”
Arul.2009/FB/#69070
கொம்புத்தேன் பேச்சால் குளிர்வித்த அமைச்சர்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில்
24.8.26 திங்கட்கிழமையன்று
மாலை 5:30 மணியளவில்
தமிழ் வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கையை மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி விளம்பரத் துறை அமைச்சர்
திரு ராஜ்மோகன் அவர்கள் தாக்கல் செய்தார்.
குற்றால அருவியின் குளிர்நடையா? கொம்புத்தேன் கலந்த இளமழையா? என்று அடுக்கடுக்கான அமுத மொழிகளைப் பொழிந்து மகிழ்வித்தார் மாண்புமிகு அமைச்சர்.
காலத்துக்கேற்ற கல்வி, புத்தகச் சுமையில்லாத போதனை, தமிழ்ப்பேச்சு எங்கள் உயிர்மூச்சு என்னும் வரலாற்றுச் சிறப்பு மிக்க சொற்போர்க்களம் , மாணவ மனங்களைப் பூரிக்க வைக்கும் கட்டாய உடற்கல்வி பற்றிய அழுத்தமான ஆணை- என்று, வானவில் போன்ற வண்ணமிகு சிந்தனைகள் பலவற்றையும் வாரிக் கொடுத்தோடு
கருத்தும் கவின்மையும் கைகோத்து நிற்க அவர் வடித்துக் கொடுத்த தமிழ் வளர்ச்சித் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பும் கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய் அவர் அறிவித்துள்ள எட்டுப் புதிய அறிவிப்புகளும் இணைக்கப்பட்டுள்ளது.

Add a Comment