை ஏற்படுத்தும் உருவமும் ,செயலும் உள்ளவன்;

உன் தந்தையிடம் அவன் தன் கருத்தைச் சொன்னவுடன், அவரும் மகிழ்ச்சியுடன் இசைவு சொல்லி உறுதியும் செய்து வருகிறார்.

அது கேட்டு உன் மாமன் மாடன், உன்னையே எண்ணி உள்ளுருகி வாழ்ந்து வந்த மாடன், திடுக்கிட்டான்;

மனம் புகைத்தான்;
விறுவிறுவென வந்தான்;

உன்னைப் பார்த்து, ”என்ன வஞ்சகச் செயல் இது” எனக் கோபத்தில் கொதித்தான்.

நீயும் அவனை ஆறுதல்படுத்த ”மாடனே!
கவலைப்படாதே !
கோபத்தைத் தவிர்’ என் தந்தை செய்த நெருக்கடியினால் இப்படிச் செய்து விட்டார் !

என்னைக் குரங்கினார் மணம்புரிந்து தன் காவலில் வைத்தாலும் எப்படியாவது மூன்று மாதங்களுக்குள் அவருடன் கோபம் கொண்டு அதன் விளைவாகச் சண்டையிட்டு, எப்படியாவது, தாலியையும் மீட்டுத் தங்களிடம் வந்து விடுவேன்.

இன்னும் ஏழெட்டு மாதங்களில் நீங்கள்தான் எனக்குக் கணவனாவீர்” என அவனை சமாதானப்படுத்துவதற்காகக் கூறியுள்ளாய்;

சொல்ல மறந்து விட்டேன்,

உன்னை முற்பிறவியில் மாதரசியான உன்னை சின்னக்குயிலி எனச் செல்லமாக உனை அழைப்பர் என்றும் கூறினார்.

உனக்கு மாடன் மேல் காதலும் இல்லை; ஒன்றும் இல்லை; சும்மா அவன் கோபம் தணிக்கவும், சினம் தவிர்க்கவும் மட்டுமே அவ்வாறு கூறி ஒருவாறு அவனை அனுப்பி வைத்தாய் !

சில நாட்கள் சென்றன.

பெண் குயிலி என்ன செய்தாள் ?

மீதியை அடுத்த நிகழ்வில் காண்போம்.

O Deva, rarest treasure !

O my soul,you departed,listen to foolish fowl,

in a grove one morning by the southern hill I state on a mango twig,lone pondering on my fate.

There came a sage.

At his feet I fell all meek.

He blessed me.

The noble sage that wise men seek I asked pray tell me,vedic sage,how though a low born bird I am born on earth I know unlike my kith and kin the tongues of all and human like consciousness of my soul possess ?

the rishi made reply O hear in a former birth grew the daughter dear of the dreaded hunter chief murugan the bold of the southern hill in the chera realm of gold,most beautiful in the tamil kingdoms three…most hunters of the woods of luxury, thy uncles son madam by name full struck with thy beauty yearned to win thee in wedlock.

He brought thee gold and honey fresh and flowers and pining sought to live as wedded lovers.

thou out of sympathy but not of love,gave word to take him as thy mate.

And now O maid of delicate waist,thy beauty’s name far spread.

A hunter chief of might and fame,pulian bold his name,of the honey hill side for kurangan tall,his son asked thee for bride.thy father gladly gave assent.

The date was fixed to celebrate with great eclat the happy wedding.

This thy cousin heard and burning with ire to thy lovely presence sped and vented his wrath in words of fire.

In grace thou madest reply,put out thy ire ablaze,

O Mada,rest assured though gained my will I am wed to Kurangan tall and kept on hill

I shall,each quarter scheming some device or other,causing trouble in his house return,leaving behind his Tali jewel and sometime after marry thee.

I tell no lies,believe me….

I,profusely thanks Mrs Themozhi from USA for the intro video presentation of mine which has been introduced in this episode…

These were words of grace but not of love.
Hello Friends, Kuyil Pattu Paduvom – Episode 19 uploaded today on YouTube channel ‘R. Suryaprakash’. This episode has been recorded solo, starting with Kavadi chindu and then featuring ragas Dwijavanthi, Namanarayani, Miyan-ki-malhar, Nayaki, Denuka, Mahathi, Neethimathi, Chakravaham, Vanaspathi and Kambhoji. The tala employed is Adi.

Check out this episode in the link

and the previous episodes in the playlist link

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *