”
Arul.2009/FB/#69049
ஆய்தல் அறிவுடையார்க் கண்ணதே!
தமிழ்நாடு அரசின் துணிநூல் ஆணையரகத்தில் ஒன்பது பிரிவுகளில்
இருபது இருக்கைகளிலுள்ள 194 கோப்புகள் மற்றும் 52 பதிவேடுகளைத் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் மற்றும் உதவியாளர் ஆய்வு செய்த ஆய்வறிக்கையின் பொருண்மைகளின் தொடர்பாக 06.08.2026 வியாழக்கிழமை பிற்பகல் 03.30 மணியளவில் நடைபெற்ற
கலந்தாய்வுக் கூட்டத்தில் துறையின் அலுவல் பெருமக்கள் முன்னிலையில்
இணையத்தின் இனிமை பொங்கும் தமிழ் வலைதளங்களை விவரித்தும்
வரைவுகளைப்பற்றியும் விளக்கமாக இயம்பினேன்.
விழிகளை விரித்தே காண்பீர்
வெற்றியின் நெற்றியில் தமிழே! என்று வலியுறுத்தி உரையாற்றினேன்.
துணிநூல் ஆணையரகத்தின் கூடுதல் இயக்குநர் திரு.ச.செந்தில்குமார், இணை இயக்குநர் திரு.வி.கி.ஆனந்தகுமார், துணை இயக்குநர் திருமதி ஆ.ஞா.சக்தி விஜயலட்சுமி,
தமிழ் வளர்ச்சித்துறையின் உதவி இயக்குநர் திருமதி ரா.சிவசங்கரி உதவியாளர் திரு. மா.கேசவராஜி ஆகியோர் உடன் இருந்தனர்.

Add a Comment